Nov 30, 2010

சோறு கிடைக்குமா?... நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா?

இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?

சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.


சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.

தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.

திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?

இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?

இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?

*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்


*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.


*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?

ஆண்டவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?

1 comment:

  1. நன்றி நண்பா..
    பகிர்ந்து கொண்டதுக்கு...

    ReplyDelete

Popular Posts