கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
லஞ்சம் வாங்காத அதிகாரிகளையே லஞ்சம் வாங்கவைத்த பத்திரிக்கையாளர் குறித்த பதிவு மாவட்ட ஆட்சியர் வரை பார்வையிடப்பட்டது குறித்து பெருமிதப்பட்டுக்கொண்டார்.
ஆனால் அடுத்து அவர் பொதுமக்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு நியாயமாகவே பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர், போக்குவரத்து உட்பட பல அரசு அலுவலகங்களுக்கு சிறு சிறு விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் வருகின்றனர். சாதாரன மக்கள் தாமாகவே முன்வந்து சிறிய தொகையை லஞ்சமாக கொடுக்கின்றனர். சில அதிகாரிகள் கமுக்கமாக வாங்கிக்கொண்டு கூடுதலாக கேட்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை.
ஆனால் லஞ்சம் வாங்காத அதிகாரியை பொதுமக்கள் நம்புவதில்லை. லஞ்சம் வாங்கினால் நிச்சயமாக காரியம் நடந்துவிடும் என மக்கள் நம்புகின்றனர். லஞ்சம் வாங்காவிட்டால் அவர்கள் சந்தேக பார்வையுடனேயே செல்கின்றனர். நியாயமான காரணங்களுக்காக ஒரு சில நாட்கள் கோப்பை ஒத்திவைத்தால் கூட அதிகாரியை நம்புவதில்லை, புலம்பி தீர்க்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
லஞ்சம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் முறையாக சரியான ஆவணங்களை கொண்டுவருவதில்லை.
99% மக்கள் தங்கள் காரியங்களை விரைவில் சாதித்துக்கொள்ள தானாக முன்வந்து லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் நடக்கும் பேரத்தில் தான் பிரச்சனையே வருகிறது.
லஞ்சம் வாங்காத அதிகாரியை 1% மக்கள் கூட நம்புவதில்லை, பாரட்டுவதில்லை. இது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
No comments:
Post a Comment