Nov 29, 2010

பெண்போகத்தில் குளிர்காயும் பத்திரிக்கைகள்

விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது.
சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது.

அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை.

அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது.

அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே.

அதே போல தான்.

நடிகைகளின் அந்தரங்களை வெளியிடுவதால் எந்த பொதுசனத்துக்கும் ஒரு பருக்கை சோறுகிடைக்கப்போவதில்லை. ஆனால் வெளியிடும் பத்திரிக்கை முதலாளி குறைந்தது பத்து வட்டல் சோறாவது திண்ணலாம்.

விசயகுமார் - வனிதா குடும்பத்தில் நடக்கும் சண்டை இந்தியாவில் வேறு எந்த குடும்பத்திலும் நடக்காத சண்டை அல்ல. அது பொதுநோக்கு சண்டையும் அல்ல. அப்படி இருக்க இந்த பத்திரிக்கைக்கு மட்டும் அதில் என்ன அலாதி பிரியம்.

தங்கள் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை என்று கூறும் மனசாட்சி உள்ளவர்கள் விசயகுமார் - வனிதா சண்டையை விமர்சித்து எழுதட்டும்.

பின்குறிப்பு: தன் வீட்டு சொத்து சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும். 

2 comments:

  1. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும். //

    அதே.
    :(

    ReplyDelete
  2. நண்பரே அவுங்க வீட்டுல உள்ள விஷயத்தை அவுங்களே ஒண்ணா கூடி பேசி முடிச்சுக்கணும்.
    அவுங்க குடும்ப விஷயத்தை மீடியாவுக்கு தெரிவுக்கும்போது அது அப்படித்தான் வரும். இரண்டாவது
    நம்ம மீடியாவுக்கு சின்ன தீகுச்சி இருந்த பத்தாது பெரிய தீ பிழம்பா வந்துரும்ல.

    ReplyDelete

Popular Posts