தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் இப்படி பல கட்டங்களை கட்சிகள் சந்திக்க வேண்டி உள்ளது.
முன்னதாக இன்னும் 2 மாதத்தில் தமிழக சட்டமேலவை தேர்தல் வேற இருக்கு. அதற்குள் கூட்டணியை முடிவுசெய்யவெண்டிய கட்டாயத்தில் கட்சிகள் உள்ளன.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரசு கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து விட்டன. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிசுட்டுகளுக்கு கூட்டணியில் இடம் இல்லாத நிலையில் இருதலைகொள்ளியாக தவித்து வருகின்றன.
காங்கிரசு போய்விட்டால் திமுகவிடம் இருக்கும் ஒரே கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான். கூட்டணி தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை செயலலிதாவும், கருணாநிதியும் உறுதியாக நம்புகின்றனர்.
திமுக கூட்டணியில் கம்யூனிசுட்டுகளை இழுக்கும் முயற்சியை கருணாநிதி தொடங்க அது எளிதிலேயே முடிந்தது.
காங்கிரசு போனால் அடுத்த நிமிடம் திமுக கூட்டணியில் இரு இடதுசாரிகட்சிகளும் இருக்கும் என்ற உறுதியை உயர்மட்ட தலைவர்களே கொடுத்து விட்டனர்.
அதே போல பாமகவும் திமுக பக்கம் சாய்கிறது.
அதிமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்பதை முன்னரே யூகித்துக்கொண்டனர். ஆனாலும் விசயகாந்த், காங்கிரசு, பாமக, கொமுக, இதரம் உட்பட கட்சிகளை இணைத்து மூன்றாம் அணி உருவாக்கும் முயற்சியை பாமக இன்னும் கைவிடவில்லை. இது நடக்காத பட்சத்தில் சேர்ந்த உதிரி கட்சிகளோடு திமுகவிடம் சரணடைவது என்பது என பாமக முடிவு செய்துள்ளது.
காலங்கள் செல்ல கோலங்களின் மாற்றம் வேகமாகவே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
No comments:
Post a Comment