Nov 17, 2010

சன் டையரக்ட் வாடிக்கையாளர்கள் கணிவான கவனத்திற்கு...

நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா?

உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி  எழுதியிருக்கிறதா?
இது சன் டையரக்டுடைய சொத்தாம்.

ஆமா உங்களுக்கு இலவசமாக தானே கொடுத்தாங்க, அப்புறம் எப்படி அது உங்க சொத்தாகும். 2000 ரூபாய் கொடுத்து இலவசத்தை வாங்கிவிட்டு இப்ப அதற்கு உரிமை கொண்டாட முடியுமா என்ன?

செல்போன் எண்ணை மாற்றாமல் செல்போன் சேவை( என்ன சேவையோ?) வழங்கும் நிறுவனங்களை மாற்றலாம் என்ற புதிய தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதே போல ரிசீவரை மாற்றாமல் விரும்பிய டி.டி.எச் சேவைக்கு மாறும் திட்டத்தை அமல்படுத்துதல் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டம் வந்தால் எந்த டி.டி.எச் ரிசீவர் வைத்திருந்தாலும் சுலபமாக நாம் விரும்பிய சேவைக்கு மாறிவிடலாம். புதிதாக ரிசீவர், உட்பட உபகரணங்கள் வாங்க தேவையில்லை.

ஆனால் சன் டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு 
மட்டும் ஊ.. ஊஊஊஊஊ....  (கவுண்டமணி செந்திலை நினைச்சுக்கங்க..)

 ஏனா அது இலவசமா கொடுத்த சொத்தாம்.

உடனே உங்க ரீசீவரை பாருங்கள் அது உங்க சொத்தா இல்லா அவங்க சொத்தானு தெரியும்.

1 comment:

  1. சன் டையரக்டின் உலகமாகா சேவையில் பூரித்துபோன கிராமத்து பெரியவர் நேரக செட்டப் பாக்சுடன்
    டீலர் கடைக்கு வந்தார்.

    இலவசமா வந்து மாற்றி தர முடியாது, 200 ரூபாய் கொடுத்தால் பிரைவெட் டெக்னீஷன் மாற்றி தருவார் என்றிருக்கின்றனர்.

    நீ ஆணியே புடுங்க வேண்டாம் என்று கோபத்தின் உச்சத்துக்கு போன பெரியவர் கடைக்கு முன்னால் வந்து செட்டப் பாக்சை ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.

    உடனே அவரை சூழ்த டீலர்கள். யாருடை சொத்துனு இதை இப்படி போட்டு உடைக்கிற பெருசு. உனக்கு இது இலவசமா கொடுத்த சன்டையரக்டினுடைய சொத்து. பிடிக்கலைனா இப்படி உடைக்க கூடாது. திருப்பி பத்திரமா தரனம். போலீசுல பிடிச்சு கொடுத்திடுவோம். சத்தம் போடாம வீடுபோயிசேரு என்றுள்ளனர்.

    1800 ரூபாய் கொடுத்து இலவசத்தை வாங்கிய பெரிசு வேலியில போறதை வேட்டிக்குள் விட்ட எனக்கு இதுவும் வேனும் இதுக்கு மேலயும் வேனும்னு உடைச்ச ரிசீவரை துண்டில் பத்திரமாக பொதிந்து எடுத்து வீடு போய் சேர்ந்தது.

    என்ன கொடுமையடா இது.

    ReplyDelete

Popular Posts