ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்செம்மொழி என்பதற்கு அர்த்தமே இல்லை.
வீர தீரம் பேசும் புலிகேசி தமிழர்கள் வேண்டுமானால் இந்த எழுத்துக்களை சமசுகிருதம் இல்லை, கிரந்தம், இது தமிழ் எழுத்துக்கள் தான் என்று வெரும் வாயை மென்றுகொண்டு இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளி பாடம் முதற்கொண்டு உலகம் தழுவிய மொழி ஆய்வு வல்லுனர்கள் வரை இந்த எழுத்துக்களை சமசுகிருத எழுத்துக்களாகவே சொல்லி வருகின்றனர்.
தமிழுக்கு என்று ஒரு இலக்கண நடை உள்ளது. தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய இலக்கணத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஆனால் இந்த எழுத்துக்களை எங்கே சேர்ப்பது.
காலத்தின் கட்டாயம் இந்த எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் என்றால் முறையாக தமிழரிஞர்கள் கூடி இலக்கணத்துக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தமிழ் அட்டவணையில் சேர்த்து விடுங்கள். அல்லது வேண்டாம் என்றால் அதற்கு மாற்றை யோசியுங்கள்.
அதை விட்டுவிட்டு வேணும் வேண்டாம் என்று குருட்டு கண்ணன் காரை ஓட்டிய கதையாக இருந்தால் வடிவேலு போல ஊர்போய் சேர முடியாது.
ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது வெட்டிவிடுங்கள்
ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ எழுத்துக்களுக்கு மாற்றாக தாராளமாக ஃ ஆயுத எழுத்தை பயன்படுத்தலாம். இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.
உங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
ஃ பயன்படுத்தி எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?
ஃசிடாலின் ஃசிபெயின் இப்படி ஒலிப்பதில் என்ன கடினம் இருக்கப்போகிறது ?
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
தமிழ் மீது மரியாதை வைத்துள்ள வலைப்பதிவர்களே தமிழ் அறிஞர்களே, வாசகர்களே உங்கள் ஒத்துழைப்பு தேவை. தமிழுக்காக கொஞ்சம் சிந்தியுங்கள், ஒன்றுசேர்ந்து போரடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே சூழ்நிலை கைதியானால் சாமான்ய மக்களின் நிலை என்ன? அரசியல் சூழ்நிலைகளுக்கு நீதிமன்றங்கள் பயப்படுமா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அர...
-
அமைதி தேடி ரசினிகாந்த் கோவையில் குடியேறப்போகிறார். இந்த செய்தியை படித்ததும் எங்கள் ஊர் சலூன் கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார். உங்களுக...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
காங்கிரசை தோற்கடிக்க உறுவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தந்தை பெரியார், அண்ணா அவர்கள் எந்த நோக்கத்துக்கான திமுகவை உருவாக்கினார்களோ அந்த நோக...

நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுவரை இந்த பதிவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
நான் கடந்த ஒரு மாதமாகத்தான் உங்களது பதிவுகளை பார்கிறேன்.