Nov 9, 2010

பத்திரிக்கையாளர் வலைபதிவர் இரண்டுபக்கமும் அடி

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம் எனற பதிவின் மூலம் கோவை பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாக நிறையவே வாங்கி கட்டிக்கொண்டேன். என்கவுன்டர் போலீசாரின் கோழைத்தனம் பதிவின் மூலம் வலைபதிவர்களிடம் அதைவிட இரட்டிப்பாக வாங்கி கட்டிக்கொண்டேன்.
 ஒன்று மட்டும் புரிந்தது.
உலகத்தோடு ஒத்துபோனல் உண்மையும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும்.
இல்லாவிட்டால் கோமாளி தான்.


ஆனாலும் இன்னும் எழுதுவேன்.

ஒவ்வொரு பொது மக்களும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.
ஒவ்வொரு வலைபதிவரும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.

5 comments:

  1. வணக்கம் உறவே

    உங்களின் பதிவினை எமது www.meenakam.com/topsites இலும் இணைக்கவும்.

    நன்றி

    மீனகம் குழுவினர்

    ReplyDelete
  2. ///ஒவ்வொரு பொது மக்களும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.
    ஒவ்வொரு வலைபதிவரும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.///


    சம்பத்தப்பட்டவர்கள் எல்லாம் அமைதியாக இருக்க நீங்கள் மட்டும் ஏன்? குற்றவாளிகளின் வீட்டில் இருந்தும் மறுப்பு வரவில்லை, குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்தும் மறுப்பு வரவில்லை. இதையல்லாம் மீறி உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கவும். பதிவு போட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்க வேண்டாம்

    ReplyDelete
  3. திரு. THOPPITHOPPI

    //எல்லாவற்றையும் எப்போதும் எழுதிவிடமுடியாது.
    சில நேரங்களில் முழுமையான செய்தியைவிட சமுதாயத்தின்
    நன்மையும், அமைதியையும் பத்திரிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    அதையே கோவை பத்திரிக்கையாளர்கள் செய்திருக்கிறார்கள்.//

    இது தான் கோவை பத்திரிக்கையாளர்களின் ஒட்டு மொத்த பதில்

    செய்தி முடிந்துவிடவில்லை...

    இப்போது யோசிக்க வேண்டாம். ஒரு நான்கு நாட்கள் கழித்தாவது யோசித்துபாருங்கள்

    மோகன்ராசுவை குற்றவாளி என்று யார் சொன்னது?

    பத்திரிக்கைகள் போலீசு கூறியதாக மலுப்பி விடும்.

    காவல்துறையை கேட்டால் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை, எங்களை சுட்டான் தற்காப்புக்காக சுட்டோம். மற்றபடி அவன் விசாரனை கைதிதான் என்றுவிடும்.

    இன்று நடந்த ஒரு சம்பவம் :

    காவல் நிலைய கட்டப்பஞ்சாத்தில் ஒரு அப்பாவி மிரட்டப்பட்டிருக்கிறான்

    போலிசு வேனில் ஏறுகிறாயா?

    சமுதாயம் இதற்கு என்ன பதில்சொல்ல காத்திருக்கிறது.

    தயவு செய்து உணர்ச்சிவசப்படாமல் யோசித்துபாருங்கள்...

    ReplyDelete
  4. நான் எழுதுவது

    2 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு பதறிபோய் காவல்நிலையம் கூட வராத குழந்தைகளின் பெற்றோருக்காகவோ,

    கணவனை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற செய்தி தெரிவிக்கப்படாத நிறைமாத கர்ப்பிணிக்காகவோ அல்ல.

    இனி என்கவுன்டர் என்றபெயரில் காவல்நிலைய கட்டப்பஞ்சாத்துகளில் மிரட்டப்படும் அப்பாவிகளுக்காக தான்.

    அரசியல், சமுதாயம், மதம், சாதி, பணம், குற்றப்பின்னனி இப்படி எதுவுமே இல்லாத ஒருவனை எளிமையாக என்கவுன்டர் செய்து விட்டீர்கள்.

    இந்த பின்னனிகள் உள்ள ஒருவனை என்கவுன்டர் செய்யும் தைரியம் இல்லாத போலீசாருக்கு நீங்கள் போடும் சல்யூட் கேவலமானது என்பதை உங்களுக்கு எப்படி புரியவைப்பது?

    ReplyDelete
  5. அட நீங்க மன்னிப்பு கேக்குறதால அந்த போலி என்கவுண்டர்(தினமலர் அடிவருடிகள் இதை பாராட்டினர்.அது ஒரு கூ...பேப்பர்.)தொடர்ந்து இதுபோல் தைரியமாக எழுதுங்கள்.

    ReplyDelete

Popular Posts