கோவையில் இரு குழந்தைகளை கடத்தி கொன்ற வழக்கில், போலீசு விசாரனையின் போது மோகனகிருசுணன் என்ற முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டான்.
இந்த என்கவுன்டரை ஆய்வாளர் அண்ணாதுரையின் கீழ் 2 துணை ஆய்வாளர்கள் படை செய்தது.
விசாரனை கைதி போலீசு வேனில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்ககளை பெரும் அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது.
இதற்கிடையே 2ம் விசாரனைகைதியான மனோகரனை நேற்று நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
அப்போது ஆய்வாளர் கனகசபாபதி நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்த உறுதிமொழி அளித்தார்.
ஆய்வாளர் அண்ணாதுரையால் முக்கிய விசாரனை கைதி மோகனகிருசுணன் என்கவுன்டர் செய்யப்பட்ட விபரங்களை நீதிபதியிடம் கூறினார்.
நீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன்ற காவலில் இருந்து புலன் விசாரணைக்காக போலீசு காவலில் எடுத்து சென்ற 1 வது எதிரியிடம் விசாரணை நடத்த ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தாரா?’’ என்று கேட்டார்.
இதற்கு ‘‘அனுமதி பெறவில்லை’’ என ஆய்வாள் கனகசபாபதி பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து வரும் 25 தேதிவரை மனோகரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலேயே அண்ணாதுரை மோகனகிருசுணனை விசாரணைக்கு அழைத்து சென்றதும் சுட்டு கொன்றதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்த என்கவுன்டர் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
//விசாரனை கைதி போலீசு வேனில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்ககளை பெரும் அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது.//
ReplyDeleteவிஷயங்களை மாற்றி திணிக்காதீர்கள் :)
பொதுமக்ககளை பெரும் மகிழ்ச்சி அடையவைத்திருக்கிறது
நீதி காவலர்களே !!
ReplyDeleteபோலீஸ் தற்காப்பிற்காக அல்லாமல் வேண்டும் என்றே சுட்டு கொன்று இருந்தால் அது ஏமாற்று வேலை...
ஏராளமான இளம் சிறார்கள் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களே, அந்த சிறுவர்களையெல்லாம் வேண்டும் பொழுது அனைத்து விதமான இச்சைகளுக்கும் பயன்படுத்தி கொள்கிறார்களே அந்த அரசியல் தாதாகளுக்கெள்ளாம் என்கவுண்டர் கிடையாதா? பணக்கார குழந்தைகளுத்தான் உங்க உடனடி நீதியா??
பின்புலம் இல்லாத மோகன்ராஜை கொல்லும் நீங்கள் இதே தவறை பல முறை செய்யும் பவர்புல் குற்றவாளிகளை என்ன செய்தீர்?? என்கவுண்டர் செய்ய வேண்டாம். ஆனால் குறைந்தபட்சம் சட்ட ரீதியிலான தண்டனையாவது வாங்கி தரலாமே.... உங்களால் முடியாது
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே நீங்கள் ஏதோ ஒன்றை சொல்ல, புரியவைக்க முயற்ச்சித்து வருவது எனக்கு புரிகிறது. நீங்கள் சொல்வதில் நீதி இருந்தால் அது வெளி வரும்போது உங்களை நிச்சயம் ஒருநாள் பாராட்டுவார்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
திரு.பரிதி நிலவன்
ReplyDelete// விஷயங்களை மாற்றி திணிக்காதீர்கள் :)
பொதுமக்ககளை பெரும் மகிழ்ச்சி அடையவைத்திருக்கிறது //
விடயங்கள் மாற்றி திணிக்கப்பட்டதால் தான் இந்த என்கவுன்டர் உங்களை போன்றவர்களை மகிழ்சியடைய வைத்திருக்கிறது.
விடயம் முடிந்துவிடவில்லை. இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாள்?
திரு. பலூன்காரன்
ReplyDelete// இதே தவறை பல முறை செய்யும் பவர்புல் குற்றவாளிகளை என்ன செய்தீர்?? என்கவுண்டர் செய்ய வேண்டாம். ஆனால் குறைந்தபட்சம் சட்ட ரீதியிலான தண்டனையாவது வாங்கி தரலாமே....//
அதே ஆதங்கம் தான்.
என்ன செய்ய ரவுடிகள் தேவை என்று விளம்பரம்படுத்தும் அரசியல் கட்சிகள் அல்லவா நம் நாட்டில் உள்ளது. நன்றி.
திரு.THOPPITHOPPI
ReplyDeleteஎன் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
இதே நிலை தற்போது பொதுமக்கள் மனதிலும் உதித்துள்ளது வரவேற்கதக்கது.
// விஷயங்களை மாற்றி திணிக்காதீர்கள் :)
ReplyDeleteபொதுமக்ககளை பெரும் மகிழ்ச்சி அடையவைத்திருக்கிறது //
//விடயங்கள் மாற்றி திணிக்கப்பட்டதால் தான் இந்த என்கவுன்டர் உங்களை போன்றவர்களை மகிழ்சியடைய வைத்திருக்கிறது.
விடயம் முடிந்துவிடவில்லை. இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாள்? //
தமிழ் மலர்,
ஒரு பத்திரிகையாளர் ’நடந்ததை நடந்தபடியும் உள்ளது உள்ளபடியும்’ வெளியிட்டுத்தான் உங்கள் கருத்தை சொல்ல வேண்டும்.
கோவை மக்களில் பெரும்பான்மையோர் இந்த என்கவுண்டரால் மகிழ்ச்சி அடையவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?