வாடகை வேனில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் காணாமல் போனல் மனம் பதரும் பதட்டம் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அதே குழந்தைகள் சடலமாக தண்ணீரில் மிதக்கும் கொடுமையை எப்படி சொல்வது?
பணத்துக்காக மனிதர்களை கடத்திய பயங்கரவாதிகள், பெரும் கொள்ளையர்கள் கூட கொலைசெய்வது அரிது. ஆனால் இந்த இரு பிஞ்சுகளை கொலை செய்ய எப்படி மனம் வந்தது?
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள துணிக்கடை அதிபரின் 12, 7 வயதே ஆன இரு குழந்தைகளையும் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மக்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
அம்மா, அப்பா, ஆசிரியர் இவர்களுக்கு அடுத்த படியாக குழந்தைகள் அதிக உரிமை எடுத்துக்கொள்வது டிரைவர் மாமா. எந்த கவலையையும் தயங்காமல் சொல்லக்கூடிய ஒரே வடிகால் டிரைவர் மாமா. அத்தனை டிரைவர் மாமாக்களும் தன் குழந்தைகளை போலவே வேனில், ஆட்டோவில், காரில் வரும் பிற குழந்தைகளையும் பாவிக்கின்றனர்.
ஆனால் அப்படிப்பட்ட டிரைவர் மாமாக்களில் எப்படி உருவானார்கள் இந்த கொடூரர்கள்?
குந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் தொழில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
சில கொள்ளையர்களுக்கு பணம் கிடைக்கிறது. சிலருக்கு சிறை கிடைக்கிறது. சிலர் மீட்கப்படுகின்றனர். சிலர் கொல்லப்படுகின்றனர். காவல்துறை வழக்கம்போல தன் கடமையை செய்கிறது.
ஆனால் இதற்கு முடிவு?
காவல் துறை, சட்டம் இவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் காவல்துறை, சட்டம், தண்டனை இவற்றின் மீது கொஞ்சம் கூட குற்றவாளிகளுக்கு பயம் வரவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
கொலை செய்தால், எளிமையாக தப்பித்து விடலாம், போலீஸ் கண்டுபிடிக்காது, அப்படியே கண்டுபிடித்தாலும் ஜாமீன் கிடைக்கும், ஜாமீன் கிடைக்கா விட்டாலும் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் வழக்கை இழுத்தடிக்கலாம். டேபிள் டாப்பிள் உக்காத்திருக்கும் நீதிபதியை பணத்துக்காக பேசும் வக்கீல் பார்த்துக்கொள்வார். அதுவரை சிறையில் சொகுசு வாழ்க்கை. பின்னர் கருணை மனு அப்படி இப்படி 5 வருடம் ஓடிவிடும். அதற்கு அப்புறம் 50 வயசுககு மேல் இருந்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன?
ரவுடிகள் தேவை என்று விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளும், டேபிள் டாப்பில் உட்காத்திருக்கம் நீதிபதிளும் இருக்கும் வரை யாரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
இப்போது மனைவி குழந்தைகளோடு உயிரோடு இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த நிமிடத்தை பற்றி யோசிக்காதீர்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான். உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம்...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
-
இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை...
-
பத்திரிக்கையாளர்களின் ஒட்டு மொத்த குடும்பம் மீது நடிகைகள் அவதூறாக பேசிவிட்டார்கள், இதனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என பத்திரிக்கையாளர்க...
-
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஊடங்கள் நினைத்ததை சாதித்து விட்டன. தமிழர் மலையாளி பிரச்சனையை கிளப்பி கொஞ்சம் காசுபார்த்து விட்டன. அதற்கு சால்...
-
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கான எளிமையான தீர்வுகளை கோவை பத்திரிக்கையாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தோம். கோவை பத்திரிக்கையாளர் மன...
-
அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
மிகவும் கேவலத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன். சில தமிழக தமிழர்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக போனது தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும் என்பத...
No comments:
Post a Comment