கோவை மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கொந்தளித்தனர். குற்றவாளியை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கோசமிட்டனர்.
ஆனால் கைதுசெய்யப்பட்டவன் உண்மை குற்றவாளியா?
யாரும் யோசிக்கவில்லை.
பணத்துக்காக குழந்தைகளை கடத்தியவன் ஏன் பணம்கேட்டு ஒரு போன் கூட செய்யவில்லை?
சாணிப்பவுடரை கொடுத்து தான் குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க வேண்டுமா?
சாப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டு பையை கோயில் வேல்கம்பில் ஏன் மாட்டிவிடவேண்டும்?
பாலியல் பலாத்காரம் என்பதை பிரேதபரிசோதனைக்கு முன்பே உறுதிபடுத்தியது ஏன்?
இப்படி பல சந்தேகங்களுக்கு இடையில்
கோவை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை குளறுபடி ஒன்று நடந்தது ஏன்?
அடையாள அணிவகுப்புக்கு முன்பே பாட்டிக்கு போட்டோ காண்பிக்கப்பட்டது ஏன்?
பொதுமக்கள் முன்னிலையில் முகத்தை காண்பித்து ஆக்ரோசத்தை எழுப்பியது.
இது எல்லாம் எதற்காக?
போலீசார் விசாரனை பாதையில் என்னதான் நடக்கிறது?
இப்படி எல்லாம் யோசிப்பதற்குள்
இன்று அதிகாலை விசாரனைக்காக அழைத்து சென்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
ஒரு விசாரனை கைதியை சுட்டுக்கொல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
பொது மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்
போலீசாரால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட பலர் நிரபராதிகளாகியிருக்கிறார்கள்.
வேனில் 10க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க ஆய்வாளரின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு தப்பிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றவனா மோகன்ராஜ்?
பொது மக்களே தயவு செய்து உணர்ச்சிவசப்படாதீர்கள்
போலீசார் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சுட்டுவிட்டு தப்பித்து ஓட முயன்ற விசாரணை கைதியை என்கவுன்டரில் சுட்டு தள்ள இது ஓன்றும் தமிழ்சினிமா அல்ல.
இந்த சம்பவத்தின் பின்னனி என்ன?
உண்மை குற்றவாளி யார்?
நான் நிச்சயமாக சொல்வேன்
இந்த என்கவுன்டர் போலீசாரின் தரம்கெட்ட கோழைத்தனம் தான்.
மற்றுமொரு அடிமுட்டாள் தனம் நடத்தப்பட்டுள்ளது தமிழக காவல் துறையால் பல என்கவுண்டர்களில் உண்மை குற்றவாளிகள் தப்ப வைக்கப்படுகிறார்கள் என்பதை காவல் துறை உறுதி செய்து இருக்கிறது என்பது தான் இந்த என் கவுண்டரின் மூலம் தெரிகிறது.
ReplyDeleteஏதோ பதிவு போடனுமேனு எதிர்மறைய பதிவு போடாதே. உலகத்துல பல லட்சம் குற்றவாளிகள் சுத்துறாங்க அவுங்கள எல்லாம் புடிச்சி கோர்ட் முன்னாடி நிக்கவெச்சா கசாப் மாதிரி தான் அரசு சாப்பாட்டில் உடம்பை வளர்ப்பான் . இப்படி என்கவுண்டர் பண்ணுவது மிக சரி. நீங்கள் சொல்வதை போல் உண்மையான குற்றவாளி மாட்டாமல் இருக்கலாம்.ஆனால் இந்த என்கவுண்டர் இனி தப்பு செய்பவனுக்கு ஒரு பயத்தை உருவாக்குவது உறுதி . இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பொலிசாருக்கு உறுதுணையாக இருப்போம். வேறு ஒரு உண்மையான குற்றவாளி இருந்தால் அந்த குழந்தைகளின் பெற்றோர் வழக்கு தொடருவார்கள் வசதி படைத்தவர்கல்தானே. அது வரை உங்களைப்போல் ஆட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நாட்டுக்கு நல்லதே
ReplyDeleteதிரு THOPPITHOPPI
ReplyDeleteநான் கோவையில் நிருபராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
இந்த கொலை வழக்கின் ஒவ்வொரு அங்குலத்தையும் அருகில் இருந்து பார்த்து வருகிறேன்.
போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது.
இந்த வலைதளத்தில் எழுதிய இதே கருத்தை என்னால் நான் பணிபுரியும் பிரபல பத்திரிக்கையில் எழுதமுடியவில்லை.
மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்றால் இனி எந்த விசாரனை கைதிக்கும் உத்திரவாதமில்லை. அதே நேரத்தில் உண்மை குற்றவாளிகளுக்கு இது மிகவும் சவுகரியமாகிவிடும்.
இந்த என்கவுன்டர் செய்த அண்ணாதுரை யார்? எங்கிருந்து வந்தார்? எதற்காக வந்தார்? இந்த கொலை வழக்கின் பின்னனியில் யார் யார் உள்ளனர்.
இதெல்லாம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வரும்போது உங்களை போன்றவர்கள் மீண்டும் பல்டி அடித்து போலீசாரை காரித்துப்புவீர்கள்
தமிழன் உணர்ச்சிவசப்பட்டே உண்மையை மூடி மறைத்து விடுகிறான்.
வேறு என்ன சொல்ல?
என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. நாந்தான் சொன்னனே இந்த குற்றத்துக்குபின் யார் இருந்தாலும் பரவாயில்லை இந்த என்கவுண்டர் மூலம் ஒரு பயம் வந்தால் போதும் என்று. நீங்கள் பத்திரிகை நிருபர் என்பதால் உண்மைவேளிவரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் அதனால் என்ன பயன். கசாப், அவன்தான் அப்பாவி மக்களை கொண்டான் என்று புகைப்படம் வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது ஆனால் அவனே அரசு செலவில் ராஜ வாழ்க்கை வாழ்கிறான். அப்படி இருக்கும்போது நீங்கள் சொல்வது போல் போலிஸ் ஆதரவு உள்ள குற்றவாளி எப்படி தண்டிக்கபடுவான்(ஒருவேளை). இன்று தொலைக்காட்ச்சியில் வீட்டில் புகுந்து திருட்டு, குழந்தைகள் கடத்தல் என்று படிக்கும்போது கதி கலங்குது நாளை நமக்கு இதுபோல் ஏதாவது நடந்து விடுமோ என்று. இந்த என்கவுண்டர் எங்களை போன்ற மக்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம்தான். நொய்டாவில் பலகுழந்தைகளை கற்பழித்து கொன்றது நாட்டுக்கே தெரியும் நம்மால் அவனை என்ன செய்யமுடிந்தது . உங்களை போன்ற நிருபர்களுக்கு இது நியூஸ் ஆனால் எங்களை போன்ற மக்களுக்கு ஆறுதல் அவ்வளவே.
ReplyDeleteதிரு THOPPITHOPPI
ReplyDeleteயாருக்கு பயம் வரும்?
இந்த வழக்கின் பின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு இருக்கிறது.
இந்த பணக்கார விளையாட்டுக்கு
அப்பாவி குழந்தைகள் பலியானது தான் வேதனை
அதே நேரத்தில் இந்த என்கவுன்டர் எந்தவிதத்திலும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகது.
மாறாக நொங்கை தின்னவன் ஓடிவிட்டான். அதை நோன்டி தின்னவன் மாட்டிகிட்டான் என்பது தான் வேடிக்கை.
நன்றி.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ReplyDeleteஅதே நேரத்தில் “என்கவுண்டர்“ என்பதை சட்டப்படியான ஒரு நடவடிக்கை என்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசும் ஒருசில பொறுப்பற்ற ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு அதில் வெற்றியும் அடைந்து விடுகின்றன.
ஒவ்வொரு என்கவுண்டரும் சட்டப்படி கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற என்கவுண்டர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது சட்டத்தின் காவலர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஒவ்வொரு என்கவுண்டரின் போதும் ஓராயிரம் உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது என்பதே உண்மையிலும் உண்மை.
என்கவுண்டரை ஆதரித்து பேசுபவர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தால் அந்த வலி புரியும்.
எதற்காக சிறையில் இருக்கிறோம் என்றே தெரியாமல் வாழ்க்கையை தொலைத்த “சாதாரண குடிமக்கள்“ இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அறியாத “சிறந்த குடிக்கமக்கள்” இந்த நாட்டில் அதிகம்.
தமிழ் மலர் பணி தொடர வாழ்த்துகள்...
இவர்கள் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதில் மேலும் இரு ஓட்டுனர்கள் சம்பந்தபட்டிருப்பதாக அன்று காலையில் தான் கூறி இருக்கிறார்(ன்). பணம் சம்பந்தப்பட்ட விடயம் அதனால் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகோவை: இவ்வளவு சீக்கிரம், கோவை போலீஸார் எங்களது வேதனைக்கு தீர்வு காண்பார்கள் என நினைக்கவில்லை. கமிஷனர் சைலேந்திர பாபு மூலமாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. நரகாசுரனான மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்ட இன்றுதான் எங்களுக்குத் தீபாவளி என்று கோவை சிறார்கள் முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
ReplyDeleteகோவை சிறார்களை கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை கோவை போலீஸார் இன்று அதிகாலையில் என்கவுன்டர் மூலம் வீழ்த்தினர். இதை கோவை சிறார்களின் பெற்றோரான ரஞ்சித் ஜெயின் தம்பதி வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின், ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும் என்று தெரிவித்தனர்.
????????????????????????????
ஐயா வணக்கம் ,
ReplyDeleteதிரு தொப்பி கூறிய அனைத்து கருத்துகளையும் வழிமொழிகிறேன் .கொலைகாரன் மோகன்ராஜின் மனைவியே அவனை காமுகன் ,அயோக்கியன் என்று கூறி உள்ளது உங்களுக்கு தெரியுமே .
http://kovaisakthi.blogspot.com/2010/11/blog-post_08.html
நட்புடன்,
கோவை சக்தி
திரு. sakthi
ReplyDeleteநான் மோகன்ராசுவை குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ சொல்லவில்லை.
ஆனால் மோகன்ராசு குற்றவாளி என்று யார் சொன்னது?
மோகன்ராசுவா?
போலீஸ் கமிசனர் சைலேந்திரபாபுவா?
குழந்தையின் பெற்றோரா?
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விவாதிப்பதற்குள் கொன்று மூடி மறைத்துவிட அப்படி என்ன அவசரம்?
இதற்கு மோகன்ராசு கிடைத்ததுமே சுட்டு கொன்றிருக்கலாமே?
எதற்காக இந்த ஒரு வார நாடகம்.
நாம் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டடு உடனடி முடிவு எடுப்பதால் தான் பல உண்மைகள் இன்னும் வெளியே வருவதில்லை.
குழந்தைகளை கொன்ற குற்றவாளியை பிடித்து என்கவுன்டரில் சுட்டு தண்டித்தாகிவிட்டது. இனி அடுத்த வேலையை பாருங்கள்.
அவ்வளவு தானா?
உண்மை குற்றவாளி இவன் இல்லை என்பத்ற்கு என்ன ஆதாரம் இறுக்கிறது??? ஒரு அப்பாவி என் று கூரும் உங்களுக்கு அவன் அப்பாவிதான் என்பது எப்படி தெரியும்??? அவன் விசாரனை கைதி அவன் நிரபராதியாக இருப்பான் என்பது சந்தேகமா இருக்கலாம் ஆனால் அவன் குற்றவாளி என் று காவல் துறையால் கைது செய்ய பட்டவன் அது மட்டும் அல்லாமல் அவன் குற்றவாளியா இல்லையா என்பதை ஆறாய காவல்துறை அவனை விசாரனைக் கைதியாய் கொண்டு போகவில்லை...குற்றத்தின் பின்னனி குறித்து ஆறாயவே அவன் காவலில் எடுக்கப்பட்டான். ஆதலால் அவன் குற்றவாளி என்பது தெளிவு அது மட்டும் அல்லாமல் இன்னும் இருவர் காவல்துறை கைவசமே உள்ளனர் அவர்களை வைத்து உங்களின் சட்டம் தன் கடமையை செய்யும் என் ற நாடகம் அரங்கேரட்டும்...காவல் துறை தப்பிக்கவோ இல்லை தவறவோ விடவில்லை அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கவேண்டுமோ அதுவே கொடுக்கப்பட்டிருக்கிறது... நீங்கள் அதில் இன்னுமும் அது தவறிவிட்டது இது தவறிவிட்டது என வாதாடுவதை விட ஒரு வழக்கை காவல் துறையின்மேல் பதிவு செய்யலாமே நீஙகள் விரும்பும் நீதி கிடைக்கும் என் ற நம்பிக்கை இன்னும் இருப்பின்...இது கவனிக்கப்படவேண்டிய விசயம் வாதாட படவேண்டிய விசயம் அல்ல... தனி மனிதனுக்கு உரிமை இருக்கிறது யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடர... செய்து பாருங்கள் உங்களுக்கு நீதி கண்டிப்பாக மறுக்கப் பட போவதில்லை...காலம் தாழ்தி வரும் பணமும் நீதியும் உபயேகப்பட போவதில்லை...இந்த விசயத்தில் காவல்துறை செய்தது தவறோ சரியோ ஆனால் நடந்தது ஒரு நல்லது...
ReplyDeleteWe convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!
ReplyDeleteOn behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.
Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.
So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)
So, "ore kallil irandu maangaa"- proverb.
இது போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கியே தான் குற்றங்கள் பெருத்துவிட்டது தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். நாம் பாதிக்கப்பட்டால்தான் அதன் வலி நமக்கு தெரியும். அவனே குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு அவனை போட்டதில் தவறில்லை இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை!குற்றம் செய்யாத அப்பாவிகள் பலர் சிறையில் வாடுகிறார்களே அவர்களுக்கு குரல் கொடுங்கள். எப்படி இருந்தாலும் வழ்க்கு முடியவில்லை இன்னும் ஒருவன் போலிஸ் கஸ்டடியில்தான் இருக்கிறான் அதன் மூலம் பல விவரங்கள் வெளிவரும் என் எதிர்பார்ப்போம்....
ReplyDeleteதிரு. Sai Gokula Krishna
ReplyDeleteசரியாக புரிந்து கருத்தை சொல்லியுள்ளீர்கள்
I agree with Sai Gokula Krishna
ReplyDeletetamilmalar mental mental. so be carefull
ReplyDeleteமறுப்பு சொல்வோர்க்கு ஒரு விசியம்!.. அம்பை தண்டித்தால் மட்டும் போதாது ! எய்தவணை தண்டித்தால் தான் முழு தொல்லை தீரும் ! அதை தான் நிருபர் கூறுகிறார் ! இல்லை எனில் இது தொடரும்
ReplyDeleteஇந்த என்கவுன்டர் மிக அப்பட்டமாக கூச்ச நாச்சமின்றி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதற்கு காவல் துறை? மக்களிடமே துப்பாக்கியை கொடுத்தால் அவர்களே இந்த வேலையை அழகாக செய்து முடிப்பார்கள். பாதிக்கப்பட்டவர் செய்தால் ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலை. காவல் துறை செய்தால் திட்டமிட்ட கொலை தண்டனை இதற்குத்தான் அதிகம், இப்பொழுது அதை செய்தவர் டி.சி ஆகிவிடுவார். நொச்சிக்குப்பம் வீரமணியை சுட்டு இப்படித்தான் ஆகிவிட்டார். (...துரை) அதைத்தவிர எந்த பொதுமக்கள் பாதுகாப்பையும் செய்யவில்லை. குற்றம் நடப்பதற்கு முன் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதுதான் இவரை போன்றவர்களின் சாமர்த்தியம். (காவல் துறை முழுக்க குற்றம் சாட்டவில்லை...இவர்களை போன்றவர்கள் தான் சாபக்கேடு...உங்களது இதயத்தில் இருப்பது களிமண்ணா? என்று மறைந்த நீதிபதி அசோக்குமார் கேட்டாரே....)
ReplyDeleteதொழிலதிபரை திருப்தி படுத்துவதற்காகவே இந்த என்கவுன்டர். சென்னையில் மாணவன் காப்பற்றப்பட்டதால் எழுந்த ஆதரவு அலையின் தாக்கமே இந்த படுகொலை. அதிகாரிகளின் கௌரவத்திற்காக செய்யப்பட்ட கொலை.
நொய்டாவில் ஏழைப்பெண்கள் மானபங்கம் படுத்தப்பட்டு கொன்றதற்கு என்ன என்கவுன்டரா நடந்தது. அவர்களுக்கு யார் காசுதரப்போகிறார்கள். அதில் கூட பணக்கார குற்றவாளி தப்பிவிட்டார்...மாட்டிக்கொண்டது ஏழை வேலைக்கார குற்றவாளி சுரேந்திர சிங் தான்....இது தான் இங்கேயும் எதிரொளிக்கிறது.
சீருடை அணிந்த கொலைகாரர்கள் செய்த இந்த கொலைப்பணியை எந்த நடுநிலையாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமானால் முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடமே கேட்டுக்கொள்ளட்டும். மரணதண்டனைக் கைதியின் கருணைமனுவையே ஆட்சியாளர்களின் வற்புறுத்தலையும் மீறி ஏற்றுக்கொண்டவராயிற்றே. மன்னிப்பு அளித்தவராயிற்றே.
சைலேந்திரபாபு அந்த சூழ்நிலையில் வளர்ந்திருந்தால் அவரும் இதைத்தான் செய்திருப்பார். ஏன் இதைவிட அதிகமாகவும் செய்திருப்பார். இதையெல்லாம் அலச மனமில்லாதவர்கள் எல்லாம் என்ன? ஐ பி எஸ் ?
காவல் துறையே சட்டத்தை கையிலெடுத்து கொண்டு விட்டது? இது எங்கு போய் முடியுமோ? இதை பொது நல வழக்காக மாற்றி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது இன்னும் பல நிரபராதிகளை குறிவைக்கும். இவர்கள் அட்டாகசம் தாள முடியாது. நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்குத் தொடரலாம். நீதித்துறையை அவமதிக்கும் செயலே ஆகும். இந்த கொலைச்செயல். பொதுமக்கள் அந்த நபர் (குற்றவாளி) எப்படி இறந்திருந்தாலும் ஆதரித்து இருப்பார்கள். அவர்களுக்கு குற்றம் குற்றவாளி இந்த இரண்டு மட்டுமே.
நீதிமன்றத்தில் இருந்து முழுமையாக ஒப்படைக்கிறேன் என்றே காவல்துறையினர் குற்றவாளியை கஸ்ட்டியில் எடுக்கின்றனர். அப்படியிருக்க இப்படி அப்பட்டமான நாடகம் நடத்தினால் எப்படி? யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா? நீங்கள் சொல்வது போல் இவர்களுக்கே உரிய கோழைத்தனமா?
இந்த என்கவுன்டர் மிக அப்பட்டமாக கூச்ச நாச்சமின்றி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதற்கு காவல் துறை? மக்களிடமே துப்பாக்கியை கொடுத்தால் அவர்களே இந்த வேலையை அழகாக செய்து முடிப்பார்கள். பாதிக்கப்பட்டவர் செய்தால் ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலை. காவல் துறை செய்தால் திட்டமிட்ட கொலை தண்டனை இதற்குத்தான் அதிகம், இப்பொழுது அதை செய்தவர் டி.சி ஆகிவிடுவார். நொச்சிக்குப்பம் வீரமணியை சுட்டு இப்படித்தான் ஆகிவிட்டார். (...துரை) அதைத்தவிர எந்த பொதுமக்கள் பாதுகாப்பையும் செய்யவில்லை. குற்றம் நடப்பதற்கு முன் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதுதான் இவரை போன்றவர்களின் சாமர்த்தியம். (காவல் துறை முழுக்க குற்றம் சாட்டவில்லை...இவர்களை போன்றவர்கள் தான் சாபக்கேடு...உங்களது இதயத்தில் இருப்பது களிமண்ணா? என்று மறைந்த நீதிபதி அசோக்குமார் கேட்டாரே....)
ReplyDelete............1
.........1 தொடர்ச்சி
ReplyDeleteதொழிலதிபரை திருப்தி படுத்துவதற்காகவே இந்த என்கவுன்டர். சென்னையில் மாணவன் காப்பற்றப்பட்டதால் எழுந்த ஆதரவு அலையின் தாக்கமே இந்த படுகொலை. அதிகாரிகளின் கௌரவத்திற்காக செய்யப்பட்ட கொலை.
நொய்டாவில் ஏழைப்பெண்கள் மானபங்கம் படுத்தப்பட்டு கொன்றதற்கு என்ன என்கவுன்டரா நடந்தது. அவர்களுக்கு யார் காசுதரப்போகிறார்கள். அதில் கூட பணக்கார குற்றவாளி தப்பிவிட்டார்...மாட்டிக்கொண்டது ஏழை வேலைக்கார குற்றவாளி சுரேந்திர சிங் தான்....இது தான் இங்கேயும் எதிரொளிக்கிறது.
சீருடை அணிந்த கொலைகாரர்கள் செய்த இந்த கொலைப்பணியை எந்த நடுநிலையாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமானால் முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடமே கேட்டுக்கொள்ளட்டும். மரணதண்டனைக் கைதியின் கருணைமனுவையே ஆட்சியாளர்களின் வற்புறுத்தலையும் மீறி ஏற்றுக்கொண்டவராயிற்றே. மன்னிப்பு அளித்தவராயிற்றே.
சைலேந்திரபாபு அந்த சூழ்நிலையில் வளர்ந்திருந்தால் அவரும் இதைத்தான் செய்திருப்பார். ஏன் இதைவிட அதிகமாகவும் செய்திருப்பார். இதையெல்லாம் அலச மனமில்லாதவர்கள் எல்லாம் என்ன? ஐ பி எஸ் ?
காவல் துறையே சட்டத்தை கையிலெடுத்து கொண்டு விட்டது? இது எங்கு போய் முடியுமோ? இதை பொது நல வழக்காக மாற்றி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது இன்னும் பல நிரபராதிகளை குறிவைக்கும். இவர்கள் அட்டாகசம் தாள முடியாது. நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்குத் தொடரலாம். நீதித்துறையை அவமதிக்கும் செயலே ஆகும். இந்த கொலைச்செயல். பொதுமக்கள் அந்த நபர் (குற்றவாளி) எப்படி இறந்திருந்தாலும் ஆதரித்து இருப்பார்கள். அவர்களுக்கு குற்றம் குற்றவாளி இந்த இரண்டு மட்டுமே.
நீதிமன்றத்தில் இருந்து முழுமையாக ஒப்படைக்கிறேன் என்றே காவல்துறையினர் குற்றவாளியை கஸ்ட்டியில் எடுக்கின்றனர். அப்படியிருக்க இப்படி அப்பட்டமான நாடகம் நடத்தினால் எப்படி? யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா? நீங்கள் சொல்வது போல் இவர்களுக்கே உரிய கோழைத்தனமா?
மன்னிக்கனும் நண்பா - பத்திரிக்கையாளர்கள் எல்லோரின் மனநிலமையும் ஒரே மாதிரிதான் இருக்கு - மக்கள் பேசிக்கிறதுதான் நியாபகத்துக்கு வருது - “ங்ங்கோத்தா - அவனவன் வூட்டுல நடந்தாதான்....
ReplyDeleteஅப்படியே வழிமொழிகிறேன்.
ReplyDeleteencounter-ஐ எதிர்பவர்களை வாயில்லேயே சுடனும் என்ற தங்கள் கருத்து நன்றே!!.
இதையெல்லாம் பத்திரிக்கையில் எழுத முடியாது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே!
தீவிரவாதி,ரெளடிபயல்களை பார்த்தவுடனேயே போலீஸ் சுடலாம் என்று சில இடங்களில் நீங்கள் பின்னூ போட்டிருந்தீர்கள்.
பத்திரிக்கைகாரர்களிலும் நல் இதயம் உள்ளவர்கள் அநியாயத்தைக் கண்டு பொங்குபவர்கள் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
உங்கள் பைக் சைக்கிள் எல்லாத்திலும் காத்து இருக்குதா பார்த்துக் கொள்ளுங்கள். ரெளடிகளுக்கு வக்காலத்து வாங்கும் நாய்கள் காத்தை இறக்கி விட்டு இருக்கப் போறான்கள்
தமிழ்மலர் உங்களை பன்னி கூடக் கடிக்காது. அது ரொம்ப பிரஸ்டிஜ் பார்க்கும்.
இப்படிக்கு
பரேதேசிப் பண்ணாடைகளை திட்டுபவன்
//“ங்ங்கோத்தா - அவனவன் வூட்டுல நடந்தாதான்.... //
ReplyDeleteஅப்ப ஜூலை மாதத்தில் நிகழ்ந்த படுகொலைக்கும் அதாவது கள்ளக்காதலுக்காக பூவரசி என்றப் பெண் காதலின் குழந்தையை கொலையை செய்து சூட்கேசில் அடைத்த நிகழ்விற்கும் இதே மாதிரி என்கவுன்டரை எதிர்பார்க்கலாம். (அந்த குழந்தை நடுத்தர வர்க்கம்...என்கவுன்டர் எல்லாம் பணக்கார குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை ஏழை குழந்தை காணாமல் போனாலுமா? அப்படியென்றால் எக்கச்சக்கமான குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதே?)
மொனீந்தர் சிங்ஙை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏழை சிறுமிகள் என்பதற்காகவா? (அப்பொழுதும் என்கவுன்டரை ஆதரிக்கமுடியாது. கவல்துறையின் ஜட்ஜ்மென்ட் எப்படி வேறுபடுகிறது..எனபதை பார்த்தாலே இதன் உள் அர்த்தம் புரிந்து கொள்ளமுடியும்)
''ங்கோத்தா உங்க வூட்ல ''என்பதற்குத்தான் அவங்க அவங்க கையில ரிவால்வர கோடுத்துட்டா அவங்க அவங்களே சுட்டுப்பாங்க. இதற்கு எதற்கு கூலிப்படை....யூனிபார்ம் போட்ட கூலிப்படை.
பாதிக்கப்பட்டவ செஞ்சா பழிவாங்கல் மன ஆறுதல் பழிக்கு பழி தண்டனை கூட குறைவு தான். ஒரு பெண் கூட பேட்டியில் சொன்னது எங்க கிட்ட விட்டா அன்னைக்கே கொன்றிருப்போம் மொத்தமாக சேர்ந்து அடித்து...காவல் துறையினர் ஒரு வாரம் கழித்து லாபம் நஷ்டம் கணக்கிட்டு கொன்றிருக்கின்றனர்.
உஷாரா இருங்க...ஏதாவது சின்னத் தப்பு செஞ்சு மாட்டினாலும் எதிர்த்து பேசாதிங்க துப்பாக்கியில சுட்டுருவாங்க...எனகவுன்டர்னு பேப்பர்ல வந்துரும் உங்க மேல இருக்கிற கேசை எல்லாம் தூக்கிப்பொட்டுருவாங்க. அப்புறம் இது பத்தி எழுதினா இப்படி தான் எழுதுவாங்க ''ங்கொத்தா உன்க்கு வந்தா தெரியும்னு'' தப்பிக்கவே முடியாது.
பாதிக்கப்பட்டவனைத்தவிர அடுத்தவனுக்காக கொலை செய்கிற அளவுக்கு துணிவு எல்லாம் நம்ம மக்களிடம் கிடையாது. கீழே தன் எதிரே விழுகின்றவனையே கை தூக்கிவிடுவதில்லை. உதவுகின்ற மனப்பான்மையே எல்லாம் நம் மக்களுக்கு கிடையாது. கும்பலா போய்வேண்டுமென்றால் தாக்குவாங்க. கும்பல் ச்ண்டை கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க போட முடியாது.
எப்படி விபத்து நடந்த இடத்துல உடனே லாரி டிரைவர் இடத்தை விட்டு ஒடுறத பார்க்கலாம். இதற்குத்தான். விபத்து நடந்த இடத்துல மாட்டுனா அவரு கைமா தான்.
ஒன்று காசுக்காக கொலை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பதவி அல்லது அரசியலுக்காக கொலை செய்யவேண்டும்.
இது இரண்டும் எவரை வேண்டுமனாலும் கொலை செய்யும்.
பிடிக்கவில்லை என்றால் எவனையும் கொலை செய்யும். செய்து விட்டு தற்காப்புக்காக சுட்டேன் என்று சொல்லும். இது தான் எனகவுன்டர்.
இந்த வார ஜூவியில் இதுபற்றி கட்டுரை வந்துள்ளது.
பத்திரிகைதாரர் பத்திரிகை நிருபர்அல்லாதர் எனபதில்லை. விஷயமே (கொலைச்செய்தியே) பத்திரிகை மூலமாகத்தானே வருகுது. அப்புறம் எப்படி பத்திரிகையை நம்பாம இருக்க முடியும். செய்திகள் வேறுபடும். உண்மைகளை அரசின் நிர்பந்தத்திற்காக மறைப்பார்கள். நாட்டின் நலன் பொருட்டு, அனைத்தையும் மறைக்க முடியாது.
நீதி காவலர்களே !!
ReplyDeleteஏராளமான இளம் சிறார்கள் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களே, அந்த சிறுவர்களையெல்லாம் வேண்டும் பொழுது அனைத்து விதமான இச்சைகளுக்கும் பயன்படுத்தி கொள்கிறார்களே அந்த அரசியல் தாதாகளுக்கெள்ளாம் என்கவுண்டர் கிடையாதா? பணக்கார குழந்தைகளுத்தான் உங்க உடனடி நீதியா??
பின்புலம் இல்லாத மோகன்ராஜை கொல்லும் நீங்கள் இதே தவறை பல முறை செய்யும் பவர்புல் குற்றவாளிகளை என்ன செய்தீர்?? என்கவுண்டர் செய்ய வேண்டாம். ஆனால் குறைந்தபட்சம் சட்ட ரீதியிலான தண்டனையாவது வாங்கி தரலாமே.... முடியாது ஏன்னா தலைப்பை படிக்கவும்...
உங்களுடைய கருத்து நியாமான கருத்தாக தெரியவில்லை. என்கவுண்டர் ஆதரிக்க கூடாத விஷயமாக இருக்கலாம் . ஆனால் எல்லா நேரங்களிலும் எதிர்க்க கூடாது. பல சந்தர்பங்களில் காவல் துறை குற்றவாளிகளுடனே துணை சேர்ந்து பல அநியாயங்களை செய்து கொண்டிருக்கிறர்கள். இருந்தாலும் சில சந்தர்பங்களில் நியாத்திற்கும் துணை போகிரார்கள் . இது அது போன்ற ஒரு சந்தர்ப்பமாகவே தெரிகிறது
ReplyDelete