Nov 13, 2010

கோவை என்கவுன்டர்: குறிதவறிபோனது ஏன்? அதிர்ச்சி தகவல்கள்

 சில விசயங்களை இப்படி இலைமறைகாயாக தான் எழுத முடியும். புரியாத பகுதிகளை பின்னூட்டத்தில் கேளுங்கள் எதாவது ஒரு பெயரிலி (அனானி) மூலம் விளக்கம் கிடைக்கும்

( இது பல பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறை, உளவுத்துறை நண்பர்கள், ரங்கேகவுண்டர் வீதி நண்பர்கள், மற்றும் அரசியல் நோக்கர்கள் உள்ளிட்டவர்கள் தந்த தகவல் அடிப்படையில் எழுதப்படும் செய்தி.  எவ்வளவு தூரம் உண்மை என்பதை காலம் தான் பதில் சொல்லும் )

சென்னை குழந்தைகள் கடத்தல் உச்சத்தை அடைந்த போது, அதில் உச்ச அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பு புகைய ஆரம்பித்தது. காவல்துறைக்கு மிகப்பெரிய இழுக்கை கொண்டுவந்து சேர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் தமிழக காவல்துறையே செய்வதறியாது நின்றது.

அடுத்த அதிர்ச்சியை எதிர்நோக்கவில்லை போலீசார்.

கோவையில் குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டும் விட்டனர்.

அவ்வளவு தான் தமிழக காவல்துறை முடமாகிவிட்டது என்ற நிலைக்கு பத்திரிக்கைகள் எழுத துணிந்த நேரம்.

24 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக கோவை போலீசார் கொண்டாட துவங்கினர்.

பத்திரிக்கைகள், சதாகமான குழுக்கள் மூலம் கோவை மக்களின் பாராட்டை பெற முழுவீச்சில் காய்களை நகர்த்தப்பட்டன.

முழு வெற்றி. எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வரவேற்பும் புகழும் கிடைத்தது.

இதை பயன்படுத்தி கனகச்சிதமாக சென்னை கடத்தலையும் முடிவுக்கு கொண்டுவந்தனர் சென்னை போலீசார்.

அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டது தமிழக காவல்துறை.

ஆனால் அடுத்து வந்த அழுத்தம் தான் கோவை போலீசாரை கதிகலங்க வைத்துவிட்டது.

மாநிலத்திலும் மத்தியிலும் பல பிரச்சனைகளை திசை திருப்ப கோவை போலீசாரின் உதவியே தேவைபட்டது.

நள்ளிரவில் முடிவுசெய்யப்பட்ட திட்டத்தில் சில உள்ளூர் பேரங்களும் கைகோர்த்தது.

ஒருசில மணிநேரத்தில் எதை முடிவு செய்வது?

அவசர கதியில் ஆபரேசன் தயாரானது. ஆனால் அதுவே முட்டாள்தனமானது.

கைதிகளுக்கு இடையில் குறி தவறிப்போனது தான் மிகப்பெரிய சிக்கலுக்கு காரணம்.

சரிசரி எப்படியாவது சமாளியுங்கள். குறிப்பாக பத்திரிக்கைகளை குளிரூட்டிவிடுங்கள். நீங்கள் செய்த தவறுக்கு நீங்களே கடிவாளம் இட்டுக்கொள்ளுங்கள் என உயர்மட்டம் முடித்துவிட்டது.

சம்மந்தப்பட்ட இரு குடும்பங்களை வாய் அடைத்துவிடல். பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை திரட்டல். இந்த இரு பணிகளையும் கோவை போலீசார் சக்திக்கு மீறியே செய்துவிட்டனர். குறிப்பாக பத்திரிக்கைகள் இப்படி மண்டியிடும் என  கோவை போலீசார் எதிர்பார்க்கவே இல்லை.

இருந்தாலும் ரகசியங்கள் கொஞ்சம் கசிந்தாலும் பிரச்சனை கையைவிட்டு சென்றுவிடும் என்ற அச்சம் போலீசாரை தொடர்ந்தது.

அப்படி ஒன்றும் என்கவுன்டருக்கு எதிர்ப்பில்லை என்பதை எல்லா பக்கமும் நிரூபித்து விட்டார்கள் போலீசார்.

நன்றாக தான் நாடகம் சென்று கொண்டிருந்தது.

ஆனால் யார் அந்த அண்ணாதுரை? முக்கிய கைதியை விசாரணை செய்ய நீதிமன்றத்தில் முன்அனுமதி பெற்றிருந்தாரா? என்ற நீதிமன்றத்தின் கேள்வி போலீசாரை திடுக்கிட வைத்துவிட்டது.

பொதுமக்கள் ஆதரவும் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருவதாக உளவுத்துறை தகவல் சொல்ல, போலீசாருக்கு உச்ச கிலியே பிடித்துவிட்டது.

ஏன் நெற்றியில் சுட்டீர்கள்? அதுவும் காவல் வேனுக்குள்ளேயே வைத்து? அதுவும் அண்ணாதுரை ஏன் சுட்டார்? இந்த கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் என்ன பதில் சொல்வது?

போதாகுறைக்கு குறி தவறியதான் காரணத்தை கேட்டு மேலிடம் தரும் அழுத்தம். (இங்கு குறி தவறியது என்பது கைதியின் உடலில் அல்ல, கைதியே - புரிந்துகொண்டால் சரி )

 புலனாய்வு பத்திரிக்கைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உள்விவகாரங்களை அலச துணிந்துள்ளது இன்னும் போலீசாரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எது எப்படியோ இந்த என்கவுன்டர் ஒரு படுபாதக செயல் என நிரூபிக்கப்பட்டு, இதன் மூலமாவது அரசியல் என்கவுண்டருக்கு ஒரு முற்றுபுள்ளி வந்தால் அதுவே மிகப்பெரிய ஆறுதல்.

1 comment:

  1. சில நேரங்களில் கசப்பான உண்மைகளை எழுத எவ்வளவு தான் முயன்றாலும் மனம் இடம் கொடுப்பது இல்லை.

    நடந்தது நடந்துவிட்டது.

    இருந்தாலும் இதை விடப்பிடியாக எழுதுவதற்கு காரணம் இந்த என்கவுன்டரை பொதுமக்கள் எந்தவிதத்திலும் ஆதரித்துவிடக்கூடாது என்பதற்காக தான்.

    ReplyDelete

Popular Posts