Dec 23, 2010

முல்லைபெரியாறு:தமிழரிடம் மனசாட்சி இருக்கிறதா?

முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவந்த என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரளாவில் ஏதோ மலையாளிகள் எதிர்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். முல்லைபெரியாறு அணையால் ஆபத்து என்று சொல்பவர்கள் தமிழர்கள் தான். அதுவும் அந்த அணையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே குடியிருப்பதும், விவசாயம் செய்வதும் தமிழர்கள் தான். 10 லட்சம் தமிழர்கள் உட்பட 40 லட்சம் மனிதர்களின் உயிர் பிரச்சனை அது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்றை(பெரிய+ஆறு) மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் தான் முல்லை பெரியாறு அணை திட்டம்.

முல்லை + பெரியாறு என்ற இரு ஆற்றுப்பகுதிகளை இணைத்து அணையாக நீரை தேக்கி மேற்கு திசையில் பாயும் நீரின் போக்கை கிழக்கு திசைக்கு திருப்புவது தான் அணையின் பிரதான நோக்கம்.

அணை இருக்கும் மலைபகுதி முக்கோண சரிவை உடையது. சரிவில் மேற்குநோக்கி பாயும் ஆற்றுநீரை தடுத்து தேக்கி நிரப்பி கிழக்குநோக்கி எதிர்திசையில் வழிய செய்யப்படுகிறது.

இயற்கைக்கு எதிராக மிகப்பெரிய போரட்டத்தில் கட்டப்படும் இந்த அணையின் ஆபத்தை அப்போதே உணராமல் இல்லை. அதை 999 ஆண்டு ஒப்பந்தபடிவத்தில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.

பிரதான அணையின் மொத்த உயரம் 177. இதில் 162 அடி வரை தண்ணீரை தேக்கியிருக்கிறார்கள். 104 அடிக்கு கீழான தண்ணீரை எதிர்திசையில் திருப்பகூடாது. அந்த நீர் தேக்கடி பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு சொந்தமானது. 104 முதல் 152 அடிவரையிலான நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

115 அடியிலிருந்து தமிழகம் தேவையான அழுத்தத்தில் நீரை எடுக்க முடியும்.

அணையின் பலத்தை பொருத்தவரை 50 ஆண்டுகள் மட்டுமே முழுமையான உறுதியிருக்கும் என்பது உலகின் பொதுவிதி.

112 ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது அணை. இதன் மேற்பூச்சு நீர்அரிப்பு தன்மையுடையது. கற்களுக்கு இடையிலான கலைவை பகுதியில் நீர்உறிஞ்சும் தன்ம¬யும் உள்ளது. இதன் வழியாக அரிப்பும் நீர்கசிவும் உள்ளது என்பது உண்மை. நீர் கசிவின் தன்மை ஆண்டுதோறும் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. 

உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான 4 அணைகளில் முல்லைபெரியாறு அணையும் ஒன்று. மற்ற மூன்று அணைகளிலும் நீர்தேக்கம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆபத்தான அணைகள் பட்டியலில் முல்லைபெரியாறு அணையும் உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் முக்கிய உடல் பகுதியின் நீர்அழுத்தம் கூர்மையாக முக்கிய அணைகட்டின் அடிப்பகுதியை நோக்கி செல்கிறது. அணையிருக்கும் நிலபகுதியும் அதே சாய்வில் சரிவாகவே அழுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான அழுத்தத்தை அணைக்கு கொடுப்பது ஆபத்தையே தரும்.

முல்லை பெரியாறு பிரதான அணையின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்வது தான் அறிவுடமை. இதற்கு இன்றுவரை தமிழகம் மாற்றை யோசிக்காதது தான் வேதனை. ஒரு அணையால் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மாற்றை யோசிப்பது தான் மனிதநேயம். அந்த மனிதநேயம் இன்றுவரை தமிழத்திற்கு வராதது ஏன்?

முல்லை பெரியாறு அணையில் அதிகப்படியான நீர் மேற்குநோக்கி வெளியேற்றப்பட்டால் வரும் ஆபத்தை இடுக்கி அணையை பற்றி தெரிந்துகொண்டால் புரிந்துகொள்ள முடியும்.



பெரியாற்றின் குறுக்கே மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது முல்லைபெரியாறு அணை. இங்கிருந்து கசியும் நீர் வல்லகடவு, வண்டிப்பெரியார் நகரங்களை கடந்து இடுக்கி அணையை அடைகிறது. பெரியாறு அல்லாமல் பல காட்டாறுகளும் இடுக்கி அணையின் பிரதான நீர்ஆதாரங்கள். எப்போதும் நிரம்பிவழியும் இடுக்கி அணையும் மிகவும் ஆபாத்தான அணைகளில் ஒன்று தான்.
 உலகில் வளைவு (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட நவீன அணை இடுக்கி அணை. மூன்று மலை இடுக்குகளில் தடுப்பணை ஏற்படுத்தி செங்குத்தாக நீர் தேக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதால் அழுத்தம் கொடுத்தால் இடுக்கி சிறுதோணி அணை உடையும் என்பது நிபுணத்துவம்.

முல்லைபெரியாறு அணையின் வெள்ளப்பெறுக்கால் இடுக்கி அணை உடையுமானால் 40 லட்சம் மனிதர்கள் நீரில் அடித்துசெல்லப்படுவார்கள். கொச்சி என்ற அழகிய துறைமுகமே சுவடற்று போகும். ஏராளமான வனவிலங்குள் கடலில் செத்துமிதக்கும்.

இதெல்லாம் சம்பவிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது தான் நிதர்சன உண்மை.

சரி அடுத்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவோம்.

முல்லை பெரியாறு அணையின் உதவியால் தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் செழிப்படைகிறது. இந்த உதவி நிறுத்தப்பட்டால் இந்த பூமி பாலைவனமாகிவிடும் என்பதும் நிதர்சன உண்மை.

இந்த பகுதிகளின் குடிநீர் உயிர் ஆதாரம் முல்லை பெரியாறு என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

கேரள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும். இது தான் முல்லைபெரியார் பிரச்சனைக்கான முழுமையான தீர்வு.

115 அடி முதல் 136 அடி வரை நீரை தேக்குவதால் நிச்சயமாக தமிழகம் போதிய நீரை பெறமுடியும். ஆனால் அதை நீண்டநாட்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. 

மேலும் தமிழகத்தின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்களில் ஒன்றான கூடலூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு 152 அடி வரை நீரை தேக்கினால் மட்டுமே போதிய மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது.

நமக்கு தண்ணீரா? மின் உற்பத்தியா? எது பிரதானம் என்பதை பார்க்க வேண்டும். 

இதே அணை புவியல் ரிதியாக நேர் எதிர் திசையில் திரும்பி இருந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா?

நிச்சயம் தமிழகம் மாற்றை யோசித்தேயாகவேண்டும். இல்லாவிட்டால் கேரளாவின் துயரத்தின் மிகப்பெரிய சாபம் தமிழகத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்தி விடும்.

அரசியலை தாண்டி கேரள மக்களின் கோரிக்கை இதுதான். அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும். அல்லது அணையின் அழுத்தத்தை குறைத்து நீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும்.

எதிர்பகுதியில் சில கால் வாய்களை வெட்டுவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அவ்வளவே. எதிர்திசையில் கால்வாய் வெட்டுவது முல்லைபெரியாறு அணை பிரச்சனைக்கு மிகஎளிதான தீர்வாக இருக்கும். இதற்கு அதிககால அவகாசமோ, நிதியோ தேவைப்படாது. மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களும் நிம்மதியாக உறங்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதை அரசியல்வாதிகள் யோசிப்பார்களா?

கர்நாடகா, ஆந்திராவை ஒப்பிடும்போது கேரளா தமிழகத்துக்கு மிகப்பெரிய தண்ணீர் கொடையளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகாவுக்கு தமிழகம் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு 3 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் கேரளாவுக்கு 70 டிஎம்சி தண்ணீருக்குநிலகுத்தகையாக 40 ஆயிரம் மடடுமே தருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா நோக்கி பாயும் 36 ஆறுகளை தடுத்து தமிழகம் நோக்கி திருப்பியிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடகூடாது.

கேரளா நமது நண்பன். அவர்கள் கோரிக்கையை மனிதநேயத்தோடு பார்ப்போம். நிச்சயம் தீர்வு உள்ளது. 

குமரிக்காக மேற்கு தொடர்ச்சி மலையின் அத்தணை அணைகளையும் ஆறுகளையும் கேரளாவுக்கு விற்றுவிட்டு இன்று மீண்டும் உரிமைகொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

வரலாற்றை கொஞ்சம் திருப்பி பாருங்கள் 
காமராசரால் அனாதையாக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள தமிழர்களின் குரலை ஒருநாளாவது தமிழர்கள் கேட்டதுண்டா?

50 ஆண்டுகால வரலாற்றில் ஒரு தலைவராவறு வண்டிபெரியாறு உட்பட பகுதிகளுக்கு சென்று தமிழர்கள் குறைகளை கேட்டிருக்கிறார்களா?

தமிழகம் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு தரும் நாடு என்றால் தயவு செய்து தமிழ் என்ற பெயரை தூக்கிவிட்டு சென்னை மாகாணம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு ஒரு நாடாக இருக்குமானல் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கட்டும்.

வண்டிபெரியார், இடுக்கி இந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒரு துரும்பை கிள்ளியிருக்குமா?

தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கொடுமை யாருக்காவது தெரியுமா? ஆழியாறு நீர் கிடைக்காமல் பாலக்காடு மாவட்டத்தில் கருகிபோகும் நெற்கதிர்களின் மரணக்குரலை எப்போதாவது தமிழகம் காதுகொடுத்து கேட்டதுண்டா?

கோவை அருகே அட்டப்பாடி என்ற ஒரு பகுதி இருக்கிறது. உலகின் தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் விவசாய பூமியாகவும் இருந்த மண் இன்று வீணாக போனது.

காரணம் ஒரு மேம்பாட்டு முயற்சிக்கும் தமிழகம் சம்மதிப்பதில்லை.

புவியியல் மற்றும் கலாச்சர அமைப்பில் தமிழகமாக இருந்த பகுதிகளை காமராசர் தன் சுயநலனுக்காக கேரளாவிடம் அடகுவைத்துவிட்ட கொடுமை யாருக்காவது தெரியுமா?

தமிழக அரசின் உதவி கிடைக்கும் என காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துபோன தமிழர்கள் தான் இன்று கேரளாவின் ஆதரவு கரத்தை பிடித்துள்ளனர்.

காமராசரால் அநாதையாக்கப்பட்ட இந்த தமிழர்களை இன்றும் கவுரவமாக வைத்துள்ளது கேரளா. இவர்களுக்கு தமிழ்பள்ளிகள், தமிழில் அரசு ஆவணங்கள், தமிழில் குடும்ப அட்டை, தமிழில் வாக்காளர் அடையாள அட்டை, தமிழில் பெயர்பலகைகள்  என தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தள்ளது.

ஆனால் கேரள மக்களின் உயிர் பயத்திற்கு நாம் என்ன மதிப்பளித்துள்ளோம். குறைந்தபட்சம் அவர்களின் கருத்து என்ன என்றாவது காது கொடுத்து கேட்டுள்ளோமா? 

மதுரை உட்பட தென்மாவட்ட விவசாயிகளே தயவு செய்து தமிழக அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். நமது தொப்புள்கொடி உறவுகளின் கையில் உள்ளது முல்லைபெரியாறு தீர்ப்பு.

அவர்களை சென்று சந்தியுங்கள். அவர்கள் நிலையை பாருங்கள். அவர்களது அச்சத்தை போக்குங்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அவர்கள் மனது வைத்தால் முல்லைபெரியாறு என்றும் உங்களுடையது தான்.

37 comments:

  1. ஒன்று புரிகிறது. உண்மையை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய அணைத்து ஊடகங்களும் காவடி தூக்கும் கேவலமான போக்கினால் உண்மை நிலை என்பதே முற்றிலும் மறைக்கப்பட்டு பொய்யான தவறான தகவல்கள் சென்று சேருவதால் வேறு வழி இன்றி அதனை நம்பி தொலைக்க வேண்டியுள்ளது. பிரச்சனையின் மறுமுகம் பார்த்தால் இரு சாராருக்கும் நல்லது. வேறுபட்ட கண்ணோட்டத்தில் வந்த பதிவு.
    நன்றி பகந்தமைக்கு.

    ReplyDelete
  2. மிக சிறந்த பணி,
    இத்தனை நாளும் கேராளாவும் தண்ணிர் தரமறுக்கிறது என்றே எண்ணியிருந்தேன்.


    தமிழகம் செயவது அநியாயம்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. How to believe you?
    Seems to be mallu propaganda in Tamil.

    ReplyDelete
  4. //இயற்கைக்கு எதிராக மிகப்பெரிய போரட்டத்தில் கட்டப்படும் இந்த அணையின் ஆபத்தை அப்போதே உணராமல் இல்லை. அதை 999 ஆண்டு ஒப்பந்தபடிவத்தில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.
    //

    Do you have a copy? Could you publish the same?

    //அணையின் பலத்தை பொருத்தவரை 50 ஆண்டுகள் மட்டுமே முழுமையான உறுதியிருக்கும் என்பது உலகின் பொதுவிதி.
    //

    Ever heard of a dam kallanai build 1,800 years back on the river kaveri?

    And still working in excellent condition.

    //இதன் வழியாக அரிப்பும் நீர்கசிவும் உள்ளது என்பது உண்மை. நீர் கசிவின் தன்மை ஆண்டுதோறும் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை.
    //

    Then how come various comittees are certifying that the dam is safe?

    //உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான 4 அணைகளில் முல்லைபெரியாறு அணையும் ஒன்று. மற்ற மூன்று அணைகளிலும் நீர்தேக்கம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. //

    Please name the remaining three dams.

    //முல்லை பெரியாறு அணையின் முக்கிய உடல் பகுதியின் நீர்அழுத்தம் கூர்மையாக முக்கிய அணைகட்டின் அடிப்பகுதியை நோக்கி செல்கிறது. அணையிருக்கும் நிலபகுதியும் அதே சாய்வில் சரிவாகவே அழுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான அழுத்தத்தை அணைக்கு கொடுப்பது ஆபத்தையே தரும்.
    //

    Any proof for this statement?
    What is the angle of the pressure of water and angle of the land?

    1. //சரிவில் மேற்குநோக்கி பாயும் ஆற்றுநீரை தடுத்து தேக்கி நிரப்பி கிழக்குநோக்கி எதிர்திசையில் வழிய செய்யப்படுகிறது.
    //

    2. //பெரியாற்றின் குறுக்கே மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது முல்லைபெரியாறு அணை. இங்கிருந்து கசியும் நீர் வல்லகடவு, வண்டிப்பெரியார் நகரங்களை கடந்து இடுக்கி அணையை அடைகிறது. //

    Is the majority water diverted to TN or let go in the periyaar river towards idukki?

    //எப்போதும் நிரம்பிவழியும் இடுக்கி அணையும் மிகவும் ஆபாத்தான அணைகளில் ஒன்று தான்.
    உலகில் வளைவு (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட நவீன அணை இடுக்கி அணை. மூன்று மலை இடுக்குகளில் தடுப்பணை ஏற்படுத்தி செங்குத்தாக நீர் தேக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதால் அழுத்தம் கொடுத்தால் இடுக்கி சிறுதோணி அணை உடையும் என்பது நிபுணத்துவம்.
    //

    Isn't it prudent to ensure idukki dam is strengthened and protected?

    And ensuring overflowing water is contained even before it reaches idukki dam?

    //முல்லைபெரியாறு அணையின் வெள்ளப்பெறுக்கால் இடுக்கி அணை உடையுமானால் 40 லட்சம் மனிதர்கள் நீரில் அடித்துசெல்லப்படுவார்கள். கொச்சி என்ற அழகிய துறைமுகமே சுவடற்று போகும். ஏராளமான வனவிலங்குள் கடலில் செத்துமிதக்கும்.


    இதெல்லாம் சம்பவிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது தான் நிதர்சன உண்மை.
    //

    Seems directly lifted from V.S.Achu's doomsday VCD.

    ReplyDelete
  5. //115 அடி முதல் 136 அடி வரை நீரை தேக்குவதால் நிச்சயமாக தமிழகம் போதிய நீரை பெறமுடியும்.//

    That is the current level. If no issue with that, why then TN is fighting hard to raise the water level?

    //எதிர்பகுதியில் சில கால் வாய்களை வெட்டுவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அவ்வளவே. எதிர்திசையில் கால்வாய் வெட்டுவது முல்லைபெரியாறு அணை பிரச்சனைக்கு மிகஎளிதான தீர்வாக இருக்கும். இதற்கு அதிககால அவகாசமோ, நிதியோ தேவைப்படாது. மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களும் நிம்மதியாக உறங்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதை அரசியல்வாதிகள் யோசிப்பார்களா?
    //

    IF it is so simple, why not propose this to Mullaperiyaar activists like Vaiko or Subra.Swamy?

    //ஆந்திரா, கர்நாடகாவுக்கு தமிழகம் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு 3 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் கேரளாவுக்கு 70 டிஎம்சி தண்ணீருக்குநிலகுத்தகையாக 40 ஆயிரம் மடடுமே தருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.//

    So what is the deal? Is this all a bogey to raise the per TMC cost?

    Don't forget that except for water, everything else goes from Tamilnadu to Kerala.

    //கேரளா நமது நண்பன்.//

    Best comedy of the day.

    //காமராசரால் அனாதையாக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள தமிழர்களின் குரலை ஒருநாளாவது தமிழர்கள் கேட்டதுண்டா?


    50 ஆண்டுகால வரலாற்றில் ஒரு தலைவராவறு வண்டிபெரியாறு உட்பட பகுதிகளுக்கு சென்று தமிழர்கள் குறைகளை கேட்டிருக்கிறார்களா?


    தமிழகம் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு தரும் நாடு என்றால் தயவு செய்து தமிழ் என்ற பெயரை தூக்கிவிட்டு சென்னை மாகாணம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு ஒரு நாடாக இருக்குமானல் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கட்டும்.


    வண்டிபெரியார், இடுக்கி இந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒரு துரும்பை கிள்ளியிருக்குமா?
    //

    What is this to do with Mullaperiyaar issue?

    //தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கொடுமை யாருக்காவது தெரியுமா? ஆழியாறு நீர் கிடைக்காமல் பாலக்காடு மாவட்டத்தில் கருகிபோகும் நெற்கதிர்களின் மரணக்குரலை எப்போதாவது தமிழகம் காதுகொடுத்து கேட்டதுண்டா?


    கோவை அருகே அட்டப்பாடி என்ற ஒரு பகுதி இருக்கிறது. உலகின் தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் விவசாய பூமியாகவும் இருந்த மண் இன்று வீணாக போனது.
    //

    Attapady is north of Mannarkad which is north of Palakkad inside Kerala. Famous Malampuzha dam is near attapady. Why not Kerala divert its water to cultivate these area?

    //புவியியல் மற்றும் கலாச்சர அமைப்பில் தமிழகமாக இருந்த பகுதிகளை காமராசர் தன் சுயநலனுக்காக கேரளாவிடம் அடகுவைத்துவிட்ட கொடுமை யாருக்காவது தெரியுமா?
    ///

    Pls eloborate..

    ReplyDelete
  6. திரு.
    பெயரில்லாதவருக்கு
    உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அதிகம் தேவைப்படுவதால் அடுத்து தனிபதிவில் விளக்கம் தருகிறேன்.

    ReplyDelete
  7. Subject as understood : “Kerala citing safety of the dam, located in Idukki District,
    wants to demolish the existing structure and construct a new
    one at an alternative location, to which Tamil Nadu is
    opposed”, says Sri. N.K. Premachandran, water resources
    Minister of Kerala State. (Deccan Chronicle, 27.07.2010)

    References : No. 1. V. Nagam Aiya, The Travancore State Manual, Vol. I. 1906,
    pp. 17 & 18.
    No. 2. T.K. Velu Pillai, The Travancore State Manual, Vol. I, 1940,
    pp. 58 & 59.
    No. 3. T.K. Velu Pillai, The Travancore State Manual, Vol. IV, 1940,
    pp.402 – 427.
    No. 4. Lok Sabha Debates, 14th & 15th December, 1955, Vol. I,
    pp. 133 – 147.
    No. 5. Lok Sabha Debates. July 1956.
    No. 6. States Reorganisation Commission Report, New Delhi, 1955,
    pp. 82, 83 & 237.
    No. 7. Census of India 1941 – Travancore (as quoted in the
    memorandum submitted to the Linguistic Provinces Commission
    by the Travancore Tamil Nad Congress, 1953, p.8.

    ReplyDelete
  8. 1. Stability of the Dam
    Mullai – Periyar Dam project took thirty long years for investigation and study
    on feasibility and technical questions. Cement was used as the binding material in its
    stone masonry works, as in the case of all such other dams. As the dam was
    constructed on rocky bed, in all statements, the details about the bed is absent. But the
    details about the length, breadth, height and capacity of the dam are found in all
    records. The British Government which constructed the dam expected a life of Two
    Thousand Years and accordingly the agreement stipulated a period of Two Thousand
    Years.

    ReplyDelete
  9. If the Kallanai in Tamil Nadu, constructed, with a binding mixture of toddy and
    clay, against the turbulent and gigantic water flow of Cavery River can withstand for
    more than 1600 years, why a dam constructed, with concrete across Periyar River
    which is neither turbulent nor gigantic as Cavery River, cannot withstand for two
    thousand years?

    ReplyDelete
  10. Ref. No. 3 : “The investigations started by engineers in 1850 were continued without
    intermission for more than thirty years before the results there of took
    the shape of definite proposals”.

    ReplyDelete
  11. Ref. No. 3 : “When the negotiations were opened the Government of Madras
    possessed full and accurate information of all relevant details”.
    “The head works for the catchment consist of a dam made of
    concrete”.

    ReplyDelete
  12. Ref. No. 1 : “About seven miles below Mullayar Thavalam there is formed a sort of
    gorge by the hills rising to a considerable height on either side of the
    river and approaching each other very closely. It is here that the dam is
    thrown by the Madras Government to a height of 160 feet and a width of
    1200 feet”.

    ReplyDelete
  13. Ref. No. 3 : “The thickness of the lower part and the top are 115 ¾ feet and 12 feet
    respectively. The full reservoir level is 152 feet above the bed”.

    ReplyDelete
  14. Ref. No. 3 : “….. granted unto the lessee from the First day of January, One
    Thousand Eight Hundred and Eighty Six for the term of Nine Hundred
    and Ninety Nine Years ….”

    ReplyDelete
  15. Reg. No. 3 : “…. If the lessee shall be desirous of taking a renewed lease of the said
    premises for a further term of Nine Hundred and Ninety Nine years from
    the expiration of the term hereby granted ….”

    ReplyDelete
  16. 2. No loss but gain to Kerala
    Western slopes of the Ghats were blessed with very heavy rain fall. The dam is
    to utilize a portion of the super abundant rainfall on the western slopes of the Ghats
    for the purpose of irrigation in Madurai District of Tamil Nadu.
    The area covered by the Mullai-Periyar Dam is in the dense forest of Kerala
    where the rainfall is super abundant. Periyar emerges from the dense forest. Even in
    the driest weather it contained 30 yards wide and 2 feet deep water. After a journey of
    10 miles Mullayar joins Periyar. Seven miles below this junction a dam was
    constructed by the British Government. It is now called the Mullai-Periyar Dam which
    is used for the irrigation in Madurai District of Tamil Nadu.
    The area covered by the Dam was unknown to the people of Travancore and
    the Government, as the area lay locked up within inaccessible forest at a considerable
    distance. So when the proposal was made by the British Government, Travancore
    Government thought that it was a boon because, that it was able to get a large sum of
    money in the form of rent. So discussions between the two governments concentrated
    mainly on the terms of payment of rent.
    4
    The lake was expected to serve as a means of communication. Expected huge
    settlements near the lake, landed properties are expected to appreciate in value and an
    addition of a tourist centre to Travancore.
    In fact Kerala Government had not taken any development projects, so far, up
    to the dam on the course of Periyar River. As the tributaries are many to Periyar after
    the Mullai-Periyar Dam, the development projects concentrated only on those areas.
    For nearly 27 miles from its origin the Periyar River is not harnessed either for
    irrigation or for commercial ventures like hydro-electric projects.

    ReplyDelete
  17. Ref. No. 3 : “Its objects in the words of the Secretary of State for India, to utilize a
    portion of the super abundant rainfall on the western slopes of the Ghats
    for the purpose of irrigation in the Madurai District”

    ReplyDelete
  18. Ref. No. 1 : “The Periyar is the finest, the largest and the most important of the rivers
    of Travancore. It takes its rise in the Shivagiri forests. As it first emerges
    from the dense forest the volume of water it contains is 30 yards wide
    and 2 feet deep even in the driest weather. After a course of 10 miles
    north ward it is joined by the Mullayar at an elevation of 2800 feet. The
    Periyar then turns due west and continues so for about 10 miles over
    sandy bed. About 7 miles below Mullayar Tavalam there is formed a
    sort of gorge by the hills rising to a considerable height on either side of
    the river and approaching each other very closely. It is here that the
    dam is thrown by the Madras Government to a height of 160 feet and a
    width of 1200 feet to form a lake”.

    ReplyDelete
  19. Ref. No. 3 : “…. Its actual condition and its possibilities were little known to the
    people of Travancore and its government as the area lay locked up
    within inaccessible forests at a considerable distance from the inhabited
    country”.

    ReplyDelete
  20. Ref. No. 3 : “But the negotiation limited itself into the amount of consideration
    payable for the permission to divert the water”.

    ReplyDelete
  21. Ref. No. 3 : “… the lake itself will form a means of communication and it is probable
    that the attraction to settlers which it will form will increase the value of
    the surrounding land to an extent far exceeding the present value of the
    land submerged”.

    ReplyDelete
  22. Ref. No. 1 : “… below which it is joined by the Perinthura River. Lower down passing
    the Todupuzha Periyar crossing, the Kattapanayar joins it and still
    lower the Cheruthoni or Chittar. Lower down it is joined by the
    Pirinyanakutayar and a mile later by the Muthirappuzhayar, where the
    elevation is about 800 feet in 4 ½ miles. There is also another fall called
    Kokkaranippara… The Periyar after receiving the Muthirappuzha…. It
    is then joined by the Deviar…. it flows for about 8 miles when it unites
    with Idiyara or Idamala River. From here as far as Malayathur, the
    river, now a grand one upwards of 400 yards broad, is fed by numerous
    streams”.

    ReplyDelete
  23. 3. Who is the loser ?
    The full storage of the Mullai – Periyar Dam is 152 feet. But the Kerala
    Government is maintaining only 136 feet which is 16 feet below the full storage
    capacity of the dam. However the Hon. Supreme Court of India advised the
    Government of Kerala to maintain 142 feet, which is 10 feet below the storage
    capacity of the dam. Even with the full capacity of 152 feet water level, it is hardly
    enough to irrigate 140,000 acres of paddy fields in the Madurai District. If the storage
    is reduced to 142 feet, the area irrigated may reduce to 75 per cent and if further
    reduced to 136 feet, the area irrigated may reduce to 50 per cent.

    ReplyDelete
  24. Nearly 75 per cent of the rice produced by Madurai District is being supplied to
    Keralites for their consumption. If the dam is demolished, as conceived by the
    Irrigation Minister of Kerala the first loser will be Kerala, for it will go without rice
    supply from Tamil Nadu. In Tamil Nadu the Madurai District will turn into a desert
    and will go back to the 1886 status.

    ReplyDelete
  25. 4. Who is the real owner?
    Periyar River originates from Shivagiri forest which is in Tamil Nadu, in
    between Vasudevanalloor and Karivalamthanalloor in Tirunelveli District. Mullai-
    Periyar Dam is located in Peermede taluk of Kerala. Devikulam and Peermede taluks
    belong to the Tamil kings as per the early records and the people who live even today
    in those two taluks are Tamilians. As per the 1941 Census Report the Tamilians form
    7
    the majority in those two taluks. The representatives to the State Assembly were
    Tamilians. The States Reorganisation Commission violated the normal norms for the
    fixation of the state boundaries and recommended to remain with Travancore, both
    Deviculam and Peermede taluks. As a result the owner of the land, the Tamilians, are
    pushed to day to the back doors of the minority Malayalees in those two taluks.
    Ref. No. 1 : “The Periyar is the finest, the largest and the most important of the rivers
    of Travancore. It takes its rise in the Shivagiri forests”
    Ref. No. 7 : Table showing the Malayalam and Tamil population in Travancore as per
    the 1941 Census of India.

    ReplyDelete
  26. 5. S.R.C cheated the tamilians
    On the basis of the percentage of the people speaking Tamil, the S.R.
    Commission recommended for the transfer of four taluks namely, Agasteeswaram,
    Thovalai, Kalkulam and Vilavancode to Tamil Nadu from the State of Travancore-
    Cochin. The same yard stick was used for the transfer of Shenkotta Taluk to Tamil
    Nadu. While dealing with Devikulam and Peermede taluks, even though the majority
    was Tamil – speaking people and the representatives to the State Assembly were
    Tamilians as in the case of the above indicated five taluks, the commission used a
    different yard stick and recommended to retain in Travancore – Cochin State. This
    cheating may be attributed to one reason, ie, one of the three members of the
    commission Sardar K.M. Panicker was a Malayalee. Even though Shenkotta was fully
    9
    transferred by the commission the Joint – Committee appointed to fix the exact
    boundaries of the states, divided Shenkotta Taluk and allowed Travancore – Cochin
    State to retain a major portion. Thus the S.R. Commission and the Joint – Committee
    cheated the State of Tamil Nadu.

    ReplyDelete
  27. Ref. No. 6 : …“the four southern taluks, namely, Agasteeswaram, Thovalai,
    Kalkulam, Vilavancode, situated in what is known as Nanjil Nad, the
    percentage of Tamil speaking people is above 79. The wishes of the
    people of this area have been clearly expressed and there is no
    particular reason why these wishes should not be respected”.

    ReplyDelete
  28. Ref. No. 6 : “The Shenkotta taluk is partly an enclave in Tirunelveli district of Madras
    State and the percentage of Tamil – speaking people in this taluk is
    about 93. Physically and geographically it belongs to Tirunelveli district
    in which it should now merge”.

    ReplyDelete
  29. Ref. No. 6 : “The Devikulam and Peermede taluks stand on a some what different
    footing. These are hill areas which, for various economic and other
    reasons, are of great importance to the state of Travancore – Cochin”.

    ReplyDelete
  30. Ref. No. 6 : “We do not regard the linguistic principle as the sole criterion for
    territorial readjustments, particularly in the areas where the majority
    commanded by a language group is only marginal”.

    ReplyDelete
  31. Ref. No. 6 : “We are generally in agreement with this view, but in our opinion, the
    mere fact that a certain language group has a substantial majority in a
    certain area should not be the sole deciding factor”.

    ReplyDelete
  32. Ref. No. 6 : “It should be mentioned that, owing to my long connection with Bihar, I
    refrained form taking any part in investigating and deciding the
    territorial disputes between Bihar and West Bengal, and Bihar and
    Orissa – S.R.C Chairman, Hon. S. Fazl Ali (Sardar K.M. Panicker did
    not have this honesty).

    ReplyDelete
  33. Ref. No. 5 : “The Joint-Committee have done a very good job in redrawing the map
    of India, but my complaint is that they have not adopted the same
    principles in the settlement of the boundaries for the various states.
    Particularly I should like to say a few words about the Shenkottai Taluk.
    This is a Taluk which is proposed to be transferred from Travancore-
    Cochin to Madras. It was unfortunate that no member of the area was
    included in the Joint-Committee which settled the fate of the Tamil
    Taluks of Tranvancore - Cochin, and consequently our case was decided
    ex-parte.... In para 294 of their report, the SRC have said the
    ‘Shenkottai Taluk is partly an enclave in Thirunelveli District of Madras
    State and the percentage of Tamil speaking people in the Taluk is about
    93. Physically and geographily it belongs to the Thirunelveli District in
    which it should now merge”.

    ReplyDelete
  34. 6. Conclusion
    We request the Hon. Empowered Committee Members to consider all such
    relevant facts and arguments placed by us before you and instruct the Government of
    Kerala to fulfill the provisions of the Lease Agreement entered in the year 1886 and to
    supply the agreed quantity of water to Tamil Nadu to irrigate 140,000 acres of land in
    Madurai District by raising the water level of the Mullai – Periyar Dam to its full
    capacity of 152 feet. The Present level of 136 feet maintained by the Government of
    Kerala and the level of 142 feet suggested by the Hon. Supreme Court of India are
    injurious to both the states, as explained earlier, as well as to the nation.
    The Government of Kerala does not have any plan to harness the water of
    Periyar River upto the Mullaiyar Thavalam, ie upto the lake. Therefore the Kerala
    Government may not have any objection to raise the water level of the Dam to its full
    capacity of 152 feet and to supply the water to Tamil Nadu. Since Kerala Government
    fears that the Dam will not withstand the full capacity at its present condition, the
    excess water above the presently maintained level of 136 feet, now drained into the
    sea, may be diverted to Tamil Nadu by providing additional new four pen stalks, so
    11
    that the Tamil Nadu side can store the water in some new reservoirs or at Vaigai Dam
    itself, after harnessing the water for power generation, which can be shared by both
    the states. This arrangement may provide a solution to the present water dispute
    between Tamil Nadu and Kerala States as well as benefit them.
    We are sure that the Hon. Empowered Committee shall not disappoint us, the
    Tamilians, as had been done by the States Reorganisation Commission in the case of
    Deviculam and Peermede taluks.
    Thanking you for giving us an opportunity to express our views on the water
    dispute between the state of Tamil Nadu and Kerala on Mullai – Periyar Dam.

    ReplyDelete
  35. (Dr. D. Peter)
    Chairman,
    Kanyakumari Institute of Development Studies (KIDS),
    266, Water Tank Road, Nagercoil-629001
    Phone : +91 4652 279745
    Mobile : +91 9043952430
    www.kidstudies.org

    ReplyDelete
  36. திரு பீட்டரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

    முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் கூடுதலாக கால்வாய்களையோ, குழாய்களையோ அமைத்து நீரை பிரச்சனையில்லாமல் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது என்பதையே அவரும் வலியுறுத்தினார்.

    அவருடனான விவாதத்தை அடுத்த பதிவில் தருகிறேன்.

    ReplyDelete
  37. IMPORTANT ISSUE OF MULLAI PERIYAR DAM

    In 1970's dam was reduce the water level for 130 ft for maintenance work, that work was not completed in specific time period, it was long about 20 years. that period In Thekkadi, Kerala Politicians and Kerala Big Landlords were encroching water catchment areas, and construct RESORTS and LODGES and somebody use (water catchment area) to agricultural land because these lands are very valuable because of Thekkadi is very popular tourist area, these were not controlled by kerala public works dept., and Kerala Forest department because the kerala politican;s involved in this activity.

    Now, suppose the water level to be raised to 152 ft, the resorts and lodges and about 15,000 acres of land are submerged with water.

    because of these silly reasons the kerala politicians oppose to raise the water level to 152 ft.

    In Parambikulam Aliyar Project (PAP), we honoured our agreement in each year for release of water. even in in this PAP project, we want to construct one more project of NALLAR dam project, still objected by Kerala. eventhough the Nallar water never to be utilised by Kerala, because of the geographically it will fruitful to TAMILNADU ONLY.

    ReplyDelete

Popular Posts