கோவை குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்பார்த்ததை போல மனோகர் அப்ரூவராக மாறியுள்ளார்.
கோவையில் குழந்தைகள் இருவர் கடத்தி கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக டிரைவர்கள் மோகன்ராசு, மனோகரன் கைது செய்யப்பட்டனர். போலீசு என் கவுண்டரில் மோகன்ராசு சுட்டுக் கொல்லப்பட்டான்.
குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய விசாரணை கைதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாம் விசாரணை கைதியை வைத்து மேற்கொண்டு விசாரணைகள் நடந்தது.
காவல் உதவி ஆணையர் குமாரசாமியை தனி அதிகாரியாக கொண்ட தனிப்படை குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளது.
குழந்தைகளின் பாட்டி, மனோகரனின் நண்பர்கள், மோகன்ராசுவின் நண்பர்கள் உள்பட 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மனோகரன் தற்போது அப்ரூவராக மாறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் கடத்தப்பட்டது முதல் கொலை செய்யப்பட்டது வரையிலான அனைத்து சம்பவங்களையும் ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளான் மனோகரன்.
இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆரம்பத்தில் மோகன்ராசு கடத்தினான், மனோகர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்றான் என போலீசு தரப்பு கூறியது. மோகன்ராசு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மனோகர் அப்ரூவராக மாறியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மனோகர் தரப்பு வாக்குமூலம் என்ன என்பதை பொருத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். தான் செய்யவில்லை, மோகன்ராசு தான் எல்லாம் செய்தான் என மனோகர் அப்ரூவராக மாறியிருந்தால் அதை மறுக்க மோகன்ராசுவின் ஆவி நிதிமன்றத்துக்கு வரப்போவதில்லை.
பொருத்திருந்து பார்ப்போம்.
பின்குறிப்பு : என்கவுன்டர் வழக்கில் அண்ணாதுரை அப்ரூவராவது எப்போது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
No comments:
Post a Comment