Nov 27, 2010

ராசா அலைகற்றை ஊழல்: கருணாநிதி ஒப்புதல்

அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை கேட்கிறீர்கள் என்று படுவெகுளிதனமாக கேட்டுள்ளார் கருணாநிதி.

நேற்று இரவு (தற்போது) வேலூரில் நடக்கும் கூட்டத்தில் தான் கருணாநிதி இப்படி பேசினார்.

முந்திரா ஊழலில் கிருசுணாச்சாரியார் பதவி விலகியதும் பின்னர் எந்த விசாரனையும் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது ராசாவை மட்டும் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அவரே தனது வழக்கமான சாதிசாயம்பூசிய பதிலையும் கூறினார்.

 கிருணாச்சாரியர் ஆரியர், ராசா தலித் அதனால் தான் இப்போது விசாரணைக்காக கூச்சலிடுகிறார்கள் என்பது தான் கருணாநிதியின் பதில்.

அப்புறம் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் சிலபல சுவாரசியங்களை பேசினார். அதனை கொஞ்சம் ஆய்வு செய்து
அடுத்த பதிவில் தருகிறேன்.

நன்றி.

4 comments:

  1. http://www.google.com/buzz/arivhedeivam/ZYx9cdischo/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0

    ReplyDelete
  2. இந்தியாவில் மக்கள் ஆட்சி என்கிறார்கள். தவறு என்றுதான் நான் கூறுவேன்.
    இங்கே யாரு ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள்தான் ராஜா. வெறும் பெயருக்கு மட்டுமே மக்கள் ஆட்சி.
    எதிர்த்து கேட்டல் கொலை செய்து விடுவேன் என்று கூறுவார்கள்.

    ஓஹோ! மழுப்புகிறாரோ. ஊழல் செய்துவிட்டு ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன.
    இவரது பேச்சில் உல் நோக்கம் உள்ளது என்பதை அனைவரும் அறியவேண்டும்.

    ReplyDelete
  3. அரசியலில் ஊழல் தவிர்க்கவேண்டும் என்றால் அவரவர்கள் திருந்தினால் மட்டுமே உண்டு.

    ReplyDelete
  4. அரசியல் தலைவர்கள் மக்களை ஒரு மனிதனாக நினைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு நினைப்பதில்லை. மக்களும் அரசியல் தலைவர்களை ஒரு மனிதனாக மட்டும் பாருங்கள். அவர் உங்கள் மூலமாக, உங்களுக்கு சேவை செய்ய வந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக அவர் காலில் விழாதீர்கள்.

    ReplyDelete

Popular Posts