தி.மு.க - ம.தி.மு.க - பா.ம.க - இடதுசாரிகள் - திருமா
இது தான் வரும் 2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியாக தமிழக மக்கள் முன் அரங்கேர இருக்கும் கொடுமை.
இதில் என்ன கொடுமை என்கிறீர்களா?
ஊழலை ஒழிப்போம், குடும்ப ஆட்சியை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம் என ஊழல் இல்லா கட்சியும், குடும்ப ஆட்சி(மத்தியில்) இல்லாத கட்சியும், லஞ்சம் கொடுக்காதா(பத்திரிக்கைகளுக்கு) கட்சியும் சேர்ந்து களம் இறங்குகிறது.
ஈழம் அமைப்போம் என்றவர் நாங்கள் எப்போதுமே ராசீவ் கொலையை மறக்கமாட்டோம் என்பார். அம்மாவும் அன்னையுமே ஈழத்தமிழர்களின் தாய் என்ற அதிரடி வசனங்களுடன் கூட்டணி ஓகோ, ஆகா என வரப்போகிறது.
அண்ணா - தம்பி அழுகை நாடகத்தின் அன்டர் பல்டியுடன், அய்யகோ... என் தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவநினைத்தேனே. ஏமார்த்திட்டாங்களே.. ஈழத்துக்காக இன்னும் நான் என்ன செய்யவேண்டும்?. தமிழர்களே ஆணையிடுங்கள் பதவி என்ன? இப்போது உயிரையே கொடுக்கிறேன். என திரைக்கதை வசனம் தீட்டி ஈழம் இலவசம் என்ற மெகா கூட்டணி வருகிறது.
என்ன கொடுமை இந்த தேர்தலிலும் ஈழத்தமிழர் தலை தான் உருளப்போகிறதா?
அட ஆச்சா கூத்தணி. ஈழத்தமிழர் நாம் முள்ளிவாய்க்காலுடன் தமிழன் என்று சொல்லிக் கொண்டு அடிமைவாழ்வு வாழும் தமிழகத்து அரசியல் வியாதிகளை நம்புவதை கைகழுவிவிட்டோம். பகட்டுக்கு உண்ணாநோன்பிருந்த பரதேசிகளையும் மகனுக்கு தமிழர் தலைவர் மேதகுவின் பெயர் வைத்து இழுக்குச் சேர்த்த தமிழ(?)னையும், வி.புலிகளை அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த சொகுசு சுந்தரியின் காலில் வீழ்நத தன்மானப் புயல்களையும் புரிநது கொண்டோம். இனி தமிழ் வாழ வேண்டுமாயின் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமாயின் தமிழக தமிழர் தான் விழித்தெழ வேண்டும். சலுகைகளுக்கு சோரம் போகாமல் தம் வாக்குச் சீட்டை பயன்படுத்த வேண்டும். யாழ்
ReplyDelete