நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப்படாததால் இதுவரை மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றதில்லை.
இன்று ஏதேசயாக சென்றேன். சட்ட மன்றம் போன்ற கம்பீரம் எல்லம் இருந்தது.
70 உறுப்பினர்கள் வருகையுடன் கலைகட்டியது.
மேயர் நடுவே அங்கியுடன் அமர்ந்திருக்க இடபுறம் துணைமேயரும், வலது புறம் மாநகராட்சி ஆணையரும் அமர்ந்திருந்தார்.
கூட்டம் துவங்கிய ஒருசில நிமிடங்களில் வழக்கம் போல கூச்சல் குழப்பம் என அமர்களப்பட்டது. வயதில் பெரிய உறுப்பினர்களின் வாக்குவாதம் கொஞ்சம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனாலும் ரகளை மட்டும் எரிச்சலை தந்தது.
மக்கள் பிரச்சனைகளை எப்படி அழகாக அமைதியாக விவாதிக்கலாம், ஆனால் இப்படி கூச்சல் போட்டுக்கொள்கிறார்களே என அருகில் இருந்த சக பத்திரிக்கையாளரிடம் கேட்டேன்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் மாநகராட்சி கூட்டம் இவ்வளவு அமைதியாக நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றார். ஓ இது தான் சிறந்த அமைதியோ என சிலாக்கித்துக்கொண்டேன்.
ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்வையிட்டேன். ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே பல முறை எழுந்து நின்று பேசி கூச்சல்போட்டனர். ஒரே ஒருவர் மட்டும் அமைதியாகவே இருந்தார். என்ன நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
அவர் வேறு யாரும் இல்லை மேடையில் அமர்ந்திருந்த மாநகராட்சி ஆணையர் தான்.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கூச்சல் குழப்பத்தை 2 மணிநேரம் வேடிக்கை பார்ப்பது தான் இவரது பணி. (வேறு என்ன செய்ய முடியும் குறுக்க பூந்து சண்டையை தடுக்கவா முடியும்).
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு: வலைபதிவர்கள் ...
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல...
No comments:
Post a Comment