Nov 9, 2010

கோவை குழந்தைகள் கொலை வழக்கு : கைதுசெய்யப்பட்டவர் என்கவுன்டரில் கொலை

கோவை ரங்கேகவுண்டர் வீதியில் துணிக்கடை அதிபரின் 2 குழந்தைகளை கடத்தி உடுமலை அருகே வாய்க்காலில் தள்ளி கொன்ற கொடூரம் அனைவரும் அறிந்ததே.
இதன் பேரில் மோகன்ராஜ், மனோகரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர். குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த மற்ற போலீசார் மோகன்ராஜை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அவனும் தப்பி ஓட முயன்றதாகவும், அவனையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. மனோகரன் கதி என்ன? என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

Popular Posts