இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?
சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.
சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.
தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.
திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?
இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?
இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்
*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.
*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?
ஆண்டவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அர...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
நன்றி நண்பா..
ReplyDeleteபகிர்ந்து கொண்டதுக்கு...