Nov 25, 2010

பிரபல வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு:

வலைபதிவர்கள் சமுதாய அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யவேண்டும் என்பது தான் அந்த பதிவின் சாராம்சம்

நான் கூட பலமுறை யோசித்திருக்கிறேன். சமுதாய அக்கறையுடைய நல்ல பதிவுக்கு நம்மால் பின்னூட்டம் என்ற ஒரு சிறு ஊக்குவிப்பு கூட கொடுக்கமுடிவதில்லையே ஏன்?

உன் எழுத்துக்களை நீ மட்டும் படித்தால் அது உனது வாழ்க்கை குறிப்பேடு. உன் எழுத்துக்களை நான்குபேர் படிக்க நீ படைத்தாலே நீ ஒரு சமுதாய பொறுப்பாளன் ஆகிறார். உன் கருத்துக்களை நான்கு பேர் படிக்கவேண்டும் என்றால் உனக்கு முதலில் வரவேண்டிய தகுதி சமுதாய பொறுப்பு.

 இது தான் இதழியல் கல்வியில் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். இது ஏதோ அச்சுத்துறைக்கு மட்டும் வகுக்கப்பட்ட இலக்கணம் அல்ல. எழுதும், கருத்தை பகிரும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் உள்ள இலக்கணம் தான்.

வலைபதிவுகளில் 2 விடயங்களுக்காக நான் பெருமை படுகிறேன்.

1 ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டிய உலகளவிய இணைப்பு, 


2. தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்ச்சியை தடுப்பதில் காட்டும் அக்கறை. 

இன்றும் பல கல்லூரிகளில் உள்ள தமிழ்துறைக்கு கூட தமிழ் ஒருங்குறி - கிரந்தம் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. பல தமிழ்ஆர்வலர்களுக்கு இந்த விடயம் சென்று சேரவில்லை.

 தினசரி பல பத்திரிக்கைகளை படிக்கும் ஒரு பத்திரிக்கையாளனான எனக்கே வலைபூக்கள் வழியாக தான் தமிழ் ஒருங்குறியில் கிரத்தம் சேர்க்கும் முயற்சிகள் தெரியவந்தது. அதன் பின்னர் தான் பத்திரிக்கைகளில் எழுதினோம். ஆனால் அதை எத்தனை பத்திரிக்கைகள் வெளியிட்டன. இணைய தொடர்ப்பு இல்லாத எத்தனை தமிழ்ஆர்வலர்களை இந்த விடயம் சென்று சேர்ந்தது?

இன்று வெகுசன ஊடகங்கள் வியாபாரத்தின் பிடியில் சிக்கி விட்டன. இவற்றிற்கு சில வியாபார கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வட்டத்தை தாண்டி வெளியில் வந்தால் அவர்கள் அந்த தொழிலில் தோற்றுப்போவார்கள். இது தான் நிதர்சன உண்மை.

இதற்கு மிகச்சிறந்த மாற்றாக நான் வலைப்பதிவுகளை காண்கிறேன்.

என்னால் பத்திரிக்கை துறையில் வெளிப்படுத்த முடியாத எண்ணங்களை வலைப்பூவில் வெளிப்படுத்த முடிகிறது. அந்த ஒரு காரணம் போதும் நான் வலைப்பதிவர்களுக்கு தலைவணக்கம் செலுத்த.
ஆனால் அதையும் தான்டி, வலைப்பதிவர்கள் சமுதாய அக்கறையுள்ளவர்களாக மாறினால் அதைவிட மிகச்சிறந்த ஆக்க சக்தி வேறு இல்லை என்றே தோன்றுகிறது.

கையெழுத்து பிரதியை எழுதி தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட ரயில் நண்பர்கள் ஒன்றினைந்து சமுதாயத்திற்கு சேவை செய்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது வலைபதிவர்களால் சமுதாய அக்கறையுடன் செயல்பட முடியாத என்ன?

எல்லாவற்றையும் விட நான் தமிழ்பதிவுலகுக்கு வைக்கும் முதல் வேண்டுகோள்

புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களின் கன்னி எழுத்துக்களுக்கு நாம் ஒரு பின்னூட்டமாவது எழுதி கரம்பிடித்து தூக்கிவிடவேண்டும். அதுவும் கன்னி வலைப்பதிவுகளுக்கு பிரபல வலைபதிவர்களின் பின்னூட்டம் தரும் ஊக்கசக்திக்கு அளவே கிடையாது. நான் அதை உணர்ந்திருக்கிறேன்.

வலைபதிவர்கள் ஆக்கப்பூர்வமாக, ஆத்மார்ததமாக ஒரு பணியை செய்யலாம் அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். ( தற்போது அலுவலக பணி நெருக்கடி. மன்னிக்கவும்.)


தமிழ் வலைபதிவர் சங்கம்

11 comments:

  1. பாஸ்,
    நீங்க கோடு போடுங்க.. ரோடேஏஏஏஏஏஏஏஏஏஏ போட்டுருவம்

    ReplyDelete
  2. வலைப்பதிவில் நாம் நன்றாக எழுதுகிறோமோ இல்லையோ நிறையக் கற்றுக் கொள்ளலாம். பதிவெழுதுவதை விட பின்னூட்டம் இடுவது எனக்கு எளிதாகவும் விருப்பமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இந்த நாட்டில் ஒரு சிலராவது சமுக பொறுப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். முன் எப்போதையும் விட நாட்டுமக்கள் அனைவரும் விழிப்போடு இருக்கவேண்டிய சூழலே நாட்டில் நிலவுகிறது. நாம் விழிப்போடு இல்லையென்றால் நம் நாடு நாசமாய் போவது நிச்சயம்.

    ReplyDelete
  4. well said...i have got discouraged many times by seeing no comments to posts...

    ReplyDelete
  5. நான் வந்த நாள் முதல் இன்றுவரை புதியபதிவர்களின் தளம் சென்று ஒட்டும் பின்னூட்டமிடுவதும் அல்லது ஒட்டும் இடுவதும் வழக்கம். அதே போல நிறைய புதியவர்களும் எனக்கு ஆதரவாக இருப்பது உண்மை.

    ReplyDelete
  6. சிறந்த எண்ணங்கள் . ஊக்குவிற்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் . இயன்றவரை அனைவரையும் ஊக்குவிர்போம் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. பகிர்விற்கு நன்றி. செய்ய வேண்டும். கடமை.

    ReplyDelete
  8. திரு. சித்தூர் முருகேசன், திரு. தமிழ் விணை, திரு. பிரபாகரன், திரு. சமுத்ரா, திரு. கக்குமாணிக்கம்
    திரு. பனித்துளி சங்கர், திரு. கந்தசாமி, திரு. நர்சிம் தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    வலைபதிவர்கள் சங்கம் குறித்த தங்களது ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ருங்கள்.

    வலைபதிவர்கள் இணைந்து முயன்றால் தமிழ் வலைபூவை நிச்சயம் சனநாயகத்தின் நான்காம் தூனாக மற்றமுடியும்.

    நன்றி.

    ReplyDelete
  9. அனைவரூக்கும் வணக்கம். கோவை மாவட்டத்தில் யாரேனும் வலைப்பூ உருவாக்க விரும்பினால், உருவாக்கி , நேரில் மேலதிக தகவல்கள் வழங்க தயார்..
    புதியவர்கள் மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்.
    bharathphysics2010@gmail.com

    ReplyDelete
  10. நான் புதிய பதிவர். உங்களுடையது நல்ல கருத்து இந்த விசயத்தில் நான் என்னை இணைக்க தயார்.என்னை தொடர்பு கொள்ள balepandiya.blogspot.com

    அத்துடன் என்னுடைய வலைபூவிற்கு வருபவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Popular Posts