இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவிலான தொகைக்கு எவ்வளவு லஞ்சம் கைமாறி இருக்கும்? இதை யோசிக்கும் போது இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களையே கண்ணை கட்ட செய்கிறது.
அலைகற்றை ஊழல் என்பது ராசா என்ற ஒற்றை மனிதன் செய்திருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
எனவே அலைகற்றை ஒதுக்கீடு மோசடியின் ஆரம்ப மூலத்தை கண்டறியும் முயற்சியில் பல பத்திரிக்கைகள் இறங்கியுள்ளன.
முதல் கட்டமாக தயாநிதிமாறன் வரை இதற்கான ஆழம் சென்று நிற்கிறது.
2006 பிப்ரவரி 25 தேதி தயாநிதிமாறன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் முக்கிய சாட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
அலைகற்றை ஒதுக்கீட்டு தொகை மற்றும் நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே முடிவு செய்துகொள்ளும் உரிமையை கோரியுள்ளார் தயாநிதிமாறன்.
அப்போது தி.மு.கவின் முழு தயவில் தான் காங்கிரசு அரசு இருந்தது. இதனால் தயாநிதிமாறனின் கோரிக்கையை நிராகிரிக்க முடியாத நிலையில் வழக்கம் போல பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் முத்திரையானார்.
அடுத்து என்ன திட்டம் போட்டுவைத்திருந்தாரோ தயாநிதிமாறன், அதற்குள் பதவி பறிபோனது. தயாநிதிமாறன் போட்ட அடித்தளத்திற்கு ராசா பதவி ஏற்ற முதல் நாளே கைமேல் பலன்(பணம்) கிடைத்துள்ளது.
அந்த தொகை உடனடியாக ராசா தன் தலைவருக்கு குருதட்சணையாக்கிருக்கிறார். பின்னர் தான் 8 அடி 16 அடி 32 அடி என தாண்டி பல லட்சம் கோடி வரை தாண்டியுள்ளார். இது போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கூட்டி கழித்து பார்த்தால் இதற்கு அடித்தளம் அமைத்தவராக இப்போதைக்கு தயாநிதிமாறன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்து இன்னும் ஆழமாக தோண்டப்படுகிறது.
அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு இழப்பு 1.76 லட்சம் கோடி உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்பை ஏற்படுத்த ராசாவுக்கு எத்தனை லட்சம் கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பதை பொருத்து ராசாவின் எதிர்காலம் அமைந்திருக்கிறது. இதில் தாயிநிதிமாறனும் கட்டாயமாக விசாரணை கூண்டில் ஏறவேண்டிய நாட்கள் நெருங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
No comments:
Post a Comment