விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் இந்தியாவின் ராசதந்திரம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இறப்பு சான்றிதழை கொடுக்க இலங்கை தயங்குவது எந்த ராசசந்திரத்தின் அடிப்படையோ, அதை எதிர்கொள்ளும் முன்கூர் நடவடிக்கை தான் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பு.
இந்திய பெருங்கடலில் இலங்கையை காரணமாக வைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் விரும்பவில்லை. நமட்டு சிரிப்புடன் இந்தியா எனது நண்பன் என ராசபட்சே சொல்லிக்கொள்வது ஒரு ஏளனம் என்பது இந்தியாவுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.
சீனாவை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவுக்கு நல்லபிள்ளையாகிக்கொள்ள ராசப்டசே ஒன்றும் தெரியாத பிள்ளை இல்லை. இந்தியாவின் அதிகார பீடம் ராசீவ் குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல என்பது ராசபட்சேவுக்கு தெரியும். என்றாவது ஒரு நாள் ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி காட்டும் என்பதும் ராசப்டசேவின் அச்சம். இதற்காகவே சீனாவின் பிடியை இன்னும் இறுக்கிக்கொள்கிறது இலங்கை.
ஆனால் இந்தியாவின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ, அது இன்று கேள்விக்குறியாக உள்ளது. எதற்காக விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதங்களை அள்ளி கொடுத்தார்களோ அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நண்பன் இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கருணாவாகிவிடுவான் என்ற அச்சம் இந்தியாவுக்கு வர ஆரம்பித்து விட்டது.
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்பது இலங்கையின் சிரம்தாழ்ந்த கோரிக்கை. அதே ரீதியில் தான் இந்தியாவும் இங்ககையிடம் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ளும் கோரிக்கையை வைத்திருக்கிறது.
ஒன்றுக்கொன்று இறுக்கி இழுக்கும் இந்த கோரிக்கை முடிச்சு அவிழ்ந்துவிட்டால், இருநாடுகளும் உச்சகட்ட எதிரிளாகிவிடுவார்கள்.
விடுதலை புலிகளை வளர்த்துவிட்டவர்கள் யார் என்பதை இலங்கை மறந்துவிடவில்லை. அதேபோல இன்னொரு ஈழப்போருக்கு இந்தியா பின்னனி வகுக்க தயாங்காது என்பதையும் இலங்கை யோசிக்காமல் இல்லை.
எவ்வளவு நாள் தான் இந்தியாவிடம் பணிந்திருப்பது? இலங்கை வெகுநாட்களுக்கு முன்பே யோசிக்க துவங்கி விட்டது. ஆனால் இந்தியா இப்போது தான் சுதாகரித்துக்கொண்டுள்ளது.
எவ்வளவு நாள் தான் சீனாவிடம் ஒட்டாதே என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொடுப்பது? தடையை நீக்கமாட்டோம், நீக்கமாட்டோம் என்ற பரிவுப்பேச்சுக்கு இலங்கை தந்த பரிசு நமட்டு சிரிப்பு மட்டுமே.
அடுத்து ஏன் தடையை நீக்கக்கூடாது என்ற பூச்சான்டி காட்டும் வித்தையை இந்தியா கையில் எடுத்திருக்கிறது.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு பின்னால் உள்ள ராசதந்திரமும் இது தான்.
இந்த பூச்சான்டிக்கு இலங்கை பயப்படுமா? அல்லது இதற்கும் நமட்டு சிரிப்பு மட்டும் தான் பதிலா? இதை பொருத்தது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதும், நீட்டிக்கப்படுவதும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத...
-
மனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...
-
அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
// என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ ?//
ReplyDeleteஎன்ன காரணம் ?
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி. முள்ளிவாய்கால் மட்டும் இந்தியனை நம்பிக் கெட்டவாகள் ஈழத்தமிழர்கள். இனியும் நம்புவோம என எண்ணி காய்களை நகாத்தினால் அதற்கான பிரதிபலனை இந்தியாவே அனுபவிக்கும்.
ReplyDeleteஇந்தியாவில் விடுதலைபுலிகள் மீதான தடை நீங்கினால் அடுத்த நாளே இலங்கை இந்தியாவுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ளும்.
ReplyDeleteஇன்னொரு பிரபாகரனை இலங்கை தாங்காது.
- கபிலன்