தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்த உள்ளது.
இதற்காக 6.11.2010 அன்று நடந்த கூட்டத்தில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்ப்பதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட வில்லை. மாறாக இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் நாள் 26.2.2011 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
6.11.2010 அன்றைய கூட்டத்தில் தகவல்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். இதனால் ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது தகவல்தொடர்புதுறை அமைச்சராக கபில்சிபல் உள்ளார்.
இதனால் கிரந்தம் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடையவர்களின் பணி மிகமிக எளிமையாகிவிட்டது. ஆனால் தமிழர்களின் நிலை?
தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்க்கும் முயற்சி குறித்து உலகெங்கும் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாது. இது இணைய ஊடகம் வழியாக மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மூத்த தமிழர் அறிஞர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கும் பணியில் உள்ள பத்திரிக்கைகள் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ் ஒருங்குறியில் கிரந்த குளறுபடி வருவது நிச்சயம்.
தற்பொது உள்ள ஒரே ஆறுதல் வலைபதிவர்கள். இது குறித்து அனைவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். தங்களுக்கு இயன்றவரை இணைய தொடர்பு இல்லாதவர்களிடமும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்.
கிரந்தம் சேர்ப்பதற்கு எதிராக தங்கள் வலைபூவில் ஒருபதிவாவது எழுதி உங்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இணைய தமிழர்களே உங்கள் கையில் தான் உள்ளது தமிழ் ஒருங்குறியில் கிரந்தம் சேர்வதும், அதை தடுப்பதும்.
இந்த பிரச்சனையை அப்படியே 26.2.2011க்கு விட்டுவிடாமல் இயன்றவரை தினமும் நினைவூட்டிக்கொண்டே இருங்கள்.
கூட்டு முயற்சிக்கு என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்.
விபரங்களை தெரியப்படுத்துங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
உங்களுடைய நம்பிக்கையான பின்னூட்டங்களும், வார்த்தைகளும் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது நாம் விரைவில் சாதித்துக் காட்டுவோம்.
ReplyDeleteஇம்மாற்றங்களை கண்டித்து ஏற்கனவே பல பதிவுகள் வந்துவிட்டன. இப்போது ஆக்க பூர்வமான வழியில் இதெற்கென என்ன நாம் செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.
ReplyDeleteநன்றி.