இன்று நடக்க உள்ள போக்குவரத்து தொழில்சங்க பொதுதேர்தலில் அதிமுக தொழில்சங்கத்துக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகளுக்கு விசயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உறுதியாகி இருந்தது. ஆனால் அதை இரு கட்சி தலைமையிடமும் தேவைப்படும் நேரத்தில் வெளியிட்டால் போதும், இப்போது இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்ற ஒப்பந்தம் செய்திருந்தன.
காங்கிரசு மற்றும் மதிமுக இதர கட்சிகளின் நிலைபாடுகளுக்கு பின்னர் தே.மு.தி.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
வரும் சனவரி மாதம் சேலத்தில் தே.மு.தி.க மாநிலமாநாடு நடக்க இருக்கிறது. அன்று முறைபடி அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து விசயகாந்த் அறிவிக்க உள்ளார். அதை தொடர்ந்து செயலலிதாவும் கூட்டணிக்கு விசகாந்துக்கு வரவேற்பு அறிக்கை வெளியிடுவது என பேசிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கம் போக்குவரத்து தொழில்சங்க தேர்தலால் கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அ.தி.மு.கவுக்கு விசயகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
No comments:
Post a Comment