Nov 16, 2010

ராசா vs சுப்பிரமணியசாமி : அய்யகோ தமிழகம்?

சுபெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசா மீது வழக்குதொடர வேண்டும் என சுப்பிரமணியசாமி குதித்து வருகிறார்.
 இது சுப்பிரமணியசாமியின் பொதுநல நோக்கு என யாராவது நினைத்தால் அது தவறு.

செயா டி.வி யில் காண்பிக்கப்பட வேண்டும் எனபத்தாக தான் இப்படி குதிக்கிறாரா என்றால் அது ஒரு காரணம் மட்டுமே.
செயா டி.வி.யில் சுப்பிரமணியசாமியின் ஏளனமான பேட்டி சுபெக்ட்ரம் விவகாரத்தை மட்டும் சுற்றி வரவில்லை. தனது ஏளனமான பேச்சு மற்றும் சைகைகள் மூலம் எதோ ஒரு பிரச்சனையை தமிழகத்தில் கிளப்ப நினைக்கிறார்.

 அதே நேரத்தில் சுபெக்ட்ரம் விவகாரத்தில் ராசா குற்றம் செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம். ஆனால் 1 லட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.


 இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது தெரிந்த அடுத்த கணமே ராசா பதவிவிலகி இருந்தால் நிச்சயம் அவரை பாரட்டியிருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகள் என்னென்ன நாடகங்கள்....

 இப்போது தமிழகத்தில் ராசாவுக்கு ஆதரவாக சாதிசாயம் பூசி வரும் விளம்பரங்கள், போராட்டங்கள் மிகமிக கேவலமானதாகவே இருக்கிறது.
 ஆனால் கொஞ்சம் ஆழமாக நோக்கும் போது இந்த போராட்டங்களில் எங்கோ ஒரு மூலையில் சின்ன நியாயமும் இருக்கிறது.

சுப்பிரமணிய சாமி போன்ற சாதிவெறி பிடித்தவர்களின் ஆதிக்கம் இன்னமும் அதிகாரமையத்தில் அப்படியே இருப்பது தான் இந்த போராட்டங்களை நியாயப்படுத்துகிறது.

 தமிழகத்தில் சாதிப்பிரச்சனையை அவ்வப்போது தூண்டி விடும் சக்தியாக சில சாமிகள் வலம் வருவதை தடுக்க எந்த சாமி வருவாரோ? (சாமியே இல்லை என்பவர்களும் இதையே செய்யும்போது சாமியை தானே கூப்பிட முடியும்.)


 ராசா விவகாரத்தில் சுப்பிரமணியசாமியின் தலையீட்டை குறைப்பது தமிழகத்துக்கு நல்லது. சுப்பிரமணிசாமி இல்லை என்றால் சுபெக்ட்ரம் ஊழல் ஒன்றும் மூடிமறைக்கப்பட்டுவிடாது. பொதுநல நோக்கத்தோடு பல புத்திசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்கு தொடரட்டும். சுப்பிரமணியசாமி ஒதுங்கி இருக்கட்டும்.

ஆமாம் இடதுசாரி கட்சிகள் வெளிக்கொண்டு வந்த சுபெக்ட்ரம் ஊழக்கு சுப்பிரமணியசாமி எதற்காக உரிமைகொண்டாடிக்கொண்டு அலைகிறார்?


யார் என்ன வழக்கு தொடர்ந்தாலும் அதில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குதிக்கும் இந்த கோமாளியின் நோக்கம் என்ன ?

1 comment:

  1. //ஆமாம் இடதுசாரி கட்சிகள் வெளிக்கொண்டு வந்த சுபெக்ட்ரம் ஊழக்கு சுப்பிரமணியசாமி எதற்காக உரிமைகொண்டாடிக்கொண்டு அலைகிறார்?//
    தவறு. சுப்ரமணியம் சுவாமி தான் முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு ராஜா மேல் வழக்கு தொடர அனுமதி கேட்டது.இவ்வளவு அநியாயம் நடக்கும்போது ஏதோ இவராவது கேட்கிறாரே என்றில்லாமல் இவரையே குற்றம் சொல்வது கொடுமை!

    ReplyDelete

Popular Posts