Nov 30, 2010

தனித்து போட்டியிட்டால் கட்சிகள் பலம் என்ன? கருத்துகணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க 110
தி.மு.க 70
சுயேட்சைகள் 30
பா.ம.க 6
ம.தி.மு.க 4
ம.கம்யூனிசுட்டு 4
கொ.மு.க 3
தே.மு.தி.க 3
இ.கம்யூனிசுட்டு 2
காங்கிரசு 1
பாரதிய சனதா 1
ச.ம.க (சரத்குமார்) 1
இதரம் 1

இந்த கணக்கீடு பொதுமக்கள், வாக்காளர்களிடம் நேரடியாக எடுக்கப்பட்டது அல்ல. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் இவர்களின் கருத்துக்கணிப்பு. கட்சிவாக்காளர்களின் நிலை, மற்றும் தற்போதைய அரசியல் அலை இவற்றை கருத்தில்கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது கட்சிகளின் வாக்கு சதவீதம் அல்ல. தனித்து போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் அப்போது அதிக வாக்குகள் பெரும் நிலையை பொருத்து கட்சிகளின் வெற்றி கணக்கிட பட்டுள்ளது.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கை பொருத்தும் வெற்றிகள் அமையும். அதே போல தேர்தல் நேரத்தில் நிலவும் (அனுதாப அலை அல்லது ஏதொ ஒரு அலை) பொருத்தும் கணக்கீடு வேறுபடும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு பிரபலங்கள், உள்ளூர் பிரபலங்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதெல்லாம் இருக்கட்டும் தனித்து போட்டியிட எந்த பெரிய கட்சிக்கு தைரியம் உள்ளது?

கட்சிகள் தனித்து தான் போட்டியிட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை கூட்டுக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வரலாம்.

4 comments:

  1. விடுதலை சிறுத்தைகள் எங்கே? சிறுத்தைகளுக்கு பலம் இல்லை எனில் ஏன் -கருணாநீதியும் ,காங்கிரஸ்ம் கூட்டுஅணியில் வைத்து இருக்கீறார்கள் .


    சிறுத்தைகளின் அரசியல் பலம்

    http://www.thiruma.in/2010/11/blog-post_10.html

    தொகுதிக்கு -900 ஓட்டு வாங்குகிற சரத்குமார் -1 சீட் வாங்குவார்,விடுதலை சிறுத்தைகள் கடலூர்-2,50,000-ஓட்டு,தர்மபுரி- உள்ளடக்கிய அனைத்து -வட மாவட்டங்களில் தலா -10,0000 ஓட்டு வாங்குகிற விடுதலை சிறுத்தைகள் 1 சீட் வாங்கமாட்டார்களா ?

    விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை!!!

    சாதி வெறியை -இங்கு காட்டதே? நாயமாக எழுது-இல்லை என்றால் -மூடிகிட்டு இரு !!

    -
    TS
    மருதிபட்டி -அஞ்சல்
    அரூர் -வட்டம்

    ReplyDelete
  2. திரு. ரவுசு

    இது கட்சிகளின் வாக்கு விகிதம் அல்ல. வெற்றி வாய்ப்புக்கான கணிப்பு மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளோம்.

    திருமாவளவன் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதை துறந்து, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் 1 இடம் விடுதலைசிறுத்தைகளுக்கும் உண்டு போதுமா?

    அப்புறம் சாதிவெறி இதை தவிர வேறு ஒன்றுமே உங்களுக்கு தெரியாதா?

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதில் மிகவும் கீழ்த்தனமாக உள்ளது.

      Delete
  3. சிறப்பாக சொன்னிர்கள்

    ReplyDelete

Popular Posts