ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை.
நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை. 4 பேர் பேட்டி கொடுத்ததை, இவர்கள் மட்டுமே பொது மக்கள் அல்ல.
தொலைகாட்சியில் தெரிய வேண்டும் என்றால் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சொன்னால் என்ன எதற்கு என்று கேட்காமல் பட்டாசு வெடிப்பபவர்கள் எத்தனை பேர் வேண்டும்? (அதற்காக பட்டாசு வெடித்தவர்களை நான் கொஞ்சைப்படுத்தவில்லை)
மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்... இதை பத்திரிக்கைகள் சாதகமாக பயன்படுத்தகூடாது.
பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்கிறதை எழுதவேண்டும் என்ற இதழியல் கொள்கை பத்திரிக்கை விற்பனைக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரும்.
உண்மையை எழுதவேண்டும் அது தான் பத்திரிக்கை தர்மம்.
அதை எத்தனை பத்திரிக்கைகள் செய்தன?
என்கவுன்டர் தவறானது. போலீசாரின் கோழைதனம் என்று கூறியவர்களின் பேட்டிகள் தொலைகாட்சியிலும், பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டதா?
ஒரு சாரர் கருத்தை வெளியிட்டால் அது பத்திரிக்கைகள் கருத்தே தவிர, பொதுமக்கள் கருத்து அல்ல.
நான் பல பேரிடம் நேரடியாக கேட்டேன்
எனது கேள்வி இது தான்.
கேள்வி: மோகன்கிருட்டிணன் என்கவுன்டரை வரவேற்கிறீகளா?
பதில் : ஆமாம்.
கேள்வி : மோகன கிருட்டிணன் என்கவுன்டர் போலீசார் திட்டமிட்டு செய்ததா? தற்செயலா?
பதில் : 100 % திட்டமிட்டு செய்தது தான்.
கேள்வி : பின் ஏன் அதை ஆதரிக்கிறீர்கள்
பதில் : குழந்தைகளை பாலியல் வன்முறை படுத்தி கொன்றவனுக்கு இப்படிப்பட்ட தண்டனைகள் தான் தர வேண்டும்.
கேள்வி : மோகனகிருட்டினன் தான் உண்மையான குற்றவாளி என்று தெரியுமா?
பதில் : தெரியாது,
கேள்வி : மோகனகிருட்டிணன் பணம் பறிக்கும் நோக்கத்துடன் காரில் கடத்தினான், நண்பன் மனோகர் பாலியல் வன்முறை செய்தான். பயந்துபோய் இருவரும் குழந்தையை கொன்றார்கள். இது தான் போலீசு தரப்பு குற்றசாட்டு தெரியுமா?
பதில் : அப்படியா
கேள்வி: ஆமாம். இப்படி இருக்க பாலியல் வன்முறை படுத்தி கொன்றவனை விட்டுவிட்டு, கொன்றவனை மட்டும் கொன்றதை எப்படி கருதுகிறீர்கள்
பதில்: இதில் இப்படி எல்லாம் விசயம் இருக்கா.
கேள்வி : போலீசு உண்மையிலுமே மக்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்திருந்தால் முதலில் யாரை என்கவுன்டர் செய்திருக்க வேண்டும்.
பதில்: பாலியல் வன்முறை படுத்தி கொன்ற மனோகரை தான்.
கேள்வி : பின் ஏன் அவசர கதியில் மோகன கிருட்டிணனை கொன்றார்கள்
பதில்: அப்படினா வேறு எதாவது காரணம் இருக்கனும்.
கேள்வி : இதுவரை இறந்த குழந்தைகளின் பெற்றோர் காவல்நிலையம் வரவில்லை ஏன்?
பதில்: அப்படியா?
கேள்வி: இப்போது ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள் மோகனகிருட்டினன் என்கவுன்டர்?
பதில் : அந்த குழந்தைகள் சடலத்தை பார்த்தா கண்ணீர் வருது, அந்த கோபம் தான். ஆனா நீங்க சொல்லரதை எல்லாம் வைத்து பார்த்தால் பின்னனி ஏதோ விசயம் இருக்கு போல தெரியுதுங்க.
கேள்வி : இந்த என்கவுண்டரை கொண்டாடினீர்ளா?
பதில் : அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. யாரை நம்பரதுனே தெரியலை. முதலில் மனசுக்கு சரினு பட்டுச்சு. இப்ப கொஞ்சம் யோசிக்க தோணது. இனியும் என்னவெல்லாம் வருமோ?
இது தான் உண்மை.
மக்கள் இந்த என்கவுன்டர் குறித்து சந்தேகம் கிளப்ப ஆரம்பித்துவிட்டார்கள்..
இப்போது உங்கள் கருத்தை சொல்லுங்கள்
இந்த என்கவுன்டரை வரவேற்கிரீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
No comments:
Post a Comment