காங்கிரசு திமுக கூட்டணி முறிவை தொடர்ந்து திமுக அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. அதே போல மத்தியில் காங்கிரசு அரசும் கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது தமிழக சட்டசபையில் திமுக 99, பாமக 18 விடுதலை சிறுத்தைகள் 2 என மொத்தம் 119 ஆதரவு உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 போதும். ஆனாலும் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. திமுகவின் சபாநயகர் வாக்களிக்க முடியாது.
தற்போதைய தமிழக சட்டசபை கட்சிகள் பலம்
திமுக..........99
பாமக......... 18
விசி............. 2
மொத்தம் 119
அதிமுக 57
கம்யூ 15
மதிமுக 3
தேமுதிக 1
மொத்தம் 76
காங்கிரசு 34
சுயேட்சை 1
மத்திய அரசில் திமுக ஆதரவை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரசு அரசுக்கும் சிக்கல் உள்ளது. தற்போது வெளியில் இருந்து ஆதரவு தரும் முலாம்சிங் உட்பட கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றால் மத்திய அரசும் கவிழும்.
No comments:
Post a Comment