விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது.
சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது.
அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை.
அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது.
அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே.
அதே போல தான்.
நடிகைகளின் அந்தரங்களை வெளியிடுவதால் எந்த பொதுசனத்துக்கும் ஒரு பருக்கை சோறுகிடைக்கப்போவதில்லை. ஆனால் வெளியிடும் பத்திரிக்கை முதலாளி குறைந்தது பத்து வட்டல் சோறாவது திண்ணலாம்.
விசயகுமார் - வனிதா குடும்பத்தில் நடக்கும் சண்டை இந்தியாவில் வேறு எந்த குடும்பத்திலும் நடக்காத சண்டை அல்ல. அது பொதுநோக்கு சண்டையும் அல்ல. அப்படி இருக்க இந்த பத்திரிக்கைக்கு மட்டும் அதில் என்ன அலாதி பிரியம்.
தங்கள் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை என்று கூறும் மனசாட்சி உள்ளவர்கள் விசயகுமார் - வனிதா சண்டையை விமர்சித்து எழுதட்டும்.
பின்குறிப்பு: தன் வீட்டு சொத்து சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
-
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும். //
ReplyDeleteஅதே.
:(
நண்பரே அவுங்க வீட்டுல உள்ள விஷயத்தை அவுங்களே ஒண்ணா கூடி பேசி முடிச்சுக்கணும்.
ReplyDeleteஅவுங்க குடும்ப விஷயத்தை மீடியாவுக்கு தெரிவுக்கும்போது அது அப்படித்தான் வரும். இரண்டாவது
நம்ம மீடியாவுக்கு சின்ன தீகுச்சி இருந்த பத்தாது பெரிய தீ பிழம்பா வந்துரும்ல.