Oct 9, 2014

வைகோ ஒரு தமிழரா?

திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிட இயக்கத்தின் கடைப்புலி என கலைஞர் கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர் வைகோ. ஈழத்தமிழர்களுக்கான வைகோவின் குரலை யாரும் சந்தேகிக்க முடியாது. தமிழக நலன்களின் வைகோவின் துணிச்சலான போராட்டங்களை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டிட முடியாது. வைகோவின் தமிழ் புலமையையும், ஈடுபாடும் உயரியவை. தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழர்களுக்கு ஒரு இன்னல் வந்தாலும் முதலில் குரல்கொடுப்பவர் வைகோ தான். 

ஆனால் செயலலிதா விசயத்தில் மட்டும் வைகோவின் அரசியல் நாகரீகம் சற்று தரம் தாழ்ந்ததோ என்று சந்தேகம் எழுகிறது.


செயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்ற வைகோ, அதேநேரம் தமிழக முதலமைச்சரை கைது செய்த முறையை கண்டித்திருக்க வேண்டும். செயலலிதாவும் ஒரு தமிழர் தான். செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவிரவாதத்தை வைகோ வேடிக்கை பார்ப்பது விசித்திரமாக உள்ளது. தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர் தனது அரசியல் எதிரிக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

அரசியல் எதிரி வேறு, தமிழர் நலன் வேறு. இதை வைகோ புறிந்துகொள்ள வேண்டும். 

தமிழர் நலனில் உண்மையில் அக்கறை உள்ளவர் என்றால் வைகோ உடனடியாக செயலலிதா மீது திணிக்கப்படும் சட்ட தீவிரவாத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக முதல் அமைச்சரை அவமதித்தது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதித்த செயல். இதற்கு வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.

கலைஞருக்கு பின்னர் செயலிதாவை எதிர்க்கும் திறன் வைகோவுக்கு தான் உள்ளது. அதனால் தான் வைகோவிடம் இந்த அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன்.

ம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்த கலைஞரின் அனுபவம் வைகோவிடம் தான் உள்ளது. அந்த அனுபவம் கலைஞருக்கு பின்னும் தமிழக அரசியல் களத்தில் தேவை. வைகோ அதை ஈடுசெய்வார் என நினைக்கிறேன்.

செயலலிதாவை அரசியல் எதிரியாகத்தான் வைகோ பார்க்க வேண்டுமே தவிர, மற்ற கட்சி தலைவர்களை போல பழி தீர்க்கும் எண்ணம் கூடாது. வைகோவின் அரசியல் நாகரீகத்தை மதிக்கும் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த பதிவு.

7 comments:

 1. ஜெயலலிதா கைது குறித்து உங்கள் தொடர்பதிவுகளைப் படித்து வந்தேன். கடைசியில் வைகோ நோக்கி விரலை நீட்டியிருக்க வேண்டாம். :-)

  ஜெயலலிதா இதே சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்தவர். விசாரணைக் காலத்தில் பிணை பெற்று வெளியில் உலவி வந்தார். அவர் மீதான குற்றம் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டவுடன் தானாகவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணை முடிவுக்கு வந்து அவர் உள்ளே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதிலே நீதிபதியின் குற்றமொன்றுமில்லை. வைகோ தட்டிக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

  மேல் முறையீடு செய்து அது நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மீண்டும் பிணை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவரை சிறையிலிருப்பது தவிர்க்க முடியாதது.

  இப்பிரச்சினையை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகவோ, இனக்குழுக்குழுக்களுக்கு இடையேயான பிரச்சினையாகவோ மாற்ற முயற்சிப்பது தேவையற்றது.

  ReplyDelete
  Replies
  1. திரு பொதிகை செல்வன்

   செயலலிதா குற்றம் செய்யவில்லை, அல்லது நீதிபதி குன்காவின் தீர்ப்பு தவறு என்பது அல்ல எனது வாதம். தமிழக முதல் அமைச்சரை சிறையில் அடைத்தது, தொடர்ந்து வழக்கு விசாரணை நாடகமாடுவது, காரணம் ஏதும் இன்றி சாமீன் மறுப்பது போன்றவற்றை தான் எதிர்க்கிறேன்.

   நீதிபதி குன்கா நேர்மையானவராக இருந்திருந்தால் செயலலிதாவை முறைப்படி தண்டித்து இருக்க வேண்டும். நீதிபதி ரத்தினகலா நேர்மையானவராக இருந்திருந்தால் செயலலிதா வழக்கை தான் விசாரிக்க விரும்பாததன் காரணத்தை கூறி இருக்க வேண்டும். நீதிபதி சந்திரசேகரா நேர்மையானவராக இருந்திருந்தால் இருதரப்பினரின் வாதபிரதிவாதங்களை கேட்டிருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல் நீதிமன்றத்தின் ஈகோவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கும் 18 ஆண்டுகள் வழக்கை இழுத்து அடித்ததாக கூறப்படும் செயலலிதாவுக்கும் என்ன வேறுபாடு?

   இந்தியாவே செயலலிதா மீதான சட்ட தீவிரவாதம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகளோ ‘‘அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’’ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் வைகோவும் சேர்ந்துவிடக் கூடாது என்பது தான் எனது கோரிக்கை.

   செயலலிதா பிரச்சனையை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையாகவோ, இனக்குழுக்களுக்கு இடையேயான பிரச்சனையாகவோ நான் குறிப்பிட வில்லை, கர்நாடக நீதிமன்றத்தின் சட்ட தீவிரவாதத்துக்கு எதிராக தான் எழுதுகிறேன். கேரள நீதிமன்றம் இப்படி நடந்துகொண்டிருந்தால் கேரள நீதிமன்றத்தின் அநீதி என்று தான் கூற முடியும். நீதிமன்றங்கள் மாநிலங்களின் பெயரில் இருப்பதால் மாநில பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது அவ்வளவே.

   செயலலிதா ஒரு தமிழர். அவற் மீதான சட்ட தீவிரவாத்தை எதிர்த்து குரல்கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. அந்த வகையில் தான் வைகோவுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

   எங்கோ மலேசியாவில், துபாயில், சிங்கப்பூரில், சிறையில் அடைக்கப்படும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் நாம், நமது மாநில முதல் அமைச்சர் செயலலிதாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க கூடாதா?

   செயலலிதாவின் தவறுகளை சுட்டிக்காட்ட, எதிர்க்க நமக்கு உரிமை இருக்கிறது. அதே உரிமை செயலலிதாவுக்கு தொடுக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கவும் இருக்க வேண்டும்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. kindly explain where is here legal terrorism? What you say is unsusbtantial. Was there also legal terrorism in Lallu's case? or In Raja or Kanizhi's case when they were in jail for weeks together? YOu are unnessecarily sensitiving the issue.

  ReplyDelete
  Replies
  1. திரு பெயரிலி

   முதல் அமைச்சர் பெரியவரா, நீதிபதி பெரியவரா? என்ற ஈகோ Judicial Terrorism என உங்களுக்கு தெரியவில்லையா?
   காரணமே இல்லாமல் வழக்கை ஒத்திவைப்பது Judicial Terrorism இல்லையா?
   வாதபிரதிவாதங்களை மதிக்காமல் தானே ஒரு தீர்ப்பை எழுதுவது Judicial Terrorism இல்லையா?
   சாமீன் அடிப்படை உரிமை இல்லை என்பது Judicial Terrorism இல்லையா?

   லாலுபிரசாத் முதல் அமைச்சராகவோ, அமைச்சராகவோ இருந்தபோது கைது செய்யப்பட வில்லை. 100 நாள் கடந்து சாமீன் வழங்குவதற்கும் உடனே சாமீன் வழங்குவதற்கும் என்ன வேறுபாடு என்பதை உங்களால் விளக்க முடியுமா?

   ராசாவுக்கும், கனிமொழிக்கும் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என்று விசாரணையின் போது தான் சாமீன் மறுக்கப்பட்டது. செயலலிதா வழக்கில் விசாரணைகள் முடிந்து விட்டன. மட்டுமல்ல செயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவர் நாட்டை விட்டு தப்பிக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு சாமீன் மறுப்பது Judicial Terrorism தான்.

   செயலலிதா கைதுக்கு முன்னர் தமிழக காவல்துறையை கலந்து ஆலோசிக்காத நீதிபதி குன்கா தான் sensitiving செய்திருக்கிறார். சட்டப்படி அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும்.

   Delete
 3. Replies
  1. திரு. ராசதுரை அருள்ராசு

   வைகோ மீதான எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். தனிப்பட்ட விதத்தில் வைகோவை குறைகூறவில்லை. நன்றி.

   Delete

Popular Posts