Dec 12, 2010

இன்று இரவு ராசா கைது ? : மத்திய அரசு கவிழும் சூழல்ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 

செய்தி படிக்க இங்கு க்ளிக் ...

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைதுஇன்று இரவு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்படலாம். அடுத்த கனமே மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பபெற திமுக தயாராகிவருகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் - உளவுதுறை அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுவரும் செய்தியின் அடிப்படையிலேயே அமைகிறது இந்த செய்தி.

இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திடீர் என நேற்று மாலையே முதல்வர் வருகை ரத்துசெய்யப்பட்டது. இதற்கு முதல்வரின் உடல்நிலை சரியில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் மனநிலை தான் காரணம் என்பது இலைமறை செய்தி.

ராசா கைது குறித்து நேற்று காலையே முதல்வருக்கு பிரணாப் முகர்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த கருணாநிதி, ராசா கைது செய்யப்பட்டால் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திமுக திரும்ப பெரும். அதே போல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், திமுகவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் விபரத்தையும் கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

கருணாநிதியின் இந்த அதிரடி காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் என்பதை போட்டு உடைத்துள்ளார் பிரணாப் முகர்சி.

கனிமொழி தற்கொலை செய்துகொள்வதாக சொன்ன நீராராடியாவின் தொலைபேசி பேச்சால் கனிமொழி தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அதையும் மீறி கனிமொழி வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்த திட்டமிட்டிருப்பது தான் திமுக வை உச்ச கோபத்திற்கு கொண்டுபோயுள்ளது.

இந்த பிரச்சனையை தன்மான பிரச்சனையாக கருதி மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவீரமாகியுள்ளார். அதே நேரத்தில் செயலலிதாவின் ஆதரவை நம்பவும் காங்கிரசு தயங்குகிறது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு காங்கிரசு வந்துள்ளதாக தெரிகிறது.

இன்று நள்ளிரவு முதல் மத்திய மாநில அரசியல் சூடு அனல்பறக்கபோகிறது.

11 comments:

 1. இப்போது நான் தூங்கச் செல்கிறேன். காலையில் அந்த செய்தியைக் காது குளிர கேட்க வேண்டும்..!

  ReplyDelete
 2. கவிழ வேண்டும்!இத்தாலிச் சனியாளின் இராச்சியம் ஒழிய வேண்டும்!குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!கொத்துக்,கொத்தாக கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும்!

  ReplyDelete
 3. // YOGA.S கூறியது...
  கவிழ வேண்டும்!இத்தாலிச் சனியாளின் இராச்சியம் ஒழிய வேண்டும்!குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!கொத்துக்,கொத்தாக கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும்!//

  ஏன்.. துண்டு துண்டாய்க் கிடந்த ராசீவ் காந்தியை மறந்து விட்டீரோ..அந்தப் பழிக்கு யார் யாரை சாபமிடுவதாம்..?

  ReplyDelete
 4. //பெயரில்லா பெயரில்லா கூறியது...

  // YOGA.S கூறியது...
  கவிழ வேண்டும்!இத்தாலிச் சனியாளின் இராச்சியம் ஒழிய வேண்டும்!குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!கொத்துக்,கொத்தாக கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும்!//

  ஏன்.. துண்டு துண்டாய்க் கிடந்த ராசீவ் காந்தியை மறந்து விட்டீரோ..அந்தப் பழிக்கு யார் யாரை சாபமிடுவதாம்..? //

  ராஜீவ் காந்தி எதற்காக சிங்களப் படையுடன் இணைந்து தமிழர்களைக் கொல்ல இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்?

  செய்த வினை சுடுகிறது!!
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!!

  ReplyDelete
 5. //செய்த வினை சுடுகிறது!!
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!!//

  இது ராஜீவைக் கொன்றவர்களுக்கு பொருந்தாதா?

  ReplyDelete
 6. [[ரம்மி சொன்னது…

  //செய்த வினை சுடுகிறது!!
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!!//

  இது ராஜீவைக் கொன்றவர்களுக்கு பொருந்தாதா? ]]

  ஓ..! பேஷா பொருந்துமே..!
  ஆனால், யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதுதானே விஷயம்?
  இது நிற்க வேண்டுமானால் எல்லோருமே தத்தம் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். இது நடக்கக்கூடியதா?

  ReplyDelete
 7. [[பிளாகர் ரம்மி கூறியது...

  //செய்த வினை சுடுகிறது!!
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!!//

  இது ராஜீவைக் கொன்றவர்களுக்கு பொருந்தாதா?]]

  நான்கு வருடங்களுக்கு முன், என் வீட்டு வாசலில் சில குடிகாரர்கள் வந்து அமர்வதும் சலசலவென பேசுவதுமாக இருந்தனர். அவர்களும் அதே தெருவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வீட்டுக்காரிகளும் சேர்ந்து கொண்டுதான் நாராசமாக பேசுவார்கள். மரியாதையாக சொல்லிப் பார்த்தேன் அவர்களிடம். சீறிக் கொண்டு வந்தார்கள். என் அம்மா "வேணாம்டா..வந்துருடா" என்றார்கள். அவர்கள் தொல்லை பொறுக்க மாட்டாமல் வேறு வீடு குடியேறிவிட்டோம். எனக்கு வேறு வீட்டுக்கு வழி இருந்தது. ஒட்டுமொத்த ஈழ தமிழர்களும் வேறு நாட்டிற்குப் பெயர முடியுமா???

  இதுவே அது என் சொந்த வீடாக இருந்து.. ரெண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மோதியிருந்தால் என் கையோ, காலோ முறிவது நிச்சயம்!!

  என்னை, என் மக்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்????

  ReplyDelete
 8. //Sundar said...

  நன்றி. இங்கு இதுதான் நடக்கிறது. இங்கு எல்லோரும் வெறுமனே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன பிரயோசனம்? தாத்தா போனால், ஆத்தா... அதுவும் போனால், சுடாலின் அல்லது கிழகிரி அல்லது ராஜாமொழி. நீங்கள் எழுதுவதைக்கண்டு அவர்களுக்கு வருத்தமே இல்லை.

  “என் மூஞ்சியிலேயெ நேரே வந்து துப்பிக்கோ, என் வீட்டுவாசல்ல வந்து கக்கா போ. எல்லாம் பன்னு. எனக்கு எந்த வெக்கமும் இல்ல. என்ன, போகும்போது, ஒரு 5c குடுத்துட்டு போயிடு. எனக்கு அதுதான் முக்கியம்”

  இந்த மன்நிலையில் இருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்?

  காவல்துறயிடம் இருந்தும் நியாயம் கிடைக்காது, நீதிமன்றம்? அவங்களுக்கும்தான் வீடும் மனையும் போகுதே!

  என்னதான் முடிவு?

  நீங்கள் நிறைய எழுதி, blog-ல் உங்களுக்கான hit அதிகமானது (மட்டும்) தான் சந்தோஷமான விஷயம்...//

  இதற்கு என்னதான் முடிவு? என்பதற்கு மாற்றுவழிகளில் விடைதேட விவாதிக்கலாம். எப்போதும் தங்கள் உரிமைக்காக பொதுமக்கள் போராடிக்கொண்டோ, வழக்காடிக் கொண்டோ இருக்க முடியாது. அது சரியான ஜனநாயகமும் அல்ல.

  ReplyDelete
 9. முந்தைய பின்னூட்டத்தை எடுத்து விடுங்கள். பிளாக் மாறி வந்து விட்டது.

  ReplyDelete
 10. //ஓ..! பேஷா பொருந்துமே..!
  ஆனால், யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதுதானே விஷயம்?
  இது நிற்க வேண்டுமானால் எல்லோருமே தத்தம் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். இது நடக்கக்கூடியதா?//

  ஒன்றை மறன்ரிட்டீர்..

  இனப்பற்றைவிட நாட்டுப்பற்று மேலானது.. இந்தியாவின் தலைவன் என்பவன் ராணித் தேனீயைப் பொன்றவன்.உங்கள்ட சிரிலங்காவப் பொல் இந்தியாவையும் தலைவனைக் கொன்ரதால் ஒரு மதவெறிக் கும்பலிடம் நாட்டை விடத்தெரிந்தீர். இது எவ்வகையில் நாயம். இத இந்திய மக்கள் மரக்கவில்லா மன்னிக்கவும்மில்லா..

  ReplyDelete

Popular Posts