சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான்.
அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்கள். ஆனால் இன்று இந்தியாவில் மக்களாட்சி என்ற பெயரில் மீண்டும் ஒரு நபர் ஆட்சியை தானே இருக்கிறது. சுதந்திரம் முதலே போலி இந்தியாவையும் போலி மக்களாட்சியையும் திணித்தது ஏன்? அதை எதிர்த்து தான் தந்தை பெரியார் உள்ளிட்டோர் மாநில சுயாட்சி கொள்கையை முன்வைத்தார்கள். ஆனால் இன்று மாநில சுயாட்சி பற்றி பேசுவதே இ¬றாண்மைக்கு எதிரானது என்ற அளவுக்கு வந்துவிட்டது.
மாநில சுயாட்சி, பஞ்சாயத்து ராசியம், கிராம தன்னாட்சி என்ற அற்புதமான கட்டமைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் 60 ஆண்டுகளாகியும் அது வெறும் ஆவணமாகதானே இருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் கட்டமைப்புகளை படித்துபாருங்கள். அதில் குறிப்பிட்ட மாநில சுய ஆட்சியும் பஞ்சாயத்து ராசியங்களும் எங்கே போயின. ஏன் செயல்படுத்தப்படவில்லை?
மத்திய மாநில அரசுகளின் கைபாவையாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டதன் காரணம் என்ன?
100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் எத்தனை பேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது. 99 கோடி பேருக்கு அரசியல் அறிவு இல்லை. மீதம் 1 கோடி பேரில் 50 லட்சம் பேர் ஆட்சிபணி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என்ற பெயரில் ஆதிக்க வர்கத்துக்கு கூப்பாடு போடுகின்றனர். 50 லட்சம் பேர் அரசியல்வாதிகள், தொழில்அதிபர்கள் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர்.
இந்த ஒரு கோடி பேர் தான் இந்திய மக்களா? இவர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள். மற்றவர்கள் வெறும் வாக்கு இயந்திரம் மட்டும் தானே.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி தென்கோடியில் உள்ள எனக்கு என்ன தெரியும்? இத்தாலியில் பிறந்து இந்தியாவில் மருமகளான சோனியா குறித்து என்ன தெரியும்? அல்லது மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் எனது எண்ணங்கள், வாழ்க்கைபோராட்டம் எதாவது தெரியுமா? நான் பட்டினி கிடப்பது கூட தெரியாத ஒரு பிரதமர் எனக்கு தேவையா?
இந்த நாட்டில் எந்த பொருளையும் நான் வரி செலுத்தாமல் வாங்க முடியாது. அப்படி வரி செலுத்தும் எனக்கு போலி ஓட்டுரிமை அல்லாமல் வேறு என்ன உரிமை இருக்கிறது.
என் ஊராட்சி மன்ற உறுப்பினரை என்னால் கண்காணிக்க முடியும், அவரிடம் எனது குறைகளை சொல்ல முடியும். என்னையும் அவரால் நேரடியாக பார்க்க முடியும். ஆனால் அவரே அதிகாரம் அற்றவராக இருந்தால் என்ன செய்வது?
போதிய கண்காணிப்பு இல்லாமல் மக்களாட்சியை செயல்படுத்தியது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
இன்று சனநாயகத்தின் நான்கு தூண்களும் யார் கையில் உள்ளது? மக்கள் கையிலா? மக்கள் கண்காணிப்பிலா? எல்லாம் முன்னரே குறிப்பிட்ட அந்த ஒரு கோடி பேர் கையில் உள்ளது. அப்படியானால் சனநாயகத்தின் மொத்த உருவம் இவர்கள் தானே. மக்கள் வெறும் வாக்கு இயந்திரங்கள் மட்டும் தானே. இதை இயக்குவது கூட அவர்களாக இருக்கும்போது இந்த சனநாயகம் எப்படி சுதந்திரமாகும்?
99 கோடி அடிமைகள் கொண்ட நாடு தான் இந்தியா. 1 கோடி பேரின் அடக்குமுறையில் இருந்து மீண்டு வர ஏன் 99 கோடி மக்கள் பயப்பட வேண்டும்? ஏன் இதற்காக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் கூடாது?
எனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் அதிகாரத்தை நான் எப்படி கண்காணிக்க முடியும்?
உதாரணத்துக்கு :
ஈழப்போருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? ஐ.நாவில் இலங்கை போர்குற்றங்களை விசாரிக்ககூடாது என்று எத்தனை கோடி இந்தியர்கள் சொன்னார்கள்? 99 கோடி இந்தியர்களா? அல்லது 1 கோடி இந்தியார்களா?
எனது ஒப்புதலாக எல்லாவற்றையும் இவர்களே செய்கிறார்கள் என்றால் எனக்கு என்ன விலை இருக்கிறது இந்த நாட்டில்?
என்னை கொண்டே என் தாயை கொலை செய்ய சொல்லும் இந்தியாவின் இந்த குரூரத்துக்கு எப்போது முற்றுபுள்ளி வைப்பது?
நான் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தான் சட்டங்களையும் மசோதாக்களையும் வகுக்கிறார்கள் என்று வாதிட வருபவர்களிடம் ஒரே ஒரு கேள்வி
இந்தியாவில் உள்ள 802 எம்பி களை எடுத்துக்கொள்ளுங்கள். எதாவது ஒரு எம்பியிடம் கடந்த கூட்டுத்தொடரில் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றினார்கள்? நீங்கள் எதற்கு வாக்களித்தீர்கள்? என்ன கருத்தை பதிவு செய்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். தெளிவான பதிலை சொல்லும் ஒரு எம்.பி இருந்தால் இந்த நாடாளுமன்றத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.
எம்பிக்கும் மசோதா என்ன என்று தெரியாது. எம்பியை தேர்ந்தெடுத்தவனுக்கும் தெரியாது. அப்புறம் எதற்கு இந்த இந்தியா?
இந்திய ஆட்சி அதிகாரத்தை புரட்டிபோட வேண்டும். தலைகிழாக மாற்ற வேண்டும். உச்ச அதிகாரம் மக்கள் கையில் கொடுக்கப்பட வேண்டும்.
1 கோடி பேர் கையில் உள்ள ஆட்சி அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்து 100 கோடி பேருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
அதற்கு என்ன வழி? சேர்ந்து யோசிப்போம்
முதலில் இந்திய அரசியலமைப்பில் மாற்றங்களையும், இந்திய சட்ட அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். இதற்க்கு இந்த 1 கோடி பேர்த்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் குற்றம் புரிந்தாலும் அவனுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் கை வைக்க முடியாத ஒரு சட்டம் நம் சட்டம் என்றால். இதை ஒழித்தே ஆக வேண்டும். இது போல ஓட்டைகள் கொண்ட சட்டங்களை செய்துவிட்டு அதற்கு சொந்தம் கொண்டாடும் பல சட்ட தந்தைகள். கேவலமான நிலைமை நம்முடையது. மக்கள் முதலில் இலவசங்கள் பின்னாலும், அரிதாரம் பூசியவர்கள் பின்னாலும் போவதை யார் தடுப்பது?
ReplyDelete[[நான் பட்டினி கிடப்பது கூட தெரியாத ஒரு பிரதமர் எனக்கு தேவைய]]
ReplyDeletewhat a joke!
[[என்னை கொண்டே என் தாயை கொலை செய்ய சொல்லும் இந்தியாவின் இந்த குரூரத்துக்கு எப்போது முற்றுபுள்ளி வைப்பது?]]
u mean ur mom?
hahaha...... dont try to make me laugh
[[இந்தியாவை சுக்குநூறாக உடைக்க வேண்டும்]]
I HAVE ONE DOUBT, Y U PUT THIS TITLE FOR THIS POST?
WHAT U TRYING TO SAY BY USING THIS BLOG?
"Report Abuse" MSG HAS BEEN SEND TO GOOGLE WITH UR POST TITLES.
திரு. ராம் பிரசாத்
ReplyDelete// I HAVE ONE DOUBT, Y U PUT THIS TITLE FOR THIS POST? //
இந்தியாவை உடைக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன். அதில் என்ன சந்தேகம்? மக்களாட்சி என்பது மக்களுக்கு சுதந்திரத்தை தர தானே தவிர கொத்தடிமைகளாக்க அல்ல. இந்த தொடரை தொடர்ந்து படித்துவாருங்கள் இந்தியாவை எப்படி உடைப்பது? அதற்கு இந்திய அரசியல் சாசனத்திலேயே எத்தகு வழிமுறைகள் உள்ளது என்பதை சொல்கிறேன். அதை செயல்படுத்தியும் காட்டுகிறேன்.
எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் நான் சொன்ன 1 கோடி இந்தியர்களில் ஒருவரா? இப்படி பயந்து ஒளிகிறீர்கள்?
// WHAT U TRYING TO SAY BY USING THIS BLOG? //
// "Report Abuse" MSG HAS BEEN SEND TO GOOGLE WITH UR POST TITLES.//
நீங்கள் முதலில் தைரியாக பிளாக்கில் எழுத ஆரம்பியுங்கள். அதுக்கு கூட தைரியம் இல்லாத உங்களுக்கு எல்லாம் மக்களாட்சியின் மகத்துவம் எப்படி புரியும்.
சரிதான் .. பார்போம்.
ReplyDeletePervert mind set. You shit bring Peelam for breaking India. Peelam long ago died. It was killed by one Mr."Bunkar" Prabhakaran. He killed more tamilians than the singalavans and in the war. What is true what is false you shit go and enquire at Peelam. Even a dog would have lived three generations by the 30 years war. Your Bunkar Prabha not allowed people to live in honour for the 30 years.
ReplyDelete