இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர்.
கோவை வாளையாரில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தில் ரதீசு பயிணித்துள்ளார். 52 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். கஞ்சிக்கோடு அருகே வந்தபோது பேருந்தை மறித்து ஏறிய 10 பேர் கொண்ட கும்பல் ரதீசை வெட்டி கொலைசெய்துள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பாரதிய சனதா மற்றும் டி.வை.எப்.ஐ அரசியல் கட்சிகளிடையே மோதல் நடந்தது. கொலை செய்யப்பட்ட ரதீசு பாரதிய சனதா கட்சியில் பொருப்பில் உள்ளவர். எனவே இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் பா.ச.க.,வினர் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது.
எப்போதும் வாகன நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (எண் 47) ஒடும் பேருந்தை மறித்து பேருந்தில் உள்ள 50 பேர் முன்னிலையில் ஒருவரை கொலைசெய்ய முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது?
பகையை, கொலை, வன்முறை இவற்றை வளர்க்க தான் அரசியல்கட்சிகள் என்றால் முதலில் மூடுவிழா கொண்டாட வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
No comments:
Post a Comment