ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல்படும் ஒரு பெண்ணை வைத்து வளைத்துபோட்டனர். திருமணம் முடிந்து எதிர்பார்த்தது போல அரசரும் கொள்ளையர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்.
நாட்டின் சொத்து வண்டி வண்டியாய் கொள்ளை போனது. இதை பார்த்த நாட்டுமக்கள் கொந்தளித்தனர். அயல்நாட்டு கொள்ளையர்களை பிடித்து தண்டிக்கவேண்டும் என கோசமிட்டனர். அரசரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கொள்ளையர்கள் தங்கள் கைபாவையிடம் முறையிட்டனர்.
உடனே அரசனான தன் கணவரை மிரட்டினார் அந்த பெண். எங்கள் ஊர்காரர்களை சிறையில் அடைத்தால் நான் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுவேன். இந்த நாட்டுகுடியுரிமையை இன்னும் நான் தற்காலிகமாக தான் வைத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துவிடுவேன். அப்புறம் உங்கள் நிலை அவ்வளவு தான். என்று மிரட்டியுள்ளார்.
மனைவியின் மிரட்டல்களால் மனஉழைச்சலுக்கு ஆளான ராசாவும் கொள்ளையர்களின் கைபாவையாக நடித்தார். என்றிருந்தாலும் ராசா நம்மை காட்டிக்கொடுத்துவிடுவான். ராசாவை விட நம்நாட்டு பெண்ணே ராணியானால் வசதியாக இருக்குமே என கொள்ளைகூட்டம் திட்டம் போட்டது. இதற்கு ராசாவின் கூட்டாளிகளில் சிலரும் விலைபோனார்கள்.
அப்போதைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த பக்கத்துநாட்டு உயிர்போராட்டத்தை இதற்கு சாதகமாக பயன்படுத்தினார்கள். பலபல பேரங்கள். பக்கத்து நாட்டில் ராசாவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து சிலரை மூளை சலவை செய்தார்கள். அவர்களை வைத்து கச்சிதமாக ராசாவை கொன்றார்கள்.
ராசா கொல்லப்பட்டதும் பழியை தூக்கி பக்கத்துநாட்டு போராளிகள் மீது போட்டார்கள். நாடே கொந்தளித்து நாசமானது.
ஆனால் ராசா இறந்ததும் கொள்ளை கூட்டத்திற்குள் பங்கு பிரச்சனை வந்தது. ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்போம் என ஒருவருக்கு ஒருவர் மிரட்டிக்கொன்டனர். இதனால் கொள்ளை கும்பலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்காலிகமாக திட்டத்தை ஒத்திவைத்தனர்.
உடனடியாக ராசாவுக்கு பின் மனைவியை ராணிக்கினால் சந்தேகம் வந்துவிடும். எனவே ராசாவின் மனைவிக்கு மனஉளைச்சல் வந்தது போல நடிக்கவைத்தார்கள். அதற்கு மாற்றாக நன்றாக பேசக்கூடிய ஆனால் வாயே திறக்காத ஒருவரை ராசாவாக்கினார்கள்.
காலம் கனிந்ததும் திட்டம் போல தங்கள் நாட்டு பெண்னை ராணியாக்க பார்த்தார்கள். ஆனால் நாட்டின் சட்டம் சில சந்தேகம் எழுப்ப உடனடியாக சுதாகரித்தது கொள்ளை கும்பல்.
மீண்டும் ஒரு வாய்திறக்காத பூம்பூம் மாட்டை ராசாவாக்கினார்கள். அவர் பேருக்கு தான் ராசா. ஆட்சி அதிகாரம் எல்லாம் இவர்கள் எதிர்பார்த்தது போல ராணியிடம் தான்.
மீண்டும் அதிகப்படியான கொள்ளை நடந்தது. ஆனால் ராணி மகுடம் சூடும் நாள் தான் தள்ளிக்கொண்டே போனது.
உங்கள் விருப்பபடி ராசாவையே கொன்றுவிட்டீர்கள் பரவாயில்லை. ஆனால் என்னால் இன்னும் ராணியாகமுடியவில்லையே. அதற்கு எதாவது செய்யுங்கள் என்று கொள்ளை கும்பலிடம் அந்த பெண் முறையிட்டார்.
இதற்கும் ஒரு திட்டம் போட்டது கொள்ளை கும்பல். ராசா என்ற பெயருடைய ஒரு எதிர்ஆடு கூட்டத்திற்குள் இருந்தது. இந்த ஆட்டை பலிகடாவாக்கி காரியத்தை சாதிக்க திட்டம் தீட்டினார்கள்.
நினைத்தபடியே கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டார்கள். பலியாடும் பலியிடப்பட்டு விட்டது. இனி ராணி மகுடம் சூடவேண்டியது மட்டும் பாக்கி.
ராணி மகுடம் சூட்ட வேண்டும். இயன்றவரை நாட்டை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கவேண்டும். இறுதியில் ராணியின் தற்காலிக குடியுரிமையையும் ரத்து செய்து விட்டு ராணியோடு தங்கள் சொந்தநாட்டில் செட்டிலாகிவிடவேண்டும். இதுதான் கொள்ளை கும்பலின் திட்டம்.
நாட்டுமக்கள் அப்போதும் சொல்வார்கள் ‘‘வாழவந்த மருமகளுக்கு இப்படி ஒரு நிலமையா? என்ன இருந்தாலும் ஒரு பொண்னுக்கு பொறந்த வீடு தான் தஞ்சம்.’’
இது கதையல்ல நிசம்...
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
ஊரறிந்த ரகசியமாயிற்றே இக் கதை நிகழ்ந்த களம்... இதற்கு பம்பர் பரிசு வேறா... இந்தியாவும் தமிழ்நாடும் உலகளாவிய புகழடைய ஏதோ 'அவர்களால்' ஆன சிறு கைங்கர்யம்!
ReplyDeleteசுப்ரமணிய சாமி இதை தான் ரொம்ப நாளாக சொல்லி வருகிறார்
ReplyDeletetoo too much
ReplyDeleteதிரு. ஆர்.கே சதீசுகுமார்...
ReplyDelete// சுப்ரமணிய சாமி இதை தான் ரொம்ப நாளாக சொல்லி வருகிறார்//
ராசா கொலை குறித்த முழு விவரங்களும் சுப்பிரமணியசாமிக்கு தெரியும். ஏனென்றால் கொள்ளையர்களுக்கு விலைபோன ராசாவின் முக்கிய கூட்டாளி சுப்பிரமணியசாமி தானே.
ராசாவுக்கு பின் தான் எதிர்பார்த்த பிரதமர் பதவி கிடைக்காமல் போனது தான் சுப்பிரமணியசாமியை பைத்தியம் பிடிக்கவைத்தது. அன்றிலிருந்து தான் மந்திரித்து விட்ட கோழியாக உளறிக்கொண்டு இருக்கிறார். உளரல் என்பதால் அது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
ராசாவின் கொலைக்கு பக்கத்துநாட்டு போராளிகள் மீது பழியை போட்ட சுப்பிரமணியசாமிக்கு அப்போதே சரியான தண்டனை கிடைத்துவிட்டது. அதனால் தான் இன்னமும் மந்திரித்த கோழியாக சுற்றிதிரிகிறார்.
திரு. Ravi kumar Karunanithi
ReplyDelete// too too much //
இது கதையல்ல நிசம்...
அதனால் தான் இன்னமும் மந்திரித்த கோழியாக சுற்றிதிரிகிறார்.
ReplyDelete---------------------------
ஹஹாஹா