அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.
கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது.
ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.
50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.
திமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.
திமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.
தேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.
மொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.
ஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.
இப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.
தற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.
அந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.
கனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா? அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
கனி மொழி வீட்டில் சோதனை இட்டல் என்ன கிடைக்கும் ? 0 தான்
ReplyDeleteராசாவின் கைதுக்கு 50 MPக்களை திரட்டி மிரட்டும் கருணாநிதிக்கு ஈழ மக்கள் பலியான பொது தந்தி அடிக்க் சொன்னது நினைவுகு வருமோ...
ReplyDelete//அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.//
ReplyDeleteஇது மட்டுமே இந்த செய்தியின் நம்பக தன்மையை குலைக்கிறது. எல்லோருக்கும் தெரியும். எந்த அரசியல் வியாதிக்கும் நிலையான நட்பும் இல்லை. நிலையான எதிரியும் இல்லை. மேலும், காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு சுய விருப்பு வெறுப்பும் , முதுகு எலும்பும் இல்லை. சோனியா திமுக வேண்டாம் என்று நிலை எடுத்தால், அதை எதிர்த்து வாக்களிப்பதை விடுங்கள், ஒரு முணு முணுப்பயாவது சொல்ல தைரியம் வருமா?
karunanithi can collect support from 50 MP for spectrum only.he cant get it for srilankan tamilians since srilankan tamilians are not his realations,raja Mp is his relation,kanimozhi's acting husband ,stalin ,alagiri are realations so to safe guard them he can collect the 50 MP supports not for srilan kan tamilians
ReplyDelete.
Tamilnadu can survive after the death of karunanithi only.