2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை கருணாநிதி முழு வீச்சாக செய்து வருகிறார். ஆனால் எந்த முயற்சியும் முழுமையான பலனை தருவதில்லை.
காங்கிரசை வெளியேற்றினால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என இடதுசாரிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதே நேரத்தில் பாமக ஒரே ஒரு நிபர்ந்தனையுடன் அணிசேர தயாராகிவிட்டது. தேர்தலுக்கு பின் மத்தியில் அன்புமணி ராமதாசை மேலவை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுதரவேண்டும்.
விசயகாந்த் முழுமையாக அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார். இதனால் காங்கிரசு வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டது. காங்கிரசு வராவிட்டால் மதிமுக, இடதுசாரிகள், கூடவே கொங்கு முன்னேற்ற கழகத்தையும் சேர்த்துக்கொள்வது என அதிமுக முடிவுசெய்துள்ளது.
அதிமுகவுக்கு சீமான் மற்றும் சனவரியில் கட்சி துவங்க இருக்கும் நடிகர் விசய் ஆகியோர் அதரவு தெரிவிக்ககூடும்.
தற்போதைய நிலவரப்படி
திமுக - காங்கிரசு - பாமக - விடுதலைசிறுத்தைகள் - சில இசுலாமிய கட்சிகள்
அதிமுக - தேமுதிக - மதிமுக - இடதுசாரிகள் - கொ.மு.க - புதிய தமிழகம் - சில இசுலாமிய கட்சிகள்
என்ற நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.
சமக பாரதியசனதா போன்றவையும் அதிமுக பக்கம் சாய தாயாராகியுள்ளன.
காலங்கள் மாற கட்சிகளின் கோலங்கலும் மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4 : சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களு...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன். இந்த...
-
முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது ...
///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///எப்புடி,ரங்கோலி?????
ReplyDeleteபெயரில்லா கூறியது...
ReplyDelete///காலங்கள் மாற கட்சிகளின் கோலங்களும்?!மாறலாம்!///
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க!நான் லகரம்,ளகரம் பிழை கண்டு பிடித்துக் கூறவில்லை!கட்சிகளின் குழப்பங்களைக் கிண்டலடித்தேன்!அவ்வளவே!!!!!!!!!!
ReplyDelete