Dec 1, 2010

அலைகற்றை விவகாரத்தில் ஊழல் இருக்கிறதா? நீங்களே தீர்ப்பு எழுதலாம்.

இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம்.

1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த கால அவகாசத்தை திடீர் என 2 மணிநேரமாக குறைத்துள்ளார் ராசா.

2. சனவரி 10 அன்று மாலை 3 மணிக்குள் ஏலத்திற்கான முழு தொகையையும் வங்கிவரைவோலை மூலம் செலுத்துபவர்களுக்கே உரிமம் தரப்படும் என சனவரி 10 மதியம் 12 மணிக்கு அறிவித்துள்ளார் ராசா.

இப்படி அவசர கதியில் ஏலம் நடத்த காரணம் என்ன?

இந்த கடுமையான நெறிகளையும் எதிர்கொண்டு 13 நிறுவனங்கள் மிகமிக எளிதாக ஏலத்தில் பங்கேற்றுள்ளன. முன்கூட்டியே ஏலத்தொகையை வங்கிவரைவோலையாக எடுத்து, வங்கி ஒப்பதல் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக சரியான நேரத்தில் சமர்பித்துள்ளனர்.

2 மணிநேரத்தில் இவர்கள் தயாரானது எப்படி? இவர்களுக்காக ஏன் நெறிமுறைகள் வளைக்கப்பட்டன?

சரி அது எல்லாம் போகட்டும்.

இன்று 100 ரூபாயுக்கு ஏலம் எடுத்த ஒரு பொருளை 6 நாட்களில் எப்படி 600 கோடி ரூபாயுக்கு விற்கமுடிந்தது. அப்படியானால் அந்த பொருளின் அதிகபட்ட விலை 100 ரூபாய் மட்டும் தானா?

தர்மத்திற்கு கொடுப்பதாக இருந்தால் கூட யாரும் 2008ம் ஆண்டுக்கான சந்தை விலையுள்ள ஒரு பொருளை 2001ம் ஆண்டு சந்தை விலை என மதிப்பிட்டு கொடுக்க மாட்டார்கள்

அப்படி இருக்க நாட்டின் முக்கிய தொழில்நுட்பத்தை,  8 வருடம் சந்தை விலை குறைத்து அடிமாட்டு விலைக்கு கொடுத்தார் ராசா. ஏன்

சரி ராசா ஊழல் செய்திருக்கிராரா இல்லையா கணித்துக்கொள்ளுங்கள் ?

1 comment:

  1. ராசா நிரபராதி ஏனா தலித் ஊழல் செய்ய மாட்டான்( வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்).

    ReplyDelete

Popular Posts