அலைகற்றை ஊழலில் திமுகவை விட காங்கிரசுக்கு அதிகபங்கு இருப்பது தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்பட்சத்தில் பிரதமர் மன்மோகன்சிங் ராசினாமா செய்யகூடும் என தெரிகிறது.
நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை தேவை என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இதற்கு காங்கிரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நாடாளுன்ற கூட்டுகுழு விசாரணைக்கு ஒத்துக்கொண்டால் பிரதமர்மன்மோகன் சிங்குக்கு நெருக்கடி அதிகமாகிவிடும். கூட்டுக்குழு முன் விசாரணை கூண்டில் ஏறவேண்டி கட்டாயத்துக்கு பிரதமர் தள்ளப்படுவார். அப்போது ஊழலில் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பை காட்டிக்கொடுக்கவேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு உள்ளது.
மேலும் இதில் காங்கிரசை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால் திமுக கூட்டணி முறியும். அப்படி ஒன்று சம்பவித்தால் எதிர்கட்சிகள் யாரும் தேவை இல்லை திமுகவே போதும் காங்கிரசை வறுத்தெடுக்க.
இப்படி பல பல சிக்கலில் சிக்கி தவிக்கிறது காங்கிரசு. என்னை விட்டுவிடுங்கள் நான் ஒதுங்கிகொள்கிறேன் என பல முறை சோனியாவிடம் மன்மோகன்சிங் சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆனால் அடுத்து தானோ அல்லது ராகுலோ பிரதமர் பதவியில் அமரும்வரை அமைதிகாக்க கேட்டுள்ளார் சோனியா.
இன்று அல்லது நாளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரசு ஒத்துக்கொள்ளும். அப்போது நாடுமுழுவதும் மன்மோகன்சிங் மீது ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தும் வேலையில் காங்கிரசு இறங்கும். இந்த அலையோடு மன்மோகன்சிங் ராசினாமா செய்வார். அந்த அலையைபயன்படுத்தி இத்தாலியா அன்னையோ, ராகுலோ பிரதமர் நாட்காலியில் அமரலாம்.
ராசா ராசினாமா அதை தொடர்ந்து நடக்கும் அத்துனை நாடகங்களுக்கும் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் இயக்குனர்களாக இருக்கின்றனர்.
எப்படியோ பலனடைந்தது திமுக, பலனடைவது அதிமுக, பலியானது மன்மோகன்சிங்+ராசா
இதுதான் இறுதியில் மிச்சமடையும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை என்றால் என்ன இதற்க்கு முன் நடந்ததுண்டா? எனக்கு தெரியாது கொஞ்சம் விளக்கமாக பதிவில் சொன்னால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்
ReplyDeleteதிரு .தொப்பிதொப்பி
ReplyDeleteநாடாளுமன்ற கூட்டு குழு என்பது நடப்பு நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் கட்சி அடிப்படையில் ஒரு குழு அமைப்பர்.
அதில் ஆளும் கட்சி தலைவர் தலைவராக இருப்பார். குழுவில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் (உறுப்பினர் எண்ணிக்கை பலம் அடிப்படையில்) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
இந்த குழு சம்மந்தப்பட்ட பிரச்சனையை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும். இந்த குழுவுக்கு நாட்டின் உச்ச அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கான அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லபோனால் பிரதமர் உட்பட உயர்பதவியில் இருப்பவர்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் இந்த குழுவுக்கு உண்டு.
சட்டத்தின் வழிதான் விசாரிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆனால் இந்த குழுவுக்கு சட்டத்தின் வழிகளில் தான் விசாரனைசெய்யவேண்டும் என்ற நிபர்ந்தனை இல்லை. சுருக்கமாக சொன்னால் நாட்டின் உச்ச அதிகாரம் இந்த குழுவுக்கு உள்ளது.
இந்த குழுவின் இறுதிமுடிவை உச்சநீதிமன்றத்திற்கும் அனுப்பிவைக்கலாம்.
இதற்கு முன்னர் போபசு ஊழல், பங்குசந்தை முறைகேடு உட்பட நான்கு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2004ல் மும்பை பங்குசந்தை முறைகேடுவுக்காக அமைக்கப்பட்டது.