‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 6 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
சொற்பம் லண்டன் தமிழர்கள் ராசபட்சேவுக்கு தண்ணிகாட்டினார்கள் என்றால் அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் உணர்வை மதித்திருக்கிறது. ஆனால் இங்கோ ?
ஒன்றும் இல்லை, நேற்று கோவையில் இலங்கை எம்.பி விரட்டியடிக்கப்பட்டதே லண்டம் சம்பவம் நடந்ததால் தான். அத இல்லாமல் இருந்திருந்தால் போராட்டகாரர்கள் சிறையி, இலங்கை எம்.பி போலீசு மரியாதையுடன் விழாவிலும் கலந்திருப்பார் என்பது தான் நிதர்சன உண்மை.
இங்கு போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போராட்டமும் விலையற்றதாக்கப்படுகிறது. முத்துகுமார் போன்ற பலர் உயிரை மாய்த்தாலும் ஒன்றும் சம்பவிப்பதில்லை. காரணம் அரசியல் நாடகங்கள்.
இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் ஈழத்துக்கான ஆதரவு வந்துவிட்டால் போதும் ஈழம் மலர்ந்துவிடும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது விடுதலைபுலிகள் அமைதிகாப்பதும் இந்த காரணங்களுக்காக தான். சென்ற மாவீரர் நாள் அறிக்கையும் அதை தான் வலியுறுத்தி உள்ளது.
தற்போது மீண்டும் ஈழக்குரூரங்களை உலகம் கவனிக்க துவங்கியுள்ளது. இதை நீர்த்துப்போசெய்ய முயற்சிகள் நடக்கலாம். அதைவிட அரசியலாக்கி தேர்தலில் ஆதாயம் தேடும் அவலங்கள் அரங்கேரலாம்.
தயவு செய்து தமிழர்களே அதை அனுமதித்துவிடாதீர்கள்.
வெருக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் வேறு வழி இல்லை, தமிழ் ஈழம் அமைய ஒரே வழி தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் மனமாற்றம் தான் மிக முக்கியம். இது அரசியல்வாதிகளின் கையில் சிக்கியுள்ள போலிசனநாயகநாடு.
இங்கு நாம் என்ன செய்தாலும் ஆட்சியாளர்களை தாண்டி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஆட்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நம் போராட்டங்கள் வெற்றிபெறும்.
ஈழம் அமைய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? ஆட்சியாளர்கள் மனதில் ஈழகொடூரங்களை எப்படி பதியவைப்பது. அவர்கள் கல்நெஞ்சை எப்படி இளக செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால்...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம...
-
கலையான தொலைக்காட்சியின் ஆதிக்கம் யார்கைவசம் வரும் என்பதில் உச்சபிரச்சனை எழுந்துள்ளது. 2க்கு 60%, 3னின் வாரிசுக்கு 20% கொடுத்ததோடு இன்னாரு...
-
இலங்கை அரசை கண்டித்து காங்கிரசு இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறதாம். இதை தமிழக மீனவர்களும், இன்னபிற தமிழர்களும் நம்ப வேண்டுமாம். இவர்கள் உட்க...
-
கனிமொழியையும் 3ம் பொண்டாட்டி ராசாத்தியையும் காப்பாற்றுவதா? அல்லது ஆட்சியை காப்பாற்றுவதா என்று செய்வதறியாது திகைத்து வருகிறார் கருணாநிதி. க...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
தனிஈழம் அமைவது தமிழக அரசியல் தலைவர்கள் கையில் உள்ளது. /////////////////
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் நீங்கள் புகைப்படம் போட்டிருக்கும் இருவரால் முடியாது