Dec 8, 2010

அலைகற்றை ஊழல் : சோனியா + தாமசு (தப்பித்தார் ராசா)

அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. 

நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா செய்வேன் என்ற மன்மோகன்சிங்கின் அதிரடி முடிவு சோனியாவுக்கு உள்ளுர மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைவராக உள்ள பி.செ.தாமசுவுக்கு உச்சநீதிமன்றம் தரும் தொடர் கண்டணங்கள் தான் சோனியாவுக்கு அடிமேல் இடியாக விழுகிறது.

மன்மோகன்சிங் ராசினாமா செய்தால் அடுத்து வீரமங்கையாக பிரதமர் பதவியில் அமர்வது தான் சோனியாவின் திட்டம். அதற்காக சனாதிபதி மாளிகை, சபாநாயகர் மட்டம் என அனைத்து தரப்பிலும் வழி ஒதுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எழுந்த குடியுரிமை பிரச்சனைக்கும் முற்றுபுள்ளி வைத்தாயிற்று. 

எல்லாம் சரியாக அமையும் நேரத்தில் தான் தாமசு பிரச்சனை வெடிக்கிறது.

கேரளாவை சேர்ந்த தாமசுவுக்கும் காங்கிரசுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கெட்டிக்காரர். இவரை போன்ற ஆட்சிபணி அதிகாரிகளால் தான் ஒன்றும் தெரியாத அமைச்சர்கள் ஊழலுக்குள் தள்ளப்படுகின்றனர். அமைச்சர்களுக்கு ஊழல்செய்ய வழிகாட்டுவது, வற்புறுத்துவது என இவர்மேல் ஏற்கனவே பல குற்றசாட்டுகள் உள்ளது.

கேரளாவில் பாமாயில் இறக்குமதியில் வெளிப்படையாக ஊழல்குற்றசாட்டுக்கு உற்படுத்தப்பட்டார் தாமசு. இவரின் அசாதிய திறமை தான் இவரை மத்திய தொலைதொடர்பு துறை செயலராக மாற்ற உதவியது. தாமசுவின் சேவை தொலைதொடர்புதுறைக்கு மிகவும் தேவைப்பட்டது. 10 ஆயிரம் கோடி லாபத்தில் இருந்த பி.எசு.என்.எல் நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி நட்டத்திற்குள் தள்ள இவர் கடும்பணி ஆற்றினார். அதை விட 2ம் தலைமுறை அ¬லைக்கற்றை ஊழலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த அனைத்து பெருமையும் தாமசுவை சாரும். 

சில சர்வதேச தொழில்அதிபார்களின் செல்லபிள்ளையான தாமசு சோனியாவின் செல்லமானது தனிக்கதை.

தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள், தான் செய்த ஊழல்கள் இவற்றை மூடிமறைக்கவும். தப்பிக்கவும் தாமசுவுக்கு சென்ற ஆண்டு ஊழல்தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பதவி கொடுக்கப்பட்டது.

எதிர்கட்சி தலைவர் சுசுமாசுவராசுவின் கடும் எதிர்ப்பை மீறி பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் தாமசுவை ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தனர். காரணம் சோனியாவின் சிபாரிசு.

தாமசுவுக்கு சோனியா(ஆன்டோனியா) ஏன் சிபாரிசு செய்யவேண்டும்? இங்கு மதம் இனம் என ஏதாவது ஒரு சாயம் பூசினால் அது தவறு. மாறாக ஊழலின் பங்கு அதுதான் முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இனங்க தாமசு ராசினாமா செய்யபோவதாக சென்ற வாரம் செய்தி வந்தது. தாமசுவும் மவுனம் சாதித்தார். சோனியா&தாமசு சந்திப்புக்கு பின்னர், இறுதியாக உறுதியாக ராசினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுவிட்டார் தாமசு. ஆனால் நேற்று நீதிமன்றம் கடுமையாக கண்டித்துவிட்டது. தாமசுவின் நியமனத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சோனியா என்ற ஒற்றை நபர் இந்திய நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆட்சிமன்றம் ஆகியவற்றிற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கிறார். 

ஆனால் சாமனியர்கள் ஐய்யோ பாவம் நம்நாட்டை நம்பி வந்த மருமகள், கணவனை நாட்டுக்காக இழந்தவர், நாட்டுக்காக பேரையே மாற்றிக்கொண்ட காந்தி என்றெல்லாம் இன்னமும் உச்சு கொட்டுகின்றனர்.

நடகட்டும்... நடக்கட்டும்....

அரசியல்வாதிகளும் அரசுஅதிகாரிகளும் கைகோர்த்துவிட்டால் இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

2 comments:

  1. கங்கிரஸ் இப்போது இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது..ஒரு வேளை சோனியாவை பிரதமர் வேட்பாளரக்கி ராஜிவ் போலவே போட்டு தள்ளி அனுதாப ஓட்டுகளை ஆள்ள நினைகிறதா காங்கிரஸ் ?

    ReplyDelete
  2. சோனியாவை யாரும் போட்டுதள்ள முடியாது. சோனியாதான் காங்கிரசை போட்டுதள்ளுவார்.

    ReplyDelete

Popular Posts