Dec 30, 2010

அடித்து நொறுக்குங்கள் போலி இந்தியாவை

இந்தியன் என்பதில் பெருமை பட்டோம் எப்போது தெரியுமா? அண்ணல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை படித்த போது. எவ்வளவு நேர்த்தியாக ஒரு சனநாயகத்தை வடித்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

அம்பேத்காரின் அரசியல் சாசனம் 106 முறை மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. தினம் ஒரு நாட்டுடன் பல ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். எதற்காக நாட்டின் வளர்ச்சிக்காகவா? ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் நாட்டின் ஒவ்வொரு வளத்தையும் அயல்நாடுகளுக்கு கொள்ளை கொடுக்கிறார்கள்.

அலைகற்றை விவகாரத்தில் நாடாளுமன்றம் நடக்கவில்லை என்பது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை பயன்படுத்தி நாடாளுமன்றம் நடக்காமலே 14 மசோதாக்களை நிறைவேற்றினார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியதால் நாட்டுக்கு 150 கோடி இழப்பு என்று வாய்சவடால் விடும் போலி இந்தியர்களே அப்புறம் ஏன் இந்த மசோதாக்களை எல்லாம் நிறைவேற்றினீர்கள்.

ஒவ்வொரு பெரிய பிரச்சனைக்கு பின்னும் பல துரோக மசோதாக்கள் நிறைவேறி விடுகின்றன. இதை யாரும் கண்டுகொள்ளாதது தான் வேதனை.

பலர் இன்னும் இந்தியாவின் பழம்பெருமைகளையே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் தாற்போது இருக்கிற இந்தியா என்பது என்ன? இந்திய மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் அரசாங்கங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் மனிதநேயம் அற்ற அரசியல்வாதிகள், இவர்களுக்கு பாதை வகுத்துக்கொடுக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், அதை சப்பை கட்டு கட்டும் ஆணையங்கள், ஆணையங்களுக்கு துணைபோகும் நீதிமன்றங்கள், இவை அனைத்திற்கும் புரோக்கர் வேலை செய்யும் பத்திரிக்கைகள், இவைகள் தெரிந்தும் தட்டிக்கேட்க வலுவில்லாத சமூக ஆர்வலர்கள், இவை எதுவுமே தெரியாமல் அன்றாடம் பிழைப்புக்கே பிச்சை எடுக்கும் பொதுமக்கள் இது தான் இன்றைய இந்தியா.

இன்று உலகளவில் மனிஉரிமை மீரல்கள் அதிகம் உள்ள ராணுவங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் இந்தியாவுக்கு தான். இலங்கைக்கு கூட 5 இடம் தான். இன்று உலக அளவில் அதிக லஞ்சம் ஊழல் உள்ள நாடு இந்தியா, தினமும் ஒரு நாட்டுடன் பல ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். ஒவ்வொன்றும் மனிதநேயம் துளியும் இல்லாத ஒப்பந்தங்கள்.

சர்வதேசே அளவில் மனித உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் இந்தியாவை ஒரு குரூரமான நாடாக தான் பார்க்கின்றன. 

இந்தியா ஒரு மனிதநேயம் அற்ற நாடு என ஏதோ தமிழன் மட்டும் கொடிபிடிக்கவில்லை, இந்தியா முழுவுதுமே ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

காசுமீரில் இந்தியா செய்யும் அநீதியை அங்கே சென்று கேட்டுப்பாருங்கள், மேற்குவங்கம் உட்பட பகுதிகளில் இந்தியா செய்யும் அநீதிகளை அங்கே சென்று கேட்டுப்பாருங்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையாம். மனிதனின் அடிப்படை உணர்வுகளை கூட அடிமைப்படுத்துவது தான் உங்கள் வேற்றுமையில் ஒற்றுமையா?

இந்த போலி இந்தியாவை அடியோடு அடித்துநொறுக்கிவிட்டு உண்மையான மனிதநேயம் உள்ள இந்தியாவை உருவாக்குவோம் என்று குரல்கொடுங்கள் அது தான் நாட்டுபற்று. அதை விட்டுவிட்டு சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார், தமிழன் தன் சுதந்திரம் குறித்தே பேசக்கூடாது என்பது எல்லாம் போலி இந்தியர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்.

போலிஇந்தியாவின் இறையாண்மைக்காக கொடிபிடிப்பவர்கள் இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

இன்றைய இந்திய சனாதிபதி, நாடாளுமன்றம், ஆட்சிபணி அதிகாரிகள், நீதிமன்றம், தனி ஆணையங்கள், இவைகள் எல்லம் 100% வேண்டாம் குறைந்த பட்சம் 35% நேர்மையாக நடக்கின்றவா? இவற்றில் ஒன்றிலாவது சோனியா உட்பட நச்சு அரசியல்வாதிகளின் அதிக்கம் இல்லாமல் இருக்கிறது என்பதை உங்களால் மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?

நாட்டை சீரழிப்பவர்களை பற்றி பேசினால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்றால் இந்த போலி இந்தியாவையே அடித்து நொறுக்குவதில் ஒன்றும் தவறு இல்லை.

நானும் இந்தியன் தான். எனக்கும் இந்தியாவை சீர்திருத்துவதில் சம உரிமை இருக்கிறது. என் தாய்நாட்டை குறித்து பெருமை பட எனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல என் தாய்நாடு சீர்கெட்டு உலக அரங்கில் மானம் கெடும் போது அதை உடைத்தெரிந்து புதுபிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது.

இந்தியாவின் பெருமையை மட்டும் தான் பேச வேண்டும். அதன் மீது படியும் கறைகளை பற்றி பேசினால் தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்றால் அப்படி ஒரு நாடே தேவையில்லை என்பது தான் எனது கருத்து. 

நிறையை சொல்ல எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ அதே சுதந்திரம் கறைகளை சொல்வதற்கும் வேண்டும்.

இந்தியாவில் ஊழல் இல்லாமல் நிறைவேற்ற பட்ட ஒரு திட்டத்தை சொல்லுங்கள்?

இந்தியாவில் சுரண்டப்படாத ஒரு குடிமகனை காட்டுங்கள்

இந்த அநீதிகள் எல்லாம் எதனால் நடக்கிறது போலி இந்தியாவால் தானே. இந்த போலி இந்தியாவை இன்னும் போற்றிபபாதுகாத்தால் 2020ல் வல்லரசு அல்ல நாற்றம்பிடித்த இந்தியாவை தான் உருவாக்க முடியும்.

இந்த போலி இந்தியாவை தகர்த்து எறிய சில எளிய வழிமுறைகளை ஆய்ந்து வருகிறேன். உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.

6 comments:

  1. தவறு செயும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படவேண்டும். அது எவனா இருந்தாலும் சரி.

    ReplyDelete
  2. இந்த தொப்பி தொப்பி க்கு நான் என் கண்டனத்தை முதலில் பதிவுசெய்ததாக அறிகிறேன். இவன் எந்த காங்கிரஸ் பினாமிக்கிட்ட பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி வாந்ததி எடுக்கிறான் தெரியல... எந்த வன்முறையிலும் பாதிக்கப்படமால் சுகபோகமாக வாழும்இம்மாதிரியான மனித குருரங்கள் இப்படித்தான்.....இவர்களை எல்லாம் மலத்தின் மேல் ஊற்றும் தண்ணியை போன்று நம் மனதில் இருந்து விரட்டிவிடவேண்டும். விட்டு விடுங்கள் அந்த அருவருப்பை பற்றி மேலும் கருத்திடுவது அதை வளர்ப்பது போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. Best Wishes!
    I agree with some points but don't encourge cinema field people, they are only "VAAI SOL VEERARGAL".

    Wish you Happy New Year 2011, will bring all of us with a public cared, good Governace.

    Your thoughts creat an awareness to the society.
    with Best Wishes!
    Sai Gokulakrishna
    http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html

    ReplyDelete
  4. நாட்டின்மீது பற்றுள்ள உண்மையான குடிமகனின் பதிவு.

    இந்த நாட்டில் வாழும் மானமுள்ளவர்களும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று உழைப்பவர்களும் இப்படித்தான் சிந்திப்பார்கள்... செயல்படுவார்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அட நீங்க வேற.அரசு என்பது மக்களுக்கு என்பது ஓல்டு ஸ்டைல்.அரசு என்பது கார்பரேட்டுகளின் கைகூலிகள்,இதான் புதிய ஸ்டைல்

    ReplyDelete
  6. திரு . கமா
    தனிநபர் விமர்சனங்களில் நாகரீகம் பேனலாமே? கருத்து சுதந்திரம் தடைபடக்கூடாது என்பதற்காக தான் உங்கள் கருத்து நீங்கப்படவில்லை. ஆனால் நீக்கப்படவேண்டியது.

    திரு. கோகுலகிருசுணா

    உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். சினிமா துறை அல்லாதவர்கள் வாய்சொல்கூட அடிப்பதில்லை என்பது தான் வேதனை. அதை பார்க்கும்போது வாய்சொல் வீரர்களே தேவலை என்பதே எனது கருத்து.

    நன்றி திரு சீ.பிரபாகர், தொப்பிதொப்பி, குமார்.

    ReplyDelete

Popular Posts