Dec 2, 2010

ராசாவை சாதி காப்பாற்றாது, சட்டம் காப்பாற்றும்!

அலைகற்றை ஊழலில் சிக்கியுள்ள ராசாவை காப்பாற்ற திமுக உட்பட சில கட்சிகள் சாதியை கையில் எடுத்திருப்பது கேவலமானதாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான தொலைதொடர்பு மேம்பாட்டில் சில நெறிமுறைகளை தளர்த்தி கையான்டிருக்கிறார் ராசா.

ராசாவின் செயல்பாட்டால் நாட்டு இழப்பு ஏற்பட்டது தெளிவாக இருக்கிறது. அதே நேரத்தில் இழப்புக்காக ராசாவை குற்றவாளியாக சித்தரிக்க முடியுமா? இதுதான் கேள்வி.

ராசா ஏன் விதிமுளைகளை தளர்த்தினார்? ஏன் சந்தை மதிப்பை குறைத்து கொடுத்தார்? இதனால் ராசாவுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது? இந்த கேள்விகளை பொருத்து தான் ராசா குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

தவறு செய்த ராசாவை குற்றவாளி அல்ல என நிரூபிக்க சாதியை கையில் எடுப்பதில் எந்த பலனும் இல்லை. அது மட்டமான அரசியல் ஆதாயத்துக்கு வேண்டுமானால் பயன்படும்.

சட்டப்படி பிரதமர் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதல் படி தான் ராசா செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிக்பெரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங் ஒப்புதலுடன் நடந்த அலைகற்றை உரிமம் ஒதுக்கீட்டில் எப்படி இழப்பு வரும்? 


தைரியமாக இந்த அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கலாம். ஆனால் கூட்டணி?

பிரதமரின் ஆலோசனைகளை ராசா கேட்கவில்லை, அதை மீறி சுயமாக செயல்பட்டுள்ளார் என மன்மோகன்சிங் நீதிமன்றத்தில் வாதாடலாம்.

ஆனால் எதார்த்தமாக வரும் இந்த கேள்விகளுக்கு மன்மோகன்சிங் என்ன பதில் சொல்லப்போகிறார்.

1. அப்போதே ராசாவின் செயல்பாட்டால் மிகப்பெரிய இழப்பு என்பது பிரதமருக்கு தெரிந்துள்ளது. எச்சரித்துள்ளார். நன்று


2. ஆனால் பிரதமரின் ஆலோசனை மீறி சுயமாக செயல்பட்டு நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய அமைச்சரை  பிரதமர் ஏன் உடனடியாக பதவிநீக்கம் செய்யவில்லை?


3. இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூட்ட இழப்புக்கு காரணமான அமைச்சரை பிரதமர் ராசினாமா செய்ய கோராதது ஏன்? மீண்டும் அமைச்சரவையில் அதே துறையை ஒதுக்கியது ஏன்? 


4. இறுதியில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பிறகு தன் தலைவர் கருணாநிதியின் ஆணைக்கு இணங்க ராசா சுயமாக ராசினாமா செய்தாரே தவிர பிரதமர் ராசினாமா செய்ய கோரவில்லையே ஏன்?

(இதெல்லாம் சட்டப்படி நடந்தது).

ஆக ஒரு பொருளாதார மேதையான பிரதமரே இந்த விடயத்தில் தன் பதவியை தக்க வைக்க சுயநலமாக செயல்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது சாதாரண அமைச்சர் ராசாவின் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும்?

இந்த இழப்புக்கு முழு பொருப்பு இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங் தான்.

இது தான் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணையின் இறுதி முடிவாக இருக்கபோகிறது. அதே கோணத்தில் தான் நீதிமன்றத்தில் வாதங்களும் முன்வைக்கப்பட இருக்கிறது.

எனவே சாதியை கொண்டு ராசாவை காப்பாற்ற நினைக்கும் சாதி அறிவாளிகளே. ராசாவை உங்கள் சாதி காப்பாற்றாது, சட்டம் தான் காப்பாற்றும். ஆதலால் சட்டபுத்தகத்தை படியுங்கள்.., சாதிபித்தை தூக்கி எறியுங்கள்...

2 comments:

  1. பிரதமர் மீது இதில் குற்றம் சொல்ல ஒன்னும் இல்லை, அவரால் பேச மட்டும்தான் முடியும் எதையும் செயல்படுத்த முடியாது. அந்த அதிகாரம் இத்தாலி அன்னையிடம் உள்ளது.இத்தாலி அன்னையின் குடும்பி இப்போது தி.மு.க கையில் உள்ளது,எனவே தி.மு.க வை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. மன்மோகன் சிங்கை தனி மனிதனாக சுதந்திரம்மாக செயல்பட வைத்தால் இவ்வளவு குற்றங்களும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  2. இது போன்று சந்தர்ப்ப சூழ்நிலையில் மாட்டி தவிக்கும் மனிதர்களை பார்த்தால் எனக்கு பரிதாபம் தான் வரும். அதிலும் மன்மோகன் சிங் நிலைமை மோசம் தனது திறமை செயல்படுத்த முடியால், அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டால் தவித்து வருகிறார். இந்தியாவுக்கு கிடைத்த நல்ல பிரதமரை இப்படிப்பட்ட குற்றச்சாட்டால் நாம் விரைவில் இழக்க போகிறோம்.

    ReplyDelete

Popular Posts