Dec 1, 2010

அலைகற்றை ஊழல் : பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு என்ன?

இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோன்சிங்கின் பங்கு தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் பங்கை வைத்து தான் இனி அடுத்தடுத்த அரசியல் நாடகங்கள் அரங்கேறப்போகிறது. குறிப்பாக காங்கிரசில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் காயாக அலைகற்றை ஊழல் பயன்படுத்தப்பட இருக்கிறது.

நாடளுமன்ற கூட்டு குழுவிசாரணை தேவை என எதிர்கட்சிகள் கேட்பதும், முடியாது என காங்கிரசு நடிப்பதற்குமான பின்னனி மன்மோன் சிங் என்ற பூம்பூம்... தான். 

அது குறித்து விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்

தற்போது அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கின் பங்கு என்ன என்பதை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே எடுக்கலாம் என்ற உரிமையை வம்புக்கு கேட்ட தயாநிதிமாறன் கடிதம் தான் மன்மோகன் சிங்குக்கு முதல் செக்.

வேறு வழியில்லாமல் தலையாட்டிய பூம்பூம் , அடுத்தடுத்த கேள்விகளுக்கும் தலையாட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.

பிரதமர் வழிகாட்டுதலில் தொலைதொடர்பு துறை அமைச்சர் முடிவுசெய்து கொள்ளலாம் என்ற நெறிமுறையின் அரசியல் சாணக்கியம் இந்த பொருளாதார மேதைக்கு தெரியவில்லை.?

தயாநிதிமாறன் பதவி பறிபோனது, ராசா பதவிக்கு வந்தார்.

தயாநிதிமாறன் வகுத்துவைத்திருந்த வழியில் ராசா செயல்பட்டார். ஆனால் என்ன கொஞ்சம் அவசரப்பட்டு அதிகஅடி தாண்டி விட்டார்.

தற்போது விழுந்துவிட்ட ராசாவுக்கு தைரியம் சொல்வது, எதிரியானாலும் தயாநிதிமாறன் செய்துவைத்த நெறிமுறை தான்.

அதென்ன நெறிமுறைகள்

1. பிரதமர் மற்றும் டிராய் வழிகாட்டுதலில் துறை அமைச்சர் இறுதி முடிவு எடுக்கலாம்.


2. பாரதிய சனதா ஆட்சி காலத்திலேயே வகுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க தரும் சலுகை விதி

இந்த இரண்டையும் சரியாக பயன்படுத்தி ராசா சாதித்துவிட்டார். ( குற்றம் கண்டுபிடிக்க முடியாத ஊழல்)

ஒவ்வொரு அடியிலும் உள்ள ஆபத்து மன்மோகன் சிங்குக்கு தெரியமல் இல்லை. ஆனால் சிலரின் கடைகண் அசைவில் அத்தனைக்கும் பூம்பூம் மாகவே வேசம் போட்டார்.

ஏலம் முடிந்தது. அப்படி ஒன்றும் எளிதில் ஊழலை கண்டுபிடித்துவிட முடியாது என்ற தைரியம் ராசவை விட மன்மோகன் சிங்குக்கு நிறையவே இருந்தது.

ஆனால் அடுத்த 6 நாளில் காத்திருந்தது பேராபத்து.

தொழில்தொடர்பை ஊக்குவிக்கும் சலுகையில் கொடுக்கப்பட்ட 100 ரூபாய் பொருள் உலக சந்தையில் ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டதும் பிரச்சனை தொடங்கியது.

100 ரூபாய் எங்கே.. ஆயிரம் கோடி எங்கே ?

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. ஏலம் பெறும் வரை மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்ட எல்லோரும் அடுத்த நாளே தன் சுயரூபத்தை காண்பித்துவிட்டனர்.

அன்று முதல் இனி பிரதமர் பதவியை ராசினாமா செய்யும் வரை மன்மோகன் சிங் நிம்மதியாக உறங்கவில்லை, உறங்கப்போவதில்லை.

நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதை என்ற பெயர் எடுத்தவர் மன்மோகன்சிங்

ஆனால் நாட்டின் சுதந்திர வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பாக கருதப்படும் 1.76 லட்சம் கோடி இழப்பீடு இந்த பொருளாதார மேதை பிரதமராக இருக்கும் போது எப்படி சாத்தியமாயிற்று ?

சட்டப்படி எல்லாம் பிரதமர் வழிகாட்டுதல் படிதான் நடந்திருக்கிறது. அப்படி என்றால் 1000 ரூபாய் பொருளை 100 ரூபாயுக்கு விற்பது தான் மன்மோகன்சிங் படித்த பொருளாதாரமா?

அடிமாட்டு விலைக்கு விற்க பொருளதார மேதை தேவை இல்லை. 

எல்லாவற்றிக்கும் பூம்பூம் மாக தலையாட்டியது தான் அலைகற்றை ஊழலில் மன்மோகன்சிங்கின் பங்கு. ஆனால் இந்த பங்குதான் இனி இந்திய அரசியலை புரட்டிப்போடும் விடயமாக மாறப்போகிறது.

தொடர்ந்து பார்ப்போம்...

No comments:

Post a Comment

Popular Posts