வலபதிவுகளில் சில பின்னூட்டங்களை படிக்கும்போது தானக நமக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த சிரிப்பை அடக்க சிலமணிதுளிகள் பிடிக்கும். அப்படி இன்று அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போது ஒரு வலைபதிவில் படித்த பின்னுட்டம் என்னை மட்டுமல்ல என் உயர் அதிகாரிகள் முதல் சிரிப்பை வரவழைத்து விட்டது.
நம்புங்கள் இவ்வளவு தான் கலைஞரின் சொத்து என்ற ரகீம் கசாலியின் பதிவு தான் அது.
கருணாநிதியின் அறிக்கையை அப்படியே கொடுத்திருந்தார்.
அறிக்கையின் இறுதி வரிகள்
//என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன்//
இதற்கு ஆர்.கே சதீசுகுமார் எழுதிய பின்னூட்டம்
//இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வெச்சிட்டு பக்கத்துலியே உட்கார்ந்துக்கணும்..இவருக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் இதை படிச்சு ஆமா போடுவாங்க..மக்களும் ஆமா போடுவாங்க//
கவுண்டமணி.. செந்தில்...,நகைச்சுவை ஞாபகம் வர வாய்விட்டு சிரித்துவிட்டேன்.
சக நிருபர்கள் உதவி ஆசிரியர்கள் என அனைவரும் என்னை வினோதமாக பார்க்க, அவர்களையும் அழைத்து காண்பித்தேன்.
அப்புறம் என்ன அலுவலகமே ஒரே சிரிப்பலை தான். எப்படியே ஆசிரியரின் கண்டிப்பில் இருந்து காப்பாத்திடுச்சு இந்த பின்னூட்டம். ஏனா அவரும் சிரிச்சிட்டாரே...
சதீஸ் ஒரு பின்னுட்ட புலி தான்.
ReplyDeleteஎப்படியோ நம்ம பதிவுக்குநம்ம நண்பர் நல்லநேரம் சதீஷ் புண்ணியத்துல ஒரு விளம்பரம் கிடைச்சிருச்சு. ரொம்ப நன்றி.
ReplyDelete'நம்புங்கள் இவ்வளவு தான் கலைஞரின் சொத்து' என்று ரஹிம் கஸாலி போட்டிருந்த தலைப்பே எனக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டதுங்க...
ReplyDelete