Dec 23, 2010

தமிழ்மணம் செய்தது சரியா? பதிவர்களே நியாயம் சொல்லுங்கள்

தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் கட்டணசேவை அடிப்படையில் உங்கள் இடுகைகள் காட்டப்படும். இதுகுறித்து புகார்கள் இருந்தால் தமிழ்மணத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்பது தான் மின்னஞ்சலின் சுருக்கம்.

என்ன கொடுமை இது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் என் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் எழுத முடியாததை வலைபதிவில் எழுதுகிறோம். இந்த எழுத்தை வைத்து நாங்கள் ஒன்றும் பணம் சம்பாதிப்பதில்லை. விளம்பரம் செய்துகொள்வதில்லை. தமிழ்மலர் என்ற எனது இணையதளத்துக்கு கூட இணைப்பு கொடுக்கவில்லை.

பதிவர்களிடம் இருந்தே பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற தமிழ்மணத்தின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

உங்கள் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றப்போகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் என எனக்கு முன்அறிவிப்பு செய்திருக்கலாம். அதை செய்யாமல் திடீர் என என் வலைபதிவை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தமிழ்மணத்தின் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. இனிமேல் நான் தமிழ்மணத்தில் இணைக்கபோவதில்லை.

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்.

இனியாவது வேறு யாருக்காவது இதை செய்யும் முன்னர் தயவு செய்து ஒரு முன் அறிவிப்பை கொடுங்கள். அதுதான் பண்பாடு நாகரீகம்.

5 comments:

  1. நண்பரே இதில் தமிழ்மணம் மீது தவறு இல்லை. பதிவர்களுக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்றால் கூட பணம் தேவை இல்லையா. அவர்கள் உங்களுக்கு குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப காரணம் நீங்கள் உங்கள் செய்திதாளின் பெயரில் ப்ளாக் வைத்ததால்தான் என்று நினைக்கிறேன். உங்க செய்திதாளுக்கு இது ஒரு விளம்பரம்தானே. அந்த விளம்பரத்துக்குதான் அவர்கள் பணம் கேட்க்கிறார்கள் என்று கருதுகிறேன். உங்களால் முடிந்தால் பணம் கொடுத்து சேவையை தொடருங்கள் உங்கள் செய்திதாளுக்கு விளம்பரம் கிடைக்கும் அல்லவா. இல்லை உங்கள் கருத்துக்கள் இலவசமாக மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று கருதினால் தனிப்பட்ட முறையில் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதுங்கள். நீங்கள் நிறுவனம் பெயரில் எழுதுவதால்தான் என்று நினைக்கிறேன் .

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த பதிவ படிச்சா சிரிப்புதான் வருது.


    *****************
    என்ன கொடுமை இது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் என் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
    ******************

    அவுங்க முன் அறிவிப்பு கொடுத்ததா நீங்கதான் சொல்லி இருக்கீங்க அப்புறம் அதுக்கு கீழயே முன் அறிவிப்பு கொடுக்கலன்னு சொன்னா என்ன அர்த்தம்.

    -------------
    தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் கட்டணசேவை அடிப்படையில் உங்கள் இடுகைகள் காட்டப்படும். இதுகுறித்து புகார்கள் இருந்தால் தமிழ்மணத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்பது தான் மின்னஞ்சலின் சுருக்கம்.
    --------------


    **************************
    உங்கள் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றப்போகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் என எனக்கு முன்அறிவிப்பு செய்திருக்கலாம். அதை செய்யாமல் திடீர் என என் வலைபதிவை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
    *************************


    நீங்க என்னமோ தமிழ்மணம் ஒன் ஆப் தி பார்ட்னர் ரேஞ்சுக்கு கேள்வி கேக்குறிங்க அது அவுங்க தளம் ஐயா, அவுங்க எதுக்கு உங்ககிட்ட கருத்து கேட்கனும்.

    நீங்க முதல்ல ஒட்டு பட்டை இணைக்காமல் இருந்ததே தப்பு. நீங்க அவுங்களுக்கு லிங்க் கொடுத்தாதானே அவுங்க உங்களுக்கு லிங்க் கொடுக்க.

    ReplyDelete
  3. திரு பெயரிலி.

    ஒரு சேவையை பயன்பாட்டாளருக்கு அந்த நிறுத்தப்படும்போது முன் அறிவிப்பு தரவேண்டும். ஏன் நிறுத்தினீர்கள் என்று கேட்க பயன்பாட்டாளருக்கும் உரிமை உள்ளது.

    ஓட்டுபட்டை வேலை செய்வது இல்லை, சில திரட்டிகளின் இணைப்பு படங்கள் சரியாக தெரிவதில்லை. அதனால் தான் இணைக்கவில்லை.

    மற்றபடி திரட்டிகளின் இணைப்பை வலைபதிவில் சேர்ப்பது கடமை என்பது எனக்கு தெரியாமல் இல்லை.

    ReplyDelete
  4. //ஒரு சேவையை பயன்பாட்டாளருக்கு அந்த நிறுத்தப்படும்போது முன் அறிவிப்பு தரவேண்டும். ஏன் நிறுத்தினீர்கள் என்று கேட்க பயன்பாட்டாளருக்கும் உரிமை உள்ளது.
    //

    You misunderstood. Please know the history of Tamilmanam before you shout from the roof-top.

    a. Tamilmanam is run by a not-for-profit organization. They spend money from their pocket to meet the expenses of running the site. Tamilmanam was started by Kasilingam Arumugam as a personal interest site and later he could not bear the expenses. When he contemplated shutting down the site, 3-4 volunteers from US formed a not-for-profit organization and spend their own money to procure and run Tamilmanam site.

    b. Only where there is money paid for a service, you have right as a consumer to question the lack of service.

    Tamilmanam is has not charged a single penny from you so far. You never been a customer to Tamilmanam in the first place which means you don't have a right to question their service.

    That being said, you can certainly voice your concern to them but not in the tone of a consumer. For all your fiery, why don't you canvass and get some ads for them.

    ReplyDelete
  5. நான்கு நண்பர்கள் இணைந்து சொந்த நிதியில் தமிழ்மணம் சேவையை தருவதை மனமார பாரட்ட வேண்டும். இதற்கு நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் செய்யும் அநாகரீகத்தை தட்டி கேட்காமல் இருக்க முடியாது.

    ReplyDelete

Popular Posts