ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.செ.தாமசை நியமித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து தனது பதவியை ராசினாமா செய்துள்ளார் தாமசு.
1992-96ல் கேரள உணவு துறை செயலாளராக இருந்தார் தாமசு. அப்போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ரூ.2.8 கோடி ஊழல் புகார் எழுந்தது. இது குறித்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சோனியாவின் விருப்பத்தின் பேரில் சிறப்பு விதிமுறை மூலம் தாமசு மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டார். மத்திய தொலை தொடர்பு செயலாளராக பதவிவகித்தார். இவரது பதவி காலத்தில் தான் அலைகற்றை ஊழலும் இறுதி வடிவத்தை அடைந்தது. பின்னர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பல ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஒருவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் சோனியாவின் அதீத விருப்பத்தின் பேரில் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தாமசையே நியமித்தனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல கண்டனங்கள் வந்தும் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என சற்றிதிரிந்தார் தாமசு. இதற்கு சோனியாவின் முழு ஆசியும் இருந்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாமசு பதவி விலகியதை தொடர்ந்து சோனியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. சோனியாவின் சர்வதேச தொழில் மற்றும் பல குடும்ப ரகசியங்கள் அறிந்துவைத்திருப்பவர் தாமசு.இதுகுறித்த விபரங்களை ஏற்கனவே தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்? இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
சுட்டி : தாமசை கண்டு சோனியா பயப்படுவது ஏன்?
No comments:
Post a Comment