Mar 13, 2011

தேமுதிக, காங்கிரசு ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சிகள்


தேர்தல் நெருங்க நெருங்க கருத்துக்கணிப்புகளும் துள்ளியத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. பத்திரிக்கையாளர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், பொதுநல அமைப்புகள் உதவியுடன் உளவுத்துறை எடுக்கும் கருத்துக்கணிப்பு ஓரளவு துள்ளியமாக இருக்கும். ஆனால் இவை வெளியிடப்படுவதில்லை. 

தினமும் புதிப்பிக்கப்படும் உளவுத்துறை கருத்துக்கணிப்பில் சமீபத்திய முடிவு திமுக அதிமுக கட்சிகளை கலங்க வைத்துள்ளது.

ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சிகளாக காங்கிரசு மற்றும் தேமுதிக கட்சிகள் பலம் பெற்றிருப்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

காங்கிரசு மற்றும் தேமுதிக கட்சிகள் குறைந்தது தலா 25 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. பாமகவும் கனிசமான தொகுதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தேமுதிக 28
காங்கிரசு 25
பாமக 12
இதரம் 7
என மொத்தம் 72 தொகுதிகள் அதிமுக திமுக கட்சிகளை விட்டு பிரிந்து செல்கிறது.

அதிமுக 90
திமுக 72

தொகுதிகள் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசு அல்லது தேமுதிக தயவு இல்லாமல் அடுத்த ஆட்சி அமைய வாய்ப்பில்லை என அடித்துச்சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment

Popular Posts