Mar 24, 2011

வேட்பாளராய் ஒரு வலைபதிவர். கண்டுபிடியுங்கள்


பலதரப்பட்ட நட்பு வட்டங்கள் இருந்தாலும் பள்ளிபருவத்தில் வரும் கையெழுத்து பிரதி நட்புவட்டத்திற்கு என தனி ஈர்ப்பு இருக்கும். அந்த இடத்தை இன்றைய வலைபதிவுலகம் பெற்றுள்ளது. எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் வலைபதிவர்களுக்குள் நாம் என்ற ஒரு தனி அடையாளம் வந்துவிடுகிறது.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலதரப்பட்ட வலைபதிவர்கள் நம்மில் அன்றாடம் மின்னலையாய் வந்து செல்கின்றனர்.

அந்த வரிசையில் நம்முடன் அன்றாடம் உறவாடிய ஒரு மதிப்புமிக்கவர் வேட்பாளராய் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

அவரை வரவேற்போம், அவரது வேட்பாளர் நிலை வேறு காரணங்களுக்கானதாக இருந்தாலும் அது வலைபதிவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை தரட்டும்.

அவரது வேட்பாளர் அனுபவம் அடுத்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு பல வலைபதிவர்களை தாயார்படுத்தும் ஒரு படிக்கல்லாய் அமையட்டும்.

வலைபதிவு என்பது ஒரு மக்கள் ஊடகம். இந்த மக்கள் ஊடகத்தில் வாக்காளர்கள் மட்டுமல்ல வேட்பாளர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளட்டும்.

பல பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு வலைபதிவு என்றால் என்ன என்பதே தெரியாது. அரசியல்வாதிகள் இங்கு விமர்சிக்கப்படுகிறார்கள் என்பது கூட தெரியாது. வலைபதிவில் மக்கள் பகிரங்கமாக கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தியாவது ஆட்சியாளர்களை சென்றடைய வேண்டும். அதற்கான அடித்தளமாய் நம்முடன் உள்ள வலைபதிவரின் வேட்பாளர் பிரவேசம் அமையட்டும். 

நல்ல மாற்றத்திற்கு ஆசைப்படுவோம்.

நம்ம வேட்பாளர் யார்? கண்டுபிடியுங்கள்..... 

No comments:

Post a Comment

Popular Posts