Mar 8, 2011

சோனியா காலில் விழுந்து திமுக உடன்பாடு


திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விரும்பும் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து திமுக அணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி அமையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. 

உடன்பிறப்புகள் இனி தயவு செய்து தன்மானத்தை பற்றி பேசாமல் இருப்பது நல்லது என்கின்றனர் பொதுமக்கள். காங்கிரசை அழிக்க உதயமான திமுக கட்சி இன்று காங்கிரசின் அடிமையாகியுள்ளது வேதனை.

செயலலிதா காலில் விழும் அதிமுகவினரை கிண்டலடிக்கும் உடன்பிறப்புகள் சோனியா காலில் தலைமை உட்பட அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாக விழுந்ததை எப்படி மறைக்கப்போகிறார்களோ?

63 தொகுதிகள் கேட்பது நியாயமா என்று கேட்ட கருணாநிதி இப்போது சோனியாவின் காலில் விழுந்து 63 தொகுதிகளை எந்த நியாயத்தில் கொடுத்தார் என்பதை உடன்பிறப்புகள் விளக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts