Mar 4, 2011

அழகிரி அதிரடி பேட்டி. அதிமுகவில் ஆட்டம்

அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டது. பன்ருட்டியார் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தேமுதிக 50 தொகுதிகள் வரை கேட்கிறது. அதிமுக 35 தொகுதிகள் வரை தர தயாராக இருக்கிறது. ஏற்றி இறக்கி 41ல் இறுதி முடிவு எட்டலாம் என்றே அதிமுக கூட்டணியினர் நம்பி வருகின்றனர். ஆனால் செயலலிதா விசயகாந்த் சந்திப்பு நடக்காதவரை எதுவும் உறுதியில்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் திமுக தென்மாவட்ட செயலாளர் மு.க அழகிரி இன்று அதிரடி பேட்டி அளித்துள்ளார். விசயகாந்த் ரோசக்காரர், தன்மானம் மிக்கவர், எனது நண்பர், அதிமுக கூட்டணியில் சேரமாட்டார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார்.

அழகரியின் இந்த பேட்டி தமிழக அரசியலில் நிலவவும் பெரும் குழப்பத்திற்கு வலுசேர்த்துள்ளது. தேமுதிக -காங்கிரசு கூட்டணிக்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தர தயாராக இருக்கும் 50 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்பது அழகிரி தரப்பு வாதம். இதனால் கருணாநிதிக்கு அடுத்தபடியாக முதல்வராகும் வாய்ப்பு தனக்கு உள்ளதாக அழகிரி கருதுகிறார். ஆனால் இதை சுடாலின் மற்றும் கருணாநிதி விரும்பவில்லை. 

காங்கிரசை கழட்டி விட்டால் அடுத்த அதிரடியாக கனிமொழி கைதாகியிருப்பார். காங்கிரசின் கடைசி ஆயுதம் கனிமொழி&ராசத்தியம்மாள் தான். இந்த ஆயுதத்தை எதிர்கொள்ள கருணாநிதி தயாரில்லை என்பது காங்கிரசின் கணிப்பு.

திமுக-தேமுதிக-பாமக-விசி-கொமுக மகத்தான வெற்றிபெரும் என அடித்து சொல்கிறது அழகிரி தரப்பு. மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக விலகும் பட்சத்தில் காங்கிரசு அங்கு ஒட்டிக்கொள்ளும். இதனால் கொள்கை ரீதியாக வைகோ, கம்யூனிசுட்டுகள் மூன்றாம் அணியாக செயல்பட வாய்ப்பு உள்ளது. அரசுக்கு எதிரான வாக்குகள் மூன்றாம் அணிக்கு செல்லும் என்பதும் அழகிரி தரப்பு வாதம்.

ஆனால் திமுக கூட்டணிக்கு செல்ல விசயகாந் விரும்பவில்லை. காங்கிரசுடன் கூட்டணி அல்லது அதிமுக என்ற நிலையில் தான் விசயகாந்த் உறுதியாக உள்ளார்.

அழகிரியின் பேட்டி அதிமுக கூட்டணியில் விசயகாந்துக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க ஒரு தூண்டுகோலாக இருக்குமே தவிர திமுக-தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

காங்கிரசுடன் சேர்ந்துவிடுவோம் என்ற மிரட்டலில் தேமுதிக அதிமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்கிறது. விசயகாந்துடன் சேர்ந்துவிடுவோம் என்று காங்கிரசு திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்கிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தை முடித்துவைப்பது யாரோ? 



தற்போதைய செய்தி(4/3/2011- இரவு 9.05)


தற்போது செயலலிதாவின் இல்லமான போயசு தோட்டத்தில் விசயகாந்த் செயலலிதா சந்திப்பு நடக்கிறது. இதில் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர்.



தேமுதிகவுக்கு 41 தொகுதி-செயலலிதா அறிவிப்பு


No comments:

Post a Comment

Popular Posts