Mar 13, 2011

வைகோ,விசயகாந்த்,சுடாலின்,அழகிரி அடுத்த முதல்வர்?

அண்ணா, கருணாநிதி, எம்.சி.ஆர், செயலலிதா வரிசையில் தமிழர்களுக்காக சிம்ம குரல் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல்வாதி வைகோவாக தான் இருக்க முடியும்.

கருணாநிதிக்கு பின்னர் வரும் சுடாலின், அழகிரி இன்னபிற திமுக தலைவர்களால் டெல்லியை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

விசயகாந்திடன் தெளிவான பேச்சு தென்படுவதில்லை. அதேபோல சட்டம்நுணுக்கம், மொழி, தொடர்பியல் அறிவு போன்றவையும் விசயகாந்திடம் குறைவாகவே உள்ளது.

செயலலிதாவுக்கு இணையான ஒரு அரசியல்வாதியை தேடினால் இப்போது உள்ளவர்களில் வைகோவுக்கு தான் அந்த தகுதி அதிகமாக உள்ளது.

சுடாலின், அழகிரி போன்றவர்களால் அடிதடி ரவுடி அரசியல் நடத்த முடியுமே தவிர அறிவுசார்ந்த வாதவிவாதங்களை வைக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

விசயகாந்தின் மதுவிருப்பம் அவரது மதிப்பை என்றோ கெடுத்துவிட்டது. மதுஇல்லாமல் விசயகாந்தால் இருக்க முடியாது. அதுவும் அளவுக்கு அதிகமாக உளரும் விசயகாந்த் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதி அற்றவரே.

தங்கபாலு, சிதம்பரம், வாசன் உட்பட காங்கிரசு தலைவர்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்லிதெரியவேண்டியதில்லை. அவர்களுக்கு பதில் சோனியாவே நேரடியாக தமிழகத்தை ஆட்சி செய்துவிடலாம்.

ராமதாசு, திருமாவளவன் போன்றவர்களால் அவர்கள் சாதியை விட்டு வெளியே வரமுடியாது.

செயலலிதாவுக்கு எதிர்திசையில் அமரும் தகுதி வைகோவுக்கு நிரம்பவே உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது தமிழருக்கு இழப்பே...

No comments:

Post a Comment

Popular Posts